இந்தியர்கள் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,44,000 என்ற உச்சபட்ச விலையை தொட்ட போதும் தொடர்ந்து வாங்கி வந்தனர். இதற்கு காரணம் தங்கத்தை தேவைப்படும் நேரங்களில் விற்று கூட பணமாக்கலாம் அல்லது அடகு வைக்கலாம். ஆனால் பிற சேமிப்புத் திட்டங்களில் இப்படி எதுவுமே செய்ய முடியாது.
முன்பெல்லாம் அவசர மருத்துவ செலவுகள் மற்றும் எதிர்பாராத நிதி நெருக்கடியின் போது தங்க நகைகளை அடகு வைத்து மக்கள் பணம் திரட்டினர். ஆனால் இன்று சிறு தொழில் தொடங்குவது முதல் தங்களுடைய சின்ன சின்ன தேவைகளைப் பூர்த்தி செய்வது வரை எல்லாவற்றுக்கும் தங்க நகைக் கடன் பெற்று வருகின்றனர்.

CRIF கிரெடிட் இன்ஃபர்மேஷன் சர்வீசஸ் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில் 2026-ஆம் ஆண்டின் செப்டம்பர் மாத நிலவரப்படி இந்தியாவின் மொத்த தங்க நகைக் கடன் மதிப்பு ரூ.23.3 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. அதாவது ஒவ்வொரு ஆண்டும் தங்க நகை கடனின் மதிப்பு 60.6 சதவீதம் வரை அதிகரித்து வருகிறது.
நாட்டின் ஒட்டுமொத்த கடன்களில் நகைக் கடனின் பங்கு கடந்த ஓராண்டில் 3.3 சதவீதம் வரை அதிகரித்து 12.6 சதவீதத்தை எட்டியுள்ளது. அதேபோல தற்போது பேங்க் மற்றும் இதர நகைக்கடைகளில் வைக்கப்பட்ட தங்க நகை கடனின் மதிப்பும் 14 சதவீதம் அதிகரித்து ரூ.10.2 கோடியை எட்டியுள்ளது.
2027-ம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் சராசரி தங்க நகை கடனின் மதிப்பு 32.7 சதவீதம் அதிகரித்து ரூ.2.2 லட்சமாக உயர்ந்துள்ளது. சராசரியாக மக்கள் ரூ.2 லட்சம் வரை தங்கத்தை வைத்து கடன் பெற்று வருகின்றனர்.
தங்க நகை கடன் குறிப்பாக தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், கர்நாடகா, தெலுங்கானா மற்றும் கேரளா போன்ற தென் மாநிலங்களில் அதிக அளவில் பெறப்பட்டுள்ளது. இந்த மாநிலங்களில் வசிக்கும் மக்கள் 72 சதவீதம் நகை கடன் பெற்றுள்ளனர். இந்தியாவின் பிற பகுதிகளிலும் தங்க நகை கடன் பெறுபவர்களின் எண்ணிக்கை 96.4 சதவீதமாக பதிவாகியுள்ளது.
இதிலிருந்து ஒன்று மட்டும் தெளிவாகிறது. தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா முழுவதிலும் மக்கள் அதிக அளவில் தங்க கடன் பெற்றுள்ளனர். ஆனால் தற்போது தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. இன்றைய தினம் கிராமுக்கு 110 ரூபாய் அதிகரித்து இருந்தாலும், இதற்கு முன்னர் விற்பனை செய்யப்பட்ட ரூ.18,000 தற்போது ஒரு கிராம் ரூ.11,540-ஐ நெருங்கியுள்ளது.
எப்போதுமே தங்கத்தின் மதிப்பில் 70 சதவீதம் வரை மட்டுமே கடனாக பெற முடியும். இதைத்தான் லோன் டு வேல்யூ ரேஷியோ என்று கூறுவார்கள். தங்கத்தின் விலை அதிகரித்தால் பிரச்சனை இல்லை. ஆனால் தொடர்ந்து குறைந்து வந்தால் வங்கிகள் உங்களிடம் நகையை மீட்க சொல்லி கேட்கலாம்.நகை கடன் பெற்ற பலருக்கு தற்போது நோட்டீஸ் வரத் தொடங்கியுள்ளது.


Click it and Unblock the Notifications
