இங்கிலாந்தை சேர்ந்த பென்ட்லி மோட்டார்ஸ் நிறுவனம் சொகுசு கார்கள் தயாரிப்புக்கு பெயர் பெற்றது. ரோல்ஸ் ராய்ஸ் கார்களுக்கு இருப்பது போல் இந்நிறுவனத்தின் கார்களுக்கும் தனி வாடிக்கையாளர்கள் கூட்டம் உள்ளது.
இந்தியாவில் இந்நிறுவனத்தின் கார்கள் ஆரம்ப விலை ரூ.5 கோடியில் இருந்து தொடங்குகிறது. இந்நிறுவனத்தின் பென்ட்லி முல்சேன் EWB Centenary எடிசன் கார் தான் இந்தியாவில் விலையுயர்ந்த காராக கருதப்படுகிறது. இந்த காரின் விலை ரூ.14.5 கோடியாகும்.

நம் நாட்டில் பெரும் தொழிலதிபர்களான முகேஷ் அம்பானி, கௌதம் சிங்கானியா, ரத்தன் டாடா போன்ற பெரும் கோடீஸ்வரர்கள் பல விலையுயர்ந்த கார்களை வைத்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் யாரிடமும் இந்த ஒரு கார் கிடையாது.
கௌதம் சிங்கானியா வைத்திருக்கும் பெராரி மற்றும் முகேஷ் அம்பானி வைத்திருக்கும் ரோல்ஸ் ராய்ஸ் கார்களை விட இந்த காரின் விலை அதிகம். மெகா கோடீஸ்வரர்களிடம் கூட இந்த கார் இல்லை. ஆனாலும் ஒரு ஆள் இந்த காரை வைத்திருக்கிறார் என்றால் ஸ்பெஷலான விஷயம் தான். இந்தியாவில் இந்த காரை வைத்திருப்பவர் யார் தெரியுமா?
நமது அண்டை மாநிலமான கர்நாடகாவை சேர்ந்த பிரபல தொழிலதிபரிடம் இந்த கார் உள்ளது. தி புரோட்டீன் மேன் ஆஃப் இந்தியா என்று பிரபலமாக அறியப்படுபவரும், பிரிட்டிஷ் பயோலாஜிக்கல் நிறுவனத்தின் நிறுவனருமான வி.எஸ்.ரெட்டியிடம் தான் இந்த விலையுயர்ந்த கார் உள்ளது.
வி.எஸ்.ரெட்டியிடம் ரோஸ் கோல்டு கலர் பென்ட்லி முல்சேன் EWB கார் உள்ளது. இந்த காரில் 21 இன்ச் பாலிஷ் செய்யப்பட்ட அலாய் வீல்கள், லெதர் அப்ஹோல்ஸ்டரி, பின்புற கால் வேனிட்டி கண்ணாடிகள் மற்றும் ஆட்டுக் குட்டியின் கம்பளியால் செய்யப்பட்ட விரிப்புகள் உள்ளிட்டவை உள்ளன. இந்த காரை கார்களின் தாஜ்மஹால் என்று வி.எஸ்.ரெட்டி சொல்கிறார்.
வி.எஸ்.ரெட்டி பல்வேறு வயதினருக்கும் மலிவு விலையில் ஊட்டச்சத்தை வழங்கும் நோக்கத்துடன் பிரிட்டிஷ் பயோலாஜிக்கல் நிறுவனத்தை தொடங்கினார். இந்தியாவின் முன்னணி ஊட்டச்சத்து மருந்து நிறுவனங்களில் ஒன்றான விளங்குகிறது. இவர் இதுவரை 52 தேசிய மற்றும் சர்வதேச விருதுகளை பெற்றுள்ளார்.
தொழிலில் தீவிரமாக இருந்தாலும், அவர் ஒரு வாகன ஆர்வலர். வி.எஸ்.ரெட்டி பேட்டி ஒன்றில், நாட்டில் உள்ள அனைத்து பிராண்ட் கார்களையும் சேகரிப்பது எனது சிறுவயது கனவாகும் என்று தெரிவித்து இருந்தார்.
பிரிட்டிஷ் பயோலாஜிக்கல் நிறுவன வலைத்தளத்தின்படி, இந்நிறுவனம் ஒரு ஆராய்ச்சி அடிப்படையிலான ஹெல்த்கேர் நியூட்ராசூட்டிகல் நிறுவனமாகும். நிறுவனத்தால் தயாரிக்கப்படும் தயாரிப்புகள் குழந்தைகள், நீரிழிவு, மகளிர் மருத்துவம், இதயம், ஹெபடைடிஸ் மற்றும் முதியோர் ஊட்டச்சத்து மற்றும் ஹெல்த்கேர் ஆகியவற்றுக்கான ஊட்டச்சத்து தீர்வுகளுடன் ஆரோக்கியத்தையும், நலனையும் வழங்குகின்றன.


Click it and Unblock the Notifications