நடப்பு நிதியாண்டின் முதல் எட்டு மாதங்களில் மத்திய அரசின் நேரடி வரி வசூல் கணிசமான வளர்ச்சியை கண்டுள்ளது. மத்திய அரசு தரப்பில் வெளியான தகவல் அடிப்படையில் நவம்பர் 10 வரையிலான காலத்தில், நாட்டிந் நிகர நேரடி வரி வசூல் 12.92 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்து, கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தை விட 7 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதேபோல் இக்காலக்கட்டத்தில் மொத்த நேரடி வரி வசூல் 15.35 லட்சம் கோடி ரூபாயாக பதிவாகி கடந்த ஆண்டை காட்டிலும் 2.15 சதவீதம் உயர்ந்துள்ளது, அதேசமயம் வரி திரும்ப செலுத்தும் தொகை அளவு 17.72 சதவீதம் குறைந்து 2.42 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.

நேரடி வரிகளில் கார்ப்பரேட் வரி வசூல் முக்கிய பங்கு வகிக்கும் வேளையில் நவம்பர் 10 வரையிலான காலக்கட்டத்தில் நாட்டின் மொத்த கார்ப்பரேட் வரி 6.91 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது, அதில் டாக்ஸ் ரீபண்ட் தொகை 1.54 லட்சம் கோடி ரூபாயாகும். இதன் மூலமாக நிகர கார்ப்பரேட் வரி வசூல் 5.37 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.
அதேபோல், கார்ப்பரேட் அல்லாத வரிகளான - தனிநபர், குடும்பங்கள், நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் அமைப்புகளிடமிருந்து வரும் வரி வசூல் மொத்தம் 8.08 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதில் டாக்ஸ் ரீபண்ட் 88,000 கோடி ரூபாய், எனவே இப்பரிவில் நிகர வரி வசூல் 7.19 லட்சம் கோடி ரூபாய்.
இதேபோல் கடந்த வாரம் மத்திய அரசு வெளியிட்டுள்ள ஜிஎஸ்டி வரி வசூல் அளவை பார்க்கும் போது அதிலும் வளர்ச்சி பாதை பதிவாகியுள்ளது. 2025 அக்டோபர் மாதத்தில், ஜிஎஸ்டி வசூல் 1.96 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்து, முந்தைய ஆண்டின் அக்டோபரை விட 4.6 சதவீதம் அதிகரித்துள்ளது.
மேலும் வரி வசூலில் திரும்ப செலுத்தல் கழித்த பிறகு, நிகர ஜிஎஸ்டி வசூல் 1.69 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது, இது கடந்த ஆண்டை காட்டிலும் 0.6 சதவீதம் அதிகமாகும்.
மேலும் மொத்த ஜிஎஸ்டி வசூலில், சென்டரல் ஜிஎஸ்டி (சிஜிஎஸ்டி) 36,547 கோடி ரூபாயும், மாநில ஜிஎஸ்டி (எஸ்ஜிஎஸ்டி) 45,134 கோடி ரூபாயும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி (ஐஜிஎஸ்டி) 1,06,443 கோடி ரூபாயும் வசூலிக்கப்பட்டு உல்ளது. ஆனால் செஸ் வரி வசூல் 7,812 கோடி ரூபாயாக பதிவாகி கடந்த ஆண்டை காட்டிலும் சற்று குறைந்ததுள்ளது.
மேலும் நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-அக்டோபர் வரையிலான காலத்தில், மொத்த ஜிஎஸ்டி வசூல் 13.89 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்து, முந்தைய ஆண்டின் இதே காலக்கட்டத்தை காட்டிலும் 9 சதவீதம் அதிகமாகும். கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 12.74 லட்சம் கோடி ரூபாயாக பதிவானது.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications