தங்கம் மற்றும் வெள்ளி விலை தான் கடந்த ஓராண்டு காலமாகவே பேசு பொருளாக இருக்கிறது. ஏனெனில் இந்த இரண்டு உலோகங்களுமே உலக அளவில் சரி உள்ளூர் சந்தையிலும் சரி மிக வேகமாக விலை உயர்ந்தன.
தங்கத்தை காட்டிலும் வெள்ளியின் விலை புது பணக்காரனை போல ஒவ்வொரு நாளும் கிலோவுக்கு 20 முதல் 30000 ரூபாய் என்றெல்லாம் உயர்வு கண்டது. சாதாரண மக்களுக்கு தங்கம் , வெள்ளி விலை உயர்வு என்றால் இன்று விலை நிலவரத்தை பார்ப்போம், என்ன இவ்வளவு விலை உயர்ந்து விட்டதே என புலம்பி கொண்டே சென்று விடுவோம்.

ஆனால் இதனையே வர்த்தகமாக கொண்டிருப்பவர்களின் நிலை தான் தற்போது பரிதாபமாக உள்ளது. குஜராத் மாநிலம் ராஜ்கோட்டின் பேடக் சாலை இந்தியாவின் வெள்ளி சாலை. நாடு முழுவதும் உள்ள நகை விற்பனையாளர்கள் இங்கு தான் கட்டி கட்டியாக வெள்ளியை வாங்கி செல்கிறார்கள். மொத்த விலையில் வெள்ளியை கட்டிகளாக விற்பனை செய்பவர்களும் அதனை சார்ந்த தொழிலாளர்கள் எண்ணிக்கையும் அதிகம்.
ஆனால் இங்கே தற்போது தொழிலே தத்தளித்து கொண்டிருக்கிறது. ராஜ்கோட் வெள்ளி விற்பனையாளர் கூட்டமைப்பின் செயலாளரான அரவிந்த் நிம்பாசியா டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு அளித்துள்ள பேட்டியில் தங்கம், வெள்ளிக்கான தேவையை முன்பை போல இல்லை என கூறுகிறார். குறிப்பாக ஒவ்வொரு மாதமும் 25 லிருந்து 30 டன்கள் வரை வெள்ளியை வாங்கி விற்பனை செய்து வந்த வணிகர்கள் பலரும் தற்போது மாதத்திற்கு ஒரு டன் கூட விற்பனை செய்ய முடியாமல் தவிக்கின்றனர் என கூறுகிறார்.

வெள்ளி விலை திடீரென உயர்ந்ததும், சரிந்ததும் இதற்கு காரணம். இதனால் ஏற்பட்ட நஷ்டத்தால் பல வணிகர்களும் தங்களுடைய கடைகளை இழுத்து மூடிவிட்டனர் என்றும் சிலர் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் தான் கடையே திறந்து வைக்கிறார்கள். அதுவும் நஷ்டம் ஏற்படுகிறது என்பதால் பல ஊழியர்களை வேலையில் இருந்து கூட நீக்கி விட்டார்கள் என கூறுகிறார். இங்கே வெள்ளி மொத்த விற்பனை வணிகத்தில் ஈடுபட்டு இருக்க கூடிய பல வியாபாரிகளும் ஒப்பந்த முறையில் இருந்து ஊழியர்கள் அனைவரையும் வேலைகளில் நீக்கி விட்டார்கள் என்கிறார் கிட்டத்தட்ட 1.5 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு பறி போய் இருக்கிறது என அவர் குறிப்பிடுகிறார்.
ஆசியாவின் மிகப்பெரிய வெள்ளி சந்தை தான் ராஜ்கோட்டின் இந்த சந்தை. இங்கே வெள்ளி கட்டிகள் டன் கணக்கில் கிடைக்கும், நாடு முழுவதும் இருக்கக்கூடிய நகை விற்பனையாளர்கள் இங்கிருந்துதான் வெள்ளி வாங்கிகொண்டு சென்று அதனை நகைகளாகவும் நாணயங்களாகவும் பொருட்களாகவும் மாற்றி விற்பனை செய்கிறார்கள்.
மொத்த விற்பனையாளர்கள் நகை கட்டிகளை அனுப்பி விடுவார்கள் உரிய நபரை சென்ற பின் தான் முழு பணமும் கைக்கு வருமாம். நம்பிக்கை அடிப்படையில் தான் இவை அனைத்துமே நடக்கும். ஆனால் வெள்ளி அனுப்பும் போது ஒரு விலை, பெறும் போது ஒரு விலை, தங்கள் கைகளுக்கு பணம் வரும் போது ஒரு விலை என இருப்பதால் 44 நிறுவனங்கள் திவால் நிலைக்கு சென்றுவிட்டன, 3500 கோடி ரூபாய் நஷ்டமடைந்துவிட்டன என கூறுகிறார்.
சிறிய அளவு விலை ஏற்ற இறக்கம் என்பதில் பிரச்சனை இல்லை ,ஒரே நாளில் வெள்ளியின் விலை 30 ஆயிரம் ரூபாய் அதிகரிக்கிறது பின்னர் சரிகிறது இதில் எப்படி தொழில் புரிய முடியும் என வினவுகிறார். முதலில் ஒரு டன் வெள்ளி 10 கோடி ரூபாய்க்கு கிடைத்தது பின்னர் அதன் விலை 36 கோடி ரூபாய்க்கு உயர்ந்தது பின்னர் 26 கோடி ரூபாயாக சரிந்தது எனக் கூறும் ஒரு மொத்த விலை விற்பனையாளர் ஒவ்வொரு நாளும் இப்படி விலை ஏறி இறங்குவதை வைத்துக்கொண்டு தொழில் செய்ய முடியவில்லை எனகிறார்.

