டெல்லி: இந்தியாவில் மார்ச் மாதத்தில் தங்கம் இறக்குமதி 192 சதவீதம் உயர்ந்திருப்பது தெரிய வந்துள்ளது. அமெரிக்காவில் ஜனவரி மாதம் டொனால்ட் டிரம்ப் அதிபராக பதவியேற்றார். அவர் அதிபராக பதவி ஏற்றதை தொடர்ந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதன் காரணமாக உலக அளவில் பொருளாதார நிலையற்ற தன்மை உருவாகி இருக்கிறது.
இதன் காரணமாக தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உச்சத்தை அடைந்த வண்ணம் இருக்கிறது. இப்படி இருந்தாலும் இந்தியாவில் மார்ச் மாதத்தில் தங்கம் இறக்குமதி 192.13 சதவீதம் உயர்ந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எக்னாமிக் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில் மார்ச் மாதத்தில் இந்தியா 4.47 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான தங்கத்தை இறக்குமதி செய்து இருப்பதாக கூறுகிறது. இது இந்தியாவின் நடப்பு கணக்கு பற்றாக்குறையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஜனவரி மாதத்தில் இந்தியாவில் தங்கம் இறக்குமதியின் மதிப்பு 1.53 பில்லியன் டாலர்களாக தான் இருந்தது அடுத்த இரண்டு மாதங்களிலேயே இது 4.47 மில்லியன் டாலர்களாக உயர்ந்திருக்கிறது . ஒட்டுமொத்தமாக 2024- 25 ஆம் நிதியாண்டில் இந்தியாவில் தங்கம் இறக்குமதி என்பது 58 பில்லியன் டாலர்களாக உயர்ந்து இருக்கிறது. 2023- 24 ஆம் ஆண்டில் இது 45 பில்லியன் டாலர்களாகத்தான் இருந்தது. ஓராண்டு காலத்தில் இந்தியாவில் தங்கம் இறக்குமதி என்பது 27 சதவீதம் உயர்ந்திருக்கிறது.
இந்தியாவில் தங்கம் இறக்குமதி அதிகரித்து இருப்பதன் மூலம் இந்தியாவை சேர்ந்த முதலீட்டாளர்கள் தொடர்ந்து தங்கத்தை பாதுகாப்பான முதலீடாக கருதுவதும் பலரும் முன் வந்து தங்கத்தை வாங்குவதுமே காரணமாக கூறலாம். இது தவிர சர்வதேச அளவில் ஏற்பட்டிருக்க கூடிய பொருளாதார நிலையற்ற தன்மை காரணமாக வங்கிகள் மற்றும் முதலீட்டாளர்கள் பலரும் தங்கத்தை நோக்கி கவனத்தை திருப்பி இருப்பதும் தங்கத்திற்கான தேவை அதிகரித்து அதன் இறக்குமதி அதிகரித்து அதன் விலை உயர்வுக்கும் காரணமாக இருக்கிறது.
சர்வதேச அளவில் அமெரிக்க டாலரின் மதிப்பு குறைந்து வருவது, பல்வேறு நாடுகளுடன் அமெரிக்கா தொடங்கி இருக்கும் வர்த்தகப் போர் மற்றும் அமெரிக்க பொருளாதாரம் மந்த நிலைக்கு செல்லும் வாய்ப்பு உயர்ந்திருப்பது ஆகியவையே தங்கத்தின் விலை உயர்வதற்கு முக்கிய காரணிகளாக இருக்கின்றன. அதே வேளையில் இந்தியாவில் வெள்ளி இறக்குமதி என்பது கிட்டத்தட்ட 11சதவீதம் குறைந்து இருக்கிறது.
மார்ச் மாதத்தில் இந்தியாவில் 119.3 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான வெள்ளி இறக்குமதி செய்யப்பட்டு இருக்கிறது. இது அதற்கு முந்தைய மாதத்தை விட பல மடங்கு குறைவு. 2023 -24 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2024-25 ஆம் ஆண்டில் இந்தியா 4.82 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான வெள்ளியை இறக்குமதி செய்து இருக்கிறது. இது கடந்தாண்டுடன் ஒப்பிடும்போது 11 சதவீதம் குறைவாகும்.
இந்தியாவின் ஒட்டுமொத்த இறக்குமதியில் 8சதவீதம் பங்களிப்பு தங்கமாக தான் இருக்கிறது. இந்தியா இறக்குமதி செய்த தங்கத்தில் 40சதவீதம் சுவிட்சர்லாந்தில் இருந்தும் 16 சதவீதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்தும் 10சதவீதம் தென்னாபிரிக்காவில் இருந்தும் வந்திருப்பதாக செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் தங்கம் இறக்குமதி அதிகரித்திருப்பதன் மூலம் நாட்டின் வர்த்தக பற்றாக்குறை உயர்ந்து இருக்கிறது .அதாவது இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக்கு இடையிலான பற்றாக்குறை என்பது மார்ச் மாதத்தில் 21.54 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்து இருக்கிறது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

சென்னையில் தங்கம் விலை திடீர் சரிவு.. ஆனா சர்வதேச சந்தையில் 3வது நாளாக உயர்வு.. என்ன நடக்குது..?!

தங்கம், வெள்ளி விலை தடாலடியாக உயர காரணம் என்ன? இனி வரும் நாட்கள் எப்படி இருக்கும்?

மதுரையில் தங்கம் விலை திடீர் உயர்வு..!! இன்று தங்கம் வாங்கலாமா? காத்திருக்கலாமா?

கோயம்புத்தூர் மக்களே உங்க ஊரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வங்கி லாக்கரில் உள்ள உங்க நகை சேஃபா? லாக்கர் ரகசியமும் அபராதமும்?

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

தங்கம் விலை அதிரடி உயர்வு.. மதுரையில் ஒரு கிராம் தங்கம் விலை என்ன தெரியுமா..?

கோயம்புத்தூர் மக்களே தங்கம் விலை உயர்ந்தது.. இனி ஒவ்வொரு ஸ்டெப்பும் கவனம் வைக்கனும்..!

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு.. வாரத்தின் முதல் நாளே சர்ப்ரைஸ்.. நல்ல சான்ஸ்..!



Click it and Unblock the Notifications