ரூ.81,000 கோடிக்கு தங்கம் வாங்கிய இந்தியர்கள்: ஆனா ஒரு டிவிஸ்ட்.. சீனாவுக்கே டஃப் கொடுத்த இந்தியா..!

காலம் காலமாக தங்கத்தை நகையாகவே வாங்கி வந்த இந்தியர்கள் அதில் இருந்து மாறியுள்ளனர். அண்மையில் உலக தங்க கவுன்சில் வெளியிட்ட அறிக்கையில் சில சுவாரஸ்யமான தகவல்கள் வெளிவந்துள்ளன.

நடப்பாண்டு செப்டம்பர் காலாண்டில் , இந்தியாவில் தங்கத்தின் தேவை, அளவில் 40 சதவீதம் வரை சரிவு ஏற்பட்டிருந்தாலும் அதிகமான இந்தியர்கள் கடைகளுக்கு சென்று தங்கம் வாங்கியுள்ளனர். வழக்கம் போல தங்கத்தை நகையாக வாங்காமல் தங்கம் கட்டிகள் மற்றும் நாணயங்கள் வடிவில் அதிக தங்கத்தை வாங்கியுள்ளனர். இந்த காலாண்டில் மட்டும் தங்க கட்டி மற்றும் நாணயங்கள் 81,890 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளன.

ரூ.81,000 கோடிக்கு தங்கம் வாங்கிய இந்தியர்கள்: ஆனா ஒரு டிவிஸ்ட்.. சீனாவுக்கே டஃப் கொடுத்த இந்தியா..!

உலக அளவில் தங்கம் வாங்குவதில் சீனா முதலிடத்தையும், இந்தியா இரண்டாவது இடத்தையும் தக்கவைத்து கொண்டுள்ளன. அதிலும் இந்த முறை தங்க கட்டிகள் மற்றும் நாணயங்களை தான் இரண்டு நாட்டு மக்களுமே போட்டி போட்டு வாங்கியுள்ளனர். சர்வதேச அளவில் தங்க கட்டிகள் மற்றும் நாணய தேவையில் இந்தியா மட்டும் சுமார் 21 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளது.

Also Read

செப்டம்பர் காலாண்டு நிலவரப்படி, சீனாவின் தங்கம் தேவை சுமார் 80 டன்னாக இருந்தது, அதே சமயம் இந்தியாவின் தேவை 55 டன்னாக பதிவானது. ஆனால் காலாண்டு வாரியான போக்கில் வித்தியாசங்கள் உள்ளன என உலக தங்க கவுன்சில் அறிக்கை குறிப்பிடுகிறது. முந்தைய காலாண்டுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் தங்கம் தேவை 9 சதவீதம் அதிகரித்துள்ளது, ஆனால் சீனாவின் கொள்முதல் குறைந்துள்ளது என கூறியுள்ளது.

Recommended For You

தங்கத்தை நகையாக வாங்கும் போது செய்கூலி, சேதாரம் என கூடுதல் தொகை செலுத்துகிறோம், ஆனால் நகையை மறுவிற்பனை செய்யும் போது நகை கடைகள் வெறும் தங்கத்திற்கான பணத்தையே தருகின்றன, எனவே நாம் செலுத்திய செய்கூலி , சேதாரம் என்பது நமக்கு நஷ்டம் தான். இதுவே தங்க நாணயம் , கட்டிகள் என்றால் ஜிஎஸ்டி மட்டும் தான், அப்படியே செய்கூலி , சேதாரம் இருந்தாலும் நகை அளவுக்கு இருக்காது. எனவே நாம் கொடுக்கும் பெரும்பான்மையான பணம் தங்கமாகவே நமக்கு கிடைக்கிறது. இதனால் தான் அதிகமான இந்தியர்கள் தங்க நகைக்கு மாற்றாக நாணயம், கட்டிகளை வாங்குகின்றனர் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

தங்கம் வெறும் அணியும் பொருளாக மட்டுமில்லாமல் முதலீட்டு நோக்கத்தில் பயன்படுத்தப்படும் ஒரு பொருளாகவும் மாறி இருப்பது இதற்கு மற்றொரு காரணம். தங்க கட்டிகளை, நாணயங்களை பின்னாளில் கடைகளில் கொடுத்து நாம் நகையாக மாற்றி கொள்ளலாம். நமது பிள்ளைகளுக்கு என்றால் இப்போது நாம் வாங்கும் டிசைன் பிடிக்காமல் போகலாம் எனவே தங்க நகை, கட்டி என்றால் அந்த சமயத்தில் கொடுத்து அவர்கள் பிடித்த டிசைனில் நகையாக வாங்கி கொள்ளலாம் என பல சாதகங்கள் இருக்கின்றன.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+