இந்திய மக்களுக்கும் தங்கத்திற்கும் இடையே மிக வலுவான ஒரு பிணைப்பு இருக்கிறது . தங்கம் நம் வாழ்க்கையின் அந்தஸ்தாக மட்டுமில்லாமல் ஒரு அவசரகால தேவைக்கு உடனடியாக அடகு வைத்து பணமாக மாற்றக்கூடிய ஒரு பொருளாகவும் இருக்கிறது.
உங்களிடம் எவ்வளவு பெரிய நிலம் இருந்தாலும் சரி, பெரிய வீடு இருந்தாலும் சரி திடீரென ஒரு பண தேவை ஏற்படுகிறது என்றால் உடனடியாக அவற்றை பணமாக்க முடியாது , வங்கியில் பெர்சனல் லோன் வாங்குவது என்றால் கூட சில நாட்கள் தேவைப்படும் .ஆனால் தங்கம் அப்படி கிடையாது . உடனடியாக அருகில் இருக்கக்கூடிய வங்கிக்கோ அல்லது வங்கி சாராத நிதி நிறுவனங்களுக்கோ சென்று தங்கத்தை அடகு வைத்து அரை மணி நேரத்தில் பணத்தை பெற்றுக் கொள்ள முடியும்.

சாமானிய மக்கள் கையில் பணம் வரும் போதெல்லாம் தங்கத்தை வாங்கி வைத்துக் கொள்வார்கள் ஏனெனில் அது ஒரு அவசர கால தேவைக்கு அவர்களுக்கு உதவும். அதேபோல மற்ற கடன்களுடன் ஒப்பிடும்போது குறைந்த வட்டிக்கு தங்க நகை கடன்ங்கள் கிடைக்கும் . இதற்கு உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் அவசியம் கிடையாது . அந்த வகையில் இந்தியாவில் தங்க நகை கடன் சந்தை வேகமாக வளர்ந்து வரக்கூடிய ஒரு சந்தையாக மாறி வருகிறது.
அடுத்த ஓராண்டு காலத்திற்குள் தங்க நகை மீது கடன் வழங்கக்கூடிய நிறுவனங்கள் இந்தியாவில் கூடுதலாக 3000 கிளைகளை திறக்க திட்டமிட்டுள்ளன என்றால் அதன் வளர்ச்சி எப்படி இருக்கிறது என்பது நம்மால் புரிந்து கொள்ள முடியும். இந்தியாவில் தற்போது அரசுக்கு சொந்தமான வங்கிகள் தான் தங்க நகை கடன் வழங்குவதில் முன்னிலையில் இருக்கின்றன. இந்த ஆண்டு செப்டம்பருடன் முடிந்த காலாண்டில் அரசுக்கு சொந்தமான வங்கிகள் 14.5 லட்சம் கோடி ரூபாய்க்கு தங்க நகை கடன்களை வழங்கி இருக்கின்றன. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு 36 சதவீதம் அதிகம்.

இதே போல தங்க நகை கடன் வழங்கும் தனியார் நிறுவனங்களும் வேகமான வளர்ச்சியை அடைந்து வருகின்றன இந்தியாவின் மிகப்பெரிய தங்க கடன் நிறுவனமான முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தின் தலைமை மேலாண் இயக்குனரான ஜார்ஜ் அலெக்ஸாண்டர் முத்தூ இந்தியாவில் தங்க நகை கடன்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது முன்பை விட ஏராளமானவர்கள் தங்க நகைகளை அடகு வைத்து கடன் வாங்கும் போக்கு உயர்ந்திருக்கிறது என கூறுகிறார்.
சிறு கடன்களுக்கு அதிக வட்டி செலுத்த வேண்டி இருக்கிறது, அத்தனை எளிதாக நிறுவனங்கள் தற்போது கடன் வழங்குவதில்லை என்பன உள்ளிட்ட காரணங்களால் மக்கள் தங்க நகைகளை அடகு வைத்து கடன் வாங்குகிறார்கள் என கூறுகிறார் . அது தவிர தங்கத்தின் விலை வரலாறு உச்சத்தை எட்டி இருக்கிறது என்பதால் தங்கள் கைவசம் இருக்கும் தங்க குறைந்த அளவிலான தங்கத்திற்கு அதிக அளவிலான பணம் கிடைப்பதும் மக்களுக்கு சிறந்த ஒரு வாய்ப்பு ஏற்படுத்தி தந்திருக்கிறது என தெரிவிக்கிறார்.
பெரும்பாலான சிறு வணிகர்கள் , விவசாயிகள் தங்களுடைய மூலதன செலவினங்களுக்காக மற்ற கடன்களை வாங்குவதற்கு மாற்றாக தங்க நகை கடன்களை தான் வாங்குகின்றனர் என கூறுகிறார் . இந்தியாவில் 2026 ஆம் நிதி ஆண்டில் ஒழுங்கமைக்கப்பட்ட தங்க கடன் சந்தையின் மதிப்பு 15 லட்சம் கோடியாக உயரும் என ஐசிஆர்ஏ என்ற தர நிறுவனம் கணிப்பு வெளியிட்டு இருக்கிறது. இது 2027 ஆம் ஆண்டுக்கான கணிப்புதான் ஆனால் 2026 ஆம் ஆண்டிலேயே இந்தியா இதனை எட்டி விடும் என அந்த அமைப்பு கூறுகிறது.
முத்தூட் பின்காரப் நிறுவனத்தின் தலைமையை செயல் அதிகாரியான சாஜி வர்கீஸ், இந்த மார்ச் மாதத்திற்குள் தங்களுடைய நிறுவனம் கூடுதலாக 200 கிளைகளை திறக்க இருப்பதாக தெரிவித்திருக்கிறார் . முத்தூட் பைனான்ஸ், முத்தூட் பின்காஃப், பஜாஜ் பைனான்ஸ் போன்ற முன்னணி நிறுவனங்கள் இந்த நிதி ஆண்டு இறுதிக்குள்ளாகவே 1800 கிளைகளை புதிதாக திறக்க இருக்கின்றன .

