தங்கம், வெள்ளி விலையில் ஏற்படும் அதிரடி மாற்றம் தான் நாடு முழுவதும் முக்கிய பேசுபொருளாக இருக்கிறது. இந்திய மக்கள் பொதுவாகவே பங்குச்சந்தை மற்றும் பிற முதலீடுகளை காட்டிலும் தங்கம் மற்றும் வெள்ளி மீது அதிகப்படியான முதலீடு செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர். இப்படியிருக்கையில் இந்திய மக்களிடம் இருக்கும் தங்கத்தின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது மட்டும் அல்லாமல் இந்தியாவின் ஜிடிபி காட்டிலும் அதிகரித்துள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் சர்வதேச ஸ்பாட் விலை சமீபத்தில் ஒரு அவுன்ஸுக்கு 4,500 டாலருக்கு மேல் வர்த்தகமானது. இதனால் இந்தியர்களிடம் உள்ள தங்கத்தின் மதிப்பு பெரிதும் உயர்ந்துள்ளது.

மார்கன் ஸ்டான்லி அறிக்கையின்படி, இந்திய வீடுகளில் சுமார் 34,600 டன் தங்கம் உள்ளது என கணக்கிட்டு உள்ளது. தற்போதைய விலையான 4,550 டாலர் அடிப்படையில் கணக்கிட்டால் இதன் மதிப்பு 5 டிரில்லியன் டாலர் மேல் உள்ளது. அதாவது சுமார் 5 லட்சம் கோடி டாலருக்கு மேல் மதிப்பிட்டை பெறுகிறது.
இதேநேரத்தில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி சர்வதேச நாணய நிதியத்தின் கணிப்பின்படி சுமார் 4.1 டிரில்லியன் டாலர் மட்டுமே. இதன் மூலம் தங்கம் இந்தியாவில் தனித்துவமான இடத்தை பிடித்துள்ளது, மற்ற நாடுகளில் இப்படியொரு நிலை இல்லை என பொருளாதார வல்லுனர்கள் கூறுகின்றனர். தங்கம் மீதான முதலீட்டில் ஆயிரம் விமர்சனம் வைக்கப்பட்டாலும், தற்போது இவை தான் முதலீட்டு சந்தையில் கிங்மேக்கராக உள்ளது.
உலக நாடுகளில் இந்தியா தான் இரண்டாவது பெரிய தங்க நுகர்வு சந்தையாக உள்ளது. உலக தங்க கவுன்சில் தரவுகளின்படி, உலகளவிய தங்க தேவையில் சுமார் 26 சதவீதம் இந்தியா பங்கீட்டை கொண்டு உள்ளது. சீனா 28 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது.
இந்தியாவில் தங்க நகை அதிகமாக வாங்கப்பட்டாலும், தங்க கட்டிகள் மற்றும் நாணயங்கள் போன்ற முதலீட்டு வடிவங்கள் அதிகரித்துள்ளது முக்கிய மாற்றமாக பார்க்கப்படுகிறது.
இந்திய ரிசர்வ் வங்கியும் தங்கத்தை தொடர்ந்து வாங்கி சேமித்து வருகிறது. 2024 முதல் சுமார் 75 டன் தங்கத்தை வாங்கியுள்ளது. இதனால் ஆர்பிஐ கஜானாவில் மொத்தம் தங்க சேமிப்பு 880 டன்னாக உயர்ந்துள்ளது. இது இந்தியாவின் மொத்த அந்நிய செலாவணி சேமிப்பில் சுமார் 14 சதவீதமாக உள்ளது என மார்கன் ஸ்டான்லி தெரிவித்துள்ளது.
More From GoodReturns

17 ஆண்டுகளுக்குபிறகு கடும் வீழ்ச்சி கண்ட தங்கம்! திடீர் யூ டர்ன் அடித்த காரணம்? அடுத்த இலக்கு?

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

சென்னையில் தங்கம் விலை திடீர் சரிவு.. ஆனா சர்வதேச சந்தையில் 3வது நாளாக உயர்வு.. என்ன நடக்குது..?!

தங்கம், வெள்ளி நகைகளின் இறக்குமதிக்கு செக் வைத்த மத்திய அரசு!! வியாபாரிகளின் நூதன மோசடி அம்பலம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம், வெள்ளி விலை தடாலடியாக உயர காரணம் என்ன? இனி வரும் நாட்கள் எப்படி இருக்கும்?

வெள்ளி விலை 15 ஆண்டுகளில் இல்லாத மோசமான சரிவு! அடுத்து என்ன நடக்கும்? நிபுணர்கள் சொல்வது இதுதான்!

மதுரை தங்கம் விலையில் இன்று அதிரடி சரிவு..! தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்?

Silver Crash: தங்கத்தை விடுங்க.. வெள்ளியோட ஆட்டத்தை பாருங்க! முதலீடு செய்ய இது சரியான நேரமா?

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் இன்றும் அதிசயம்.. வாங்க நல்ல வாய்ப்பு.. ஆனா ஒரு விஷயம்..!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!



Click it and Unblock the Notifications