மும்பை ஜாவேரி பஜார் இந்தியாவின் பெரிய தங்க சந்தை. இங்கேயும் இதே நிலைமைதான் வாடிக்கையாளர்கள் வருவது குறைந்துவிட்டது என மொத்த வியாபாரிகள் புலம்புகின்றனர். பலரும் வருகை தருகிறார்கள் பார்க்கிறார்கள், விலை கேட்கிறார்கள் ஆனால் வாங்காமலேயே சென்று விடுகிறார்கள் என்கின்றனர். திருமண நிகழ்வுகளுக்காக நகை வாங்க வருவோர் கூட கூட குறைந்த எடை கொண்ட தங்கத்தை தான் வாங்குகிறார்கள் என்கின்றனர்.
முதலில் தங்கம் வாங்க முடியாதவர்கள் வெள்ளியாவது வாங்குவார்கள், தற்போது வெள்ளியும் விலை உயர்ந்து விட்டதால் அதையும் வாங்காமல் செல்வதாக அங்கே கடை நடத்தி வரக்கூடிய நித்தில் ஜோதா என்பவர் பேட்டி அளித்திருக்கிறார். இந்திய நகை விற்பனையாளர்கள் கூட்டமைப்பின் தலைவரான குமார் ஜெயின் தங்கம் மற்றும் வெள்ளி நகை வர்த்தகமே பெரிய சவாலான சூழலில் இருக்கிறது என்கிறார். காலை ஒரு விலை, மாலை ஒரு விலை என ஒவ்வொரு நாளும் ஒரு திசையில் இருப்பதால் வியாபாரிகள் என்ன செய்வது என தெரியாமல் திகைத்து நிற்பதாக தெரிவிக்கிறார்.
More From GoodReturns

மதுரை தங்கம் விலையில் இன்று அதிரடி சரிவு..! தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் இன்றும் அதிசயம்.. வாங்க நல்ல வாய்ப்பு.. ஆனா ஒரு விஷயம்..!!

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு.. வாரத்தின் முதல் நாளே சர்ப்ரைஸ்.. நல்ல சான்ஸ்..!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு.. மதுரையில் ஒரு கிராம் தங்கம் விலை என்ன தெரியுமா..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

கோயம்புத்தூர் மக்களே தங்கம் விலை உயர்ந்தது.. இனி ஒவ்வொரு ஸ்டெப்பும் கவனம் வைக்கனும்..!

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை உயர்வு.. ஈரான் போருக்கு மத்தியில் மாட்டிக்கொண்ட தங்க நகை சந்தை..!

மதுரை தங்கம் விலை அதிரடி உயர்வு.. ஈரான் போரில் நடந்த எதிர்பாராத டிவிஸ்ட்.. சர்ரென உயர்ந்த Gold Rate..!

மதுரை, திண்டுக்கல், தேனி மக்களே தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. நகை வாங்கும் முன் இதை படிங்க..!!



Click it and Unblock the Notifications