பஜாஜ் பைனான்ஸ் மட்டும் 2027 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 900 தங்க நகை கடன் வழங்கும் கிளைகளை திறக்க இருப்பதாக தெரிவித்து இருக்கிறது. ஐஐஎஃப்எல் பைனான்ஸ் இந்த நிதியாண்டு இறுதிக்குள் 500 கிளைகளை புதிதாக திறக்க திட்டமிட்டு இருக்கிறது.
தங்க கடன் வழங்கும் நிறுவனத்தை கையகப்படுத்தி புதிதாக இந்த தொழிலில் இறங்கியுள்ள எல்&டி பைனான்ஸ் கூடுதலாக 200 கிளைகளை திறக்க முடிவு செய்துள்ளது. தற்போது இந்தியாவில் 70% தங்க கடன் என்பது வேளாண்மை மற்றும் சிறு வணிகங்களுக்காக வாங்கப்படுகிறது மற்ற கடன்கள் வீட்டினை சீரமைப்பது, திருமண நிகழ்வுகள் அல்லது அவசரகால பணத்தை வாங்கப்படுகிறது என இந்த துறையில் இயங்குவோர் கூறுகின்றனர். குறுகிய கால பண தேவைகளுக்கு பெரும்பாலான நபர்கள் தங்க நகை கடன்களை நாடுகிறார்கள் என சொல்லப்படுகிறது.
பிராமல் பைனான்ஸ், பூனாவல்லா ஃபின்கார்ப் ஆகிய நிறுவனங்களும் தற்போது தங்க நகை கடன் பிரிவில் அதிக கவனம் செலுத்தி மூன்றாம் நிலை மற்றும் இரண்டாம் நிலை நகரங்களில் கூடுதல் கிளைகளை திறக்க உள்ளன. அடுத்த 12 மாதங்களில் இந்தியாவில் நகை கடன் வழங்கவே 3000 கிளைகள் புதிதாக திறக்கப்பட உள்ளன. இந்திய ரிசர்வ் வங்கியும் இதற்கு அனுமதி தந்துள்ளது. மக்கள் தங்க நகை கடன்களை தங்களின் வளர்ச்சிக்கான ஒரு மூலதனமாக பார்க்கும் போக்கு அதிகரித்திருப்பதாக இந்த துறை சார்ந்த நபர்கள் கூறுகின்றனர்.
More From GoodReturns

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!

தங்கம் விலை: ஒரே நாளில் 2 முறை விலை சரிவு.. 1 கிராமுக்கு 1000 ரூபாய் சரிவு.. ஷாக் மேல ஷாக்..!!

அலர்ட்.. தங்கம் ரூ.7300,வெள்ளி ரூ.15000 சரிவு.. Big drop.. சொல்லி வைச்ச மாதிரியே நடக்குதே..!

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

தங்கம் விலை 7 வது நாளாக வீழ்ச்சி:அடுத்த இலக்கு ரூ.1 லட்சமா அல்லது இன்னும் குறையுமா?

மதுரை மக்களே இன்று தங்கம் வாங்கலாமா? உங்க ஊரில் ஒரு சவரன் விலை என்ன?

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

வீட்டில் 100 கிராமுக்கு மேல் தங்கமா? உஷார்! வருமான வரித்துறை நோட்டீஸ் வரலாம்!

தங்கம் விலை அதிரடி சரிவால் கோயம்புத்தூர் மக்கள் செம குஷி.. நகை வாங்குவோருக்கு பொன்னான வாய்ப்பு..!

உகாதி நாளில் தங்கம் தந்த சர்ப்பிரைஸ்..!! தொடர்ந்து 7ஆவது நாளாக நடக்கும் மேஜிக்..!!



Click it and Unblock the Notifications