ரூ.3.02 லட்சம் கோடி புரளும் மத சுற்றுலா துறை.. இந்தியர்களின் பெரும் பண புழக்கம்..!!

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இந்து, கிறிஸ்துவம், இஸ்லாம் என அனைத்து மதத்தினருக்கும் ஏராளமான மத வழிபாட்டுத் தலங்கள் உள்ளன. இந்த மத வழிபாட்டுத் தலங்கள் மிகப் பெரிய பொருளாதாரத்தை உருவாக்குவதில் பெரிய பங்கினை கொண்டுள்ளன.

மத சுற்றுலாவுக்கான பயண செலவு, உணவு, பொருட்கள் வாங்குவது, மத தலங்களில் நன்கொடை செலுத்துவது என்று லட்சக்கணக்கான மத வழிபாட்டுத் தலங்களால் பெரிய பண பொருளாதாரம் நடைபெறுகிறது.

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு தகவல்களின்படி, நம் நாட்டில் மொத்தம் 33 கோடி கட்டிடங்கள் உள்ளன. இதில் 21.6 கோடி கட்டிடங்கள் குடியிருப்புகள். அதற்கு அடுத்தப்படியாக மத வழிபாட்டுத் தலங்கள் உள்ளன.

நாடு முழுவதுமாக மொத்தம் 30 லட்சம் மத வழிபாட்டுத் தலங்கள் உள்ளன. இது பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை (மொத்தம் 21 லட்சம்) காட்டிலும் அதிகமாகும். நம் நாட்டில் சராசரியாக 40 பேருக்கு ஒரு மத வழிபாட்டுத் தலம் உள்ளது. இது பள்ளிகள், காவல் நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகள் போன்ற பிற சமூக குறிகாட்டிகளை விட மிக அதிகம்.

ரூ.3.02 லட்சம் கோடி புரளும் மத சுற்றுலா துறை.. இந்தியர்களின் பெரும் பண புழக்கம்..!!

நம் நாட்டிலேயே உத்தர பிரதேசத்தில்தான் அதிக மத வழிபாட்டுத் தலங்கள் உள்ளன. அந்த மாநிலத்தில் 3.54 லட்சம் மத தலங்கள் உள்ளன. அடுத்ததாக இரண்டாவது இடத்தில் 2.78 லட்சம் மத வழிபாட்டுத் தலங்களுடன் மும்பை உள்ளது. மேற்கு வங்கம் 2.57 லட்சம் தலங்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.

இறைவனின் ஆசிர்வாதத்திற்காக நம் மக்கள் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் பயணம் செய்வார்கள். 2024 ஜனவரியில் ராமர் கோயில் திறக்கப்பட்டவுடன் அயோத்திக்கு 10 மடங்கு அதிகமான சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்று உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கணித்துள்ளார். அது நிச்சயமாக சாத்தியமான ஒன்றுதான்.

அதற்கு உதாரணமாக வாரணாசி காசி விஸ்வநாத் கோயிலை சொல்லலாம். அந்த கோயில் புனரமைக்கப்பட்ட பிறகு 2021ல் 7.3 கோடி மக்கள் காசி விஸ்வநாதரை தாிசனம் செய்துள்ளனர். அதற்கு முந்தைய ஆண்டில் 80 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் மட்டுமே அந்த கோயிலுக்கு சென்று இருந்தனர். 2022ல் அந்த கோயிலுக்கு சென்றவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்ததோடு, கோயில் நன்கொடையும் 500 சதவீதம் உயர்ந்து ரூ.100 கோடியாக உயர்ந்தது.

2017ல் என்.எஸ்.எஸ்.ஓ. வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவில் மத வழிப்பாட்டு தலங்கள் சார்ந்த நாட்டின் சுற்றுலா பொருளாதாரம் ரூ.3.02 லட்சம் கோடி மதிப்புடையது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.32 சதவீதமாகும்.

அதேசமயம் உண்மையில் மத சுற்றுலா சார்ந்த பொருளாதாரம் இதனை காட்டிலும் அதிகமாகத்தான் இருக்கும். ஏனென்றால் மத சுற்றுலா ஒழுங்கமைக்கப்படாத சந்தையால் நடக்கிறது, அடுத்து ஏராளமான மத பொருட்கள் மற்றும் சேவைகள் கணக்கில் வரவில்லை. மேலும் முறைசாரா, எந்தவொரு பணி பலன்களும் பெறாத பணியாளர்களால் மத சுற்றுலா நடத்தப்படுகிறது.

சுற்றுலா அமைச்சகத்தின் சமீபத்திய தரவுகளின்படி, நம் நாட்டில் 2022ல் வழிபாட்டுத் தலங்கள் ரூ.1.34 லட்சம் கோடி வருவாய் ஈட்டியுள்ளன. இது 2021ல் ரூ.65,070 கோடியாக இருந்தது. வழிபாட்டு தலங்களின் வருவாய் கோவிட் முந்தைய அளவை இன்னும் ஈட்டவில்லை என்றாலும் மீட்பு வலுவாக உள்ளது என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.

நம் நாட்டில் மத பயணங்கள் மட்டும் அதிகரித்து வரவில்லை, மத அமைப்புகளுக்கு குடும்பங்கள் அளிக்கும் நன்கொடையும் உயர்ந்து வருகிறது. 2021-22ம் ஆண்டில் மத அமைப்புகளுக்கு இந்திய குடும்பங்கள் நன்கொடையாக மொத்தம் ரூ.27,000 கோடி வழங்கியுள்ளன. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும 14 சதவீதம் அதிகமாகும். இது, 2020-21ம் ஆண்டில் ரூ.23,700 கோடியாக இருந்தது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+