சென்னை: தங்கம் என்பது உலகளவில் மதிப்புமிக்க உலோகம் ஆகும். ஒவ்வொரு நாடுகளின் பொருளாதார வலிமையைக் குறிக்கும் அளவுகோல்களில் ஒன்றாக தங்க இருப்பு கருதப்படுகிறது. இந்தக் கட்டுரையில், உலகின் முதல் 10 நாடுகளில் தங்கம் இருப்பு தரவரிசையில் இந்தியா எந்த இடத்தைப் பிடித்துள்ளது என்பதைப் பார்ப்போம்.
மத்திய வங்கிகள் பல காரணங்களுக்காக தங்க இருப்பை அதிகரிக்கின்றன. தங்கம், குறிப்பாக பொருளாதார நிச்சயமற்ற நிலைகளின் போது, நிலையான சேமிப்பாக செயல்படுகிறது. மேலும், தங்கத்தை உடனடியாக பணமாக மாற்றலாம், இது தேசிய நிதிகளை நிர்வகிப்பதற்கு முக்கியமான ஒன்று. அதனடிப்படையில் தங்கத்தை வைத்திருக்கும் நாடுகளில் முதல் 10 இடங்களில் இந்தியா, எந்த இடத்தில் உள்ளது என்று பார்ப்போம்.

அதிக தங்க இருப்பை வைத்திருக்கும் முதல் 10 இடங்கள்:
அமெரிக்கா - 8,133.46 டன்
ஜெர்மனி - 3,352.65 டன்
இத்தாலி - 2,451.84 டன்
பிரான்ஸ் - 2,436.88 டன்
ரஷ்யா - 2,332.74 டன்
சீனா - 2,262.45 டன்
சுவிட்சர்லாந்து - 1,040.00 டன்
ஜப்பான் - 845.97 டன்
இந்தியா - 822.09 டன்
நெதர்லாந்து - 612.45 டன்
தங்கம் இருப்பு தரவரிசையில் உலகின் முதலிடத்தை அமெரிக்கா வகிக்கிறது. அமெரிக்காவின் மொத்த தங்க இருப்பு சுமார் 8,133. 46 டன்கள். இந்தியா 9வது இடத்தில் உள்ளது. சுமார் 822.09 டன் தங்க இருப்பை இந்தியா வைத்துள்ளது. உலக தங்கம் இருப்பு தரவரிசையில் இந்தியா முதல் 10 இடங்களில் ஒன்றாக இருந்தாலும், முன்னணி நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் தங்க இருப்பு குறைவாகவே உள்ளது. இருப்பினும், இந்தியாவில் தங்கத்தின் மதிப்பைக் கருத்தில் கொண்டு, தங்க இருப்பை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
தங்க இருப்பு என்றால் என்ன?: தங்க கையிருப்பு என்பது ஒரு நாட்டின் மத்திய வங்கியால் வைத்திருக்கும் தங்கமாகும். ஏதேனும் ஆபத்து காலங்களில் இது போன்ற தங்க இருப்பை எளிதாக பணமாக மாற்ற முடியும். இந்தியா, பல நாடுகளைப் போலவே, சர்வதேச வர்த்தகத்தை எளிதாக்குவதற்கு, அதன் சில தங்க இருப்புக்களை வெளிநாட்டு கஜானாக்களில் சேமித்து வைத்துள்ளது.
சமீபத்தில் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) 100 மெட்ரிக் டன் தங்கத்தை UK-வில் இருந்து உள்நாட்டுக்கு, 2024ஆம் ஆண்டில் தங்கத்தை மாற்றியுள்ளது. இந்த நடவடிக்கைக்குப் பிறகு, இந்தியாவின் மொத்த தங்க இருப்பு 822 மெட்ரிக் டன்களாக உயர்ந்துள்ளது. பாங்க் ஆஃப் இங்கிலாந்து உட்பட வெளிநாட்டு கஜானாக்களில், இன்னும் குறிப்பிடத்தக்க பகுதி சேமிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications