நாட்டின் சரக்குகள் மற்றும் சேவைகள் வரி வருவாய் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களில் இல்லாத அளவுக்கு டிசம்பரில் குறைந்தது.
டிசம்பர் மாத ஜிஎஸ்டி மொத்த வசூல் கடந்த வருடத்தை காட்டிலும் சுமார் 10.28 சதவீதம் உயர்ந்து ரூ.1.65 லட்சம் கோடியாக இருந்தது என்று மத்திய நிதித்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டு டிசம்பரில் சரக்கு மற்றும் சேவை வரி வசூல் ரூ.1.50 லட்சம் கோடியாக இருந்துள்ளது.

2023 நவம்பர் மாதத்தில் ரூ.1.68 லட்சம் கோடியாகவும், அக்டோபரில் ரூ.1.72 லட்சம் கோடியாக இருந்த நிலையில் டிசம்பரில் இது குறைந்து விட்டது. ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து இதுவரை 2023 அக்டோபர் மாதத்தில் தான் இரண்டாவது அதிகபட்சம் வசூல் அளவு எட்டப்பட்டது.
நவம்பர், 2023 முடிய 2023-24 நிதியாண்டுக்கான மொத்த ஜிஎஸ்டி வசூல் ரூ.13 லட்சத்து 32 ஆயிரத்து 440 கோடி ஆகும்., மாதத்துக்கு சராசரியாக ரூ1.66 லட்சம் கோடி. 2022-23ஆம் நிதியாண்டின் மொத்த ஜிஎஸ்டி வசூலை விட 11.9% அதிகம். சராசரியாக மாதத்துக்கு ரூ.1.49 லட்சம் கோடி.
அக்டோபரில் உள்நாட்டு பரிவர்த்தனைகள் முந்தைய ஆண்டில் இதே மாதத்தில் இருந்ததைக் காட்டிலும் 13 சதவீதம் அதிகம் இருந்தது.
டிசம்பர் மாத மொத்த ஜிஎஸ்டி வருவாயில் சிஜிஎஸ்டி ரூ.30,443 கோடி, எஸ்ஜிஎஸ்டி ரூ.37,935 கோடி, ஐஜிஎஸ்டி ரூ.84,255 கோடியாக இருந்தது. இது வெளிநாட்டு இறக்குமதியில் இருந்து வந்த ரூ.41,534 கோடியும் அடங்கும்.
மேலும் செஸ் வரியாக ரூ.12,249 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. இதில் இறக்குமதி செய்யப்பட்ட சரக்குகளில் இருந்து ரூ.1079 கோடியும் அடங்கும். 2023-24 நிதியாண்டில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.60 லட்சம் கோடியை ஏழாவது முறையாகத் தாண்டியுள்ளது.
இந்த நிதியாண்டில் 2023 டிசம்பர் மாத்துடன் மொத்த ஜிஎஸ்டி வசூல் ரூ.14.97 லட்சம் கோடியாகும். இது முந்தைய நிதியாண்டில் இதே காலகட்டத்தை விட 12 சதவீதம் அதிகமாகும்.
இதனிடையே ரூ.40,057 கோடி சிஜிஎஸ்டிக்காகவும், ரூ.33,652 கோடி எஸ்ஜிஎஸ்டிக்காகவும் மாநில அரசுகளுக்குப் பிரித்து தந்து விட்டதாக மத்திய அரசு கூறியுள்ளது.
வழக்கமான செட்டில்மெண்ட்களுக்குப் பிறகு டிசம்பர் 2023-ல் மத்திய மற்றும் மாநில அரசுகளின் மொத்த வருவாய் சிஜிஎஸ்டிக்கு ரூ.70,501 கோடியும், எஸ்ஜிஎஸ்டிக்கு ரூ.71,587 கோடியும் ஆகும். மாநில அரசுகளுக்குச் சேர வேண்டிய ஜிஎஸ்டி பங்கை முறையாக தந்துவிட்டோம் என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?

ஸ்டாலினை விட விஜய்க்கு தான் போட்டி அதிகம்!! பரபரக்கும் தமிழக சட்டமன்ற தேர்தல் களம்!!



Click it and Unblock the Notifications