இந்தியாவின் மொத்த விற்பனை விலை குறியீட்டை (WPI) கொண்டு கணக்கிடப்படும் மொத்த விலை பணவீக்கம், ஜூன் மாதத்தில் கடந்த 16 மாதங்களில் இல்லாத அளவுக்கு 3.36 சதவீதம் உயர்ந்துள்ளது. இது மே மாதத்தின் 2.61 சதவீதத்தை விட அதிகம் என்று அரசின் தரவுகள் சுட்டிக் காட்டியுள்ளன.
மொத்த விலை பணவீக்கம் என்றால் என்ன?: நாடு முழுவதும் உள்ள மொத்த விற்பனையாளர்களிடம் இருந்து பெறப்படும் பொருட்களின் விலையில் ஏற்படும் மாற்றத்தைக் கண்காணிப்பதன் மூலம் மொத்த விற்பனை பணவீக்கம் கணக்கிடப்படுகிறது.

மொத்த விற்பனை விலையில் ஏற்படும் அதிகரிப்பு மொத்த விலை பணவீக்கம் அதிகரிப்பதைக் குறிக்கும். இதன் விளைவாக, உற்பத்தியாளர்களிடமிருந்து பொருட்களை வாங்கும் மொத்த விற்பனையாளர்களுக்கு அதிக செலவு ஏற்படும். இதனால் அவர்களும் வாடிக்கையாளர்களுக்கு அதிக விலையில் விற்பனை செய்வார்கள் இது இறுதியில் வாடிக்கையாளர்களை பாதிக்கும்.
அடிப்படைப் பொருட்களுக்கான பணவீக்க விகிதம் மே மாதத்தில் 7.20 சதவீதமாக இருந்த நிலையில், ஜூன் மாதத்தில் 8.80 சதவீதமாக உயர்ந்துள்ளது. எரிபொருள் மற்றும் மின்சார பணவீக்கம் முந்தைய மாதத்தின் 1.35 சதவீதத்தில் இருந்து 1.03 சதவீதமாக சற்று குறைந்துள்ளது.
தயாரிப்புப் பொருட்களின் பணவீக்க விகிதம் மே மாதத்தில் 0.78 சதவீதத்தில் இருந்து ஜூன் மாதத்தில் 1.43 சதவீதமாக உயர்ந்துள்ளது. உணவுப் பொருட்களின் பணவீக்க விகிதம் மே