இந்தியாவில் டிஜிட்டல் தங்கம் விற்பனை 2025இல் பெரிய உயர்வை கண்டுள்ளது. ஜனவரி முதல் நவம்பர் வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் இந்திய மக்கள் சுமார் 12 டன் தங்கத்தை வாங்கியிருப்பதாக உலக தங்க கவுன்சில் (WGC) தெரிவித்துள்ளது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த டிஜிட்டல் தங்கத்தை தான் மக்கள் வாங்குவதில் செபி எச்சரித்தது.
இளைஞர்கள், முதல் முறை முதலீட்டாளர்கள் மத்தியில் டிஜிட்டல் தங்கம் மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்துள்ளது. டிஜிட்டல் தங்கம் என்பது ஆன்லைன் வாயிலாக ஒருவர் தங்கத்தை வாங்கலாம், விற்கலாம், இதேபோல் சேமித்து வைத்திருக்கலாம், இந்த முதலீட்டை ரூ.1 முதல் தொடங்கலாம் என்பது மற்றொரு சிறப்பு.

இதில் பெரும்பாலான முதலீட்டாளர்கள் தங்கத்தை உலோகமாக கைகளில் வாங்குவது கிடையாது, அனைத்தும் டிஜிட்டல் முறையில் நிர்வாகம் செய்யப்படும், சில தளங்கள் தங்கத்தை உலோகமாக டெலிவரியையும் செய்கிறது. ஆனால் இந்த செயல்முறையில் ரிஸ்க் இருப்பதாக செபி எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலக தங்க கவுன்சில் அமைப்பு NPCI அமைப்பின் UPI பரிவர்த்தனை தரவு அடிப்படையில் இந்திய மக்கள் எவ்வளவு தங்கத்தை வாங்கியுள்ளனர் என்பதை கணக்கிட்டு உள்ளது. பின்டெர் தளங்கல், பேமெண்ட் தளங்கள் வழங்கும் டிஜிட்டல் தங்கம் முதலீட்டு திட்டத்தில் 100க்கு 99 பேர் யூபிஐ பேமெண்ட் வாயிலாக தான் வாங்குகின்றனர், வெகு சிலரே கிரெடிட் கார்டு, டெபிட் கார்ட் மூலம் வாங்குகின்றனர்.
இதன் அடிப்படையில் உலக தங்க கவுன்சில் அமைப்பு இந்த ஆண்டு முதல் முறையாக டிஜிட்டல் தங்க விற்பனை தரவுகளை வெளியிட்டு உள்ளது. மும்பை ஸ்பாட் விலைப்படி இந்திய மக்கள் ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் சுமார் 12 டன் 24 கேரட் தங்கத்தை வாங்கியுள்ளதாக கணக்கிட்டு உள்ளது. அதாவது யூபிஐ மூலம் டிஜிட்டல் தங்கத்திற்காக மக்கள் செலவிடப்பட்ட தொகை ரூ.16,670 கோடியாகும். 2024இல் 8 டன் வாங்கப்பட்ட நிலையில் 2025ல் 12 டன் தங்கம் வாங்கப்பட்டு உள்ளது.
செபி கடந்த மாதம் டிஜிட்டல் தங்கம் வர்த்தகம் ஒரு unregulated சந்தை என்று எச்சரித்தது, இந்த எச்சரிக்கை மூலம் பல முதலீட்டாளர்களை இதில் கவனத்துடன் செயல்பட தூண்டியது. இதனால் கடந்த 2 மாதத்தில் டிஜிட்டல் தங்கம் விற்பனை சிறிய அளவில் தடுமாற்றம் அடைந்துள்ளது என தெரிவித்துள்ளது.
இதேவேளையில் இத்துறையில் இருக்கும் நிறுவனங்கள், தொழிற்துறை நிபுணர்கள் செபி இதற்கு பாதுகாப்பான வர்த்தகத்தை தொடர ஒரு ப்ரேம்வொர்க் உருவாக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். டிஜிட்டல் தங்கம் வெளிப்படையான முதலீட்டு திட்டமாக உருவெடுக்க செபியின் ப்ரேம்வொர்க் முதல் படியாக இருக்கும்.


Click it and Unblock the Notifications