2024ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் தங்கம் இறக்குமதி மீதான சுங்க வரியைக் குறைப்பதாக அறிவித்ததன் மூலம், தங்க விலை ஐந்து சதவிகிதத்திற்கும் அதிகமாகச் சரிந்தது அனைவருக்கும் நினைவிருக்கும். இந்த விலை சரிவால் புதிதாக தங்கம் வாங்குவோர் வேண்டுமானால் நன்மை அடைந்திருக்கலாம், இந்த ஒரு அறிவிப்பால் பட்ஜெட் நாளில் மட்டும் 10.7 லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்பை இந்திய மக்கள் இழந்துள்ளனர்.
இந்தியப் பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட சரிவுடன் ஒப்பிடும்போது, 10.7 லட்சம் கோடி ரூபாய் இழப்பு என்பது இதுவரை பதிவு செய்யப்பட்ட சரிவுகளில் ஆறாவது பெரிய இழப்பாகும்.

இன்னும் முக்கியமாகச் சொல்ல வேண்டும் என்றால், பங்குகளில் ஏற்பட்ட சரிவு என்பது ஒரு குறிப்பிட்ட அளவிலான மக்கள் தொகையை மட்டுமே பெரிய அளவில் பாதிப்பு அடைய செய்திருக்கும். ஆனால் தங்கத்தில் ஏற்பட்ட இந்த சரிவு நாட்டின் பெரும் பகுதி மக்களைக் கடுமையாகப் பாதிப்படையச் செய்துள்ளது. ஏனெனில் தங்கம் வைத்திருக்கும் குடும்பங்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம்.
தற்போது, இந்திய குடும்பங்கள் உலகின் மொத்த தங்க இருப்பில் சுமார் 11 சதவீதத்தை வைத்துள்ளன. இது அமெரிக்கா, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து ஆகிய பெரிய வளர்ந்த நாடுகளை விட அதிகம். சரி எப்படி நிர்மலா சீதாராமன் அறிவிப்பால் 10.7 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது..?
ஜூலை 22 ஆம் தேதி 1 கிராம் தங்கம் விலை 7,287.5 ரூபாய், பட்ஜெட் அறிவிப்புக்கு பின்பு தங்கம் விலை 6,9269 ரூபாயாக குறைந்தது. இப்படியிருக்கும் வேளையில் உலகின் மொத்த தங்க இருப்பில் சுமார் 11 சதவீதத்தை இந்திய குடும்பங்கள் வைத்துள்ளது என்றால் தோராயமாக 30,000 டன் தங்கம் என மதிப்பிட்டுக்கொள்ளலாம்.
இதன் அடிப்படையில் 30000 தங்கம் ஜூலை 22 ஆம் தேதி 218.63 லட்சம் கோடி ரூபாய், இது ஜூலை 23 ஆம் தேதி அதாவது பட்ஜெட் அறிவிப்புக்கு பின்பு 207.89 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இதன் மூலம் இந்திய மக்கள் வைத்திருக்கும் தங்கத்தின் மொத்த சொத்து மதிப்பு ஒரே நாளில் 10.74 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது.
தங்கத்தின் 2024 செயல்பாடு: ஆண்டு தொடக்கத்திலிருந்து, தங்க விலை 14.7 சதவிகிதம் உயர்ந்து, சென்செக்ஸை விட அதிகமாக அதிகரித்தது. சென்செக்ஸ் அதே நேரத்தில் சுமார் 11 சதவிகிதம் உயர்ந்துள்ளது. ஜூலை மாதம் வரை, எம்சிஎக்ஸ் சந்தையில் தங்கம் கிட்டத்தட்ட 5.2 சதவிகிதம் வீழ்ச்சியடைந்துள்ளது.
தங்கம் குறித்து பட்ஜெட் அறிவிப்பு: ஜூலை 23 ஆம் தேதி பட்ஜெட் தாக்கலில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினம் மீதான அடிப்படை சுங்க வரி 6% ஆகக் குறைக்கப்படும் என்று அறிவித்தார். முன்னதாக, தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்க வரி 15% ஆக இருந்தது.
இந்த15 சதவீத வரியில் 10% அடிப்படை சுங்க வரியும், 5% வேளாண்மை உட்கட்டமைப்பு மேம்பாட்டு வரி (Agricultural Infrastructure Development Cess) அடங்கும். புதிய பட்ஜெட் அறிவிப்பின்படி, தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதியில் 5% அடிப்படை சுங்க வரியும், 1% வேளாண்மை உட்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு வரி (AIDC) விதிக்கப்படுகிறது. இதன் காரணமாக, மொத்த இறக்குமதி வரி 6% ஆகக் குறைந்துள்ளது.
இது யாரை எவ்வாறு பாதிக்கிறது?: மத்திய அரசின் இந்த வரி குறைப்பால் மக்கள் மகிழ்ச்சி அடைந்திருந்தாலும், தங்க வியாபாரிகள் மகிழ்ச்சியடையவில்லை. ஆனால் மக்கள் மத்தியில் அதிகமான டிமாண்ட் இருக்கும் காரணத்தால் தங்க நகை கடைக்காரர்கள் தங்கத்தை கூடுதல் செய்கூலி, சேதாரத்துடன் விற்று லாபம் பார்த்து வருகின்றனர்.
இதேபோல் தங்க கடன் கொடுக்கும் நிறுவனங்களும் மதிப்பீடு அடிப்படையிலான பாதிப்பை எதிர்கொண்டு உள்ளனர்.
More From GoodReturns

துபாயில் பொட்டி பொட்டியாக தேக்கமடைந்த தங்கம்!! இந்தியாவுக்கு கொண்டு வர முடியாமல் தவிக்கும் டீலர்கள்!!

உச்சத்தில் இருந்து ரூ.18,000 வீழ்ச்சி கண்ட தங்கம்! இதுவாங்க சரியான நேரமா?

இறங்கிய வேகத்திலேயே ஏறும் தங்கம் விலை!! சாமானிய மக்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி!!

சூப்பர்பவர் ஆக மாறிய தங்கம்.. ஈரான் போருக்கு மத்தியில் பூகம்பம்..!!

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே..! தங்கம் வாங்க பொன்னான வாய்ப்பு!

கோயம்புத்தூர் தங்கம் விலை: இன்று அதிரடி சரிவு! மார்ச் 6 நிலவரம், முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியவை

தங்க குழந்தையாக மாறிய சஞ்சு சாம்சன் – இது தான் 'கன்வெக்ஸ்' வெற்றியா? காத்திருந்து கிடைத்த பெரும் லாபம்!

தங்கம்,வெள்ளி விலையில் புது டிவிஸ்ட்!! போர் பதற்றத்துக்கு மத்தியில் தடாலடியாக குறைந்த விலை!!

தங்கம் விலை மதுரை: இன்று அதிரடி உயர்வு! நகைப்பிரியர்களுக்கு பெரும் அதிர்ச்சி அளித்த சர்வதேச காரணங்கள்..!

வெனிசுலாவில் கிடைத்த தங்க புதையல்!! 1000 கிலோ தங்கம்னா சும்மாவா!! நினைத்ததை சாதித்த டிரம்ப்!!

வெள்ளி விலை: கிணற்றில் போட்ட கல் போல நிற்கிறது..!! முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்..?



Click it and Unblock the Notifications