பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் நோக்கில், 2021ம் ஆண்டில் மத்திய அரசு தேசிய சொத்து மறுசீரமைப்பு நிறுவனம் என்ற வாராக் கடன் வங்கியை (பேட் பேங்க்) தொடங்கியது. ஆனால் அதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே மத்திய அரசு ஒரு வாராக் கடன் வங்கியை அறக்கட்டளை போல் தொடங்கிய விஷயம் பலருக்கு தெரிந்து இருக்காது.
சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னால் ஐ.டி.பி.ஐ. வங்கியின் நிதிநிலையை மேம்பட்ட நிலையில் வைத்திருக்கும் நோக்கில், அதன் வாராக் கடன்களை அந்த வங்கியிலிருந்து பிரித்து வேறு ஒரு தனி நிறுவனத்தில் வைக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக மத்திய அரசால் 2004 செப்டம்பரில் தொடங்கப்பட்டது தான் Stressed asset stabilization fund (SASF)என்ற டிரஸ்ட் அமைப்பு.

இந்த அறக்கட்டளை செயல்படும் காலம் 20 ஆண்டுகளாகும். ஐ.டி.பி.ஐ. வங்கியில் இருந்து மொத்தம் ரூ.9 ஆயிரம் கோடி மதிப்பிலான 636 வாராக் கடன்களை SASF அறக்கட்டளைக்கு மாற்றியது. அறக்கட்டளை ரூ.6 ஆயிரம் கோடியை அதாவது மொத்த வாராக்கடனில் மூன்றில் இரண்டு பங்கை மீட்டெடுத்தது.
2004ல் ஒரு சிக்கலான கட்டமைப்பில் இந்த அறக்கட்டளை உருவாக்கப்பட்டது. அதன்படி, மத்திய அரசு, SASF அறக்கட்டளைக்கு ரூ.9 ஆயிரம் கோடி கடன் வழங்கும், அறக்கட்டளை மத்திய அரசிடம் அதே மதிப்புக்கு 20 ஆண்டுகால வட்டியில்லாத கடன் பத்திரங்களை வாங்கும்.
பின்பு SASF அறக்கட்டளை ஐ.டி.பி.ஐ. வங்கியின் வாராக் கடன் சொத்துக்களை தனக்கு மாற்றுவதற்காக பத்திரங்களை அதற்கு ஒதுக்கும். ஐ.டி.பி.ஐ. வங்கி இந்த பத்திரங்களை 2024ல் அதன் முதிர்வு காலம் வரை வைத்திருக்கும். SASF அறக்கட்டளை வாராக் கடன்களை மீட்டெடுத்து மத்திய அரசின் வாங்கிய கடனை திரும்ப செலுத்த வேண்டும்.
SASF அறக்கட்டளையின் செயல்படும் காலம் விரைவில் முடிவுக்கு வர உள்ளது. இந்த அறக்கட்டளை தொடங்கப்பட்ட போது, ஐ.டி.பி.ஐ. வங்கியில் இருந்து மொத்தம் ரூ.9 ஆயிரம் கோடி மதிப்பிலான 636 வாராக் கடன்கள் மாற்றப்பட்டது. அறக்கட்டளை தற்போது வரை ரூ.6 ஆயிரம் கோடியை அதாவது மொத்த வாராக்கடனில் மூன்றில் இரண்டு பங்கை மீட்டெடுத்தது. தற்போது அறக்கட்டளையில் மீட்கப்படாமல் தொடர்ந்து வாராக் கடன்களாக உள்ள 400க்கும் மேற்பட்ட கணக்குகளை கணக்கிடுவதற்கான செயல்முறை தொடங்கப்பட்டுள்ளது.
SASF அறக்கட்டளையை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில், மதிப்பீடு பணிகள் முடிந்தவுடன் அந்த வாராக் கடன்கள் விற்பனை செய்யப்படும் என தகவல்.. இந்த வாராக்கடன்களை கடன் மறுசீரமைப்பு நிறுவனங்கள் மற்றும் நிதிகள் வாங்க ஆர்வம் காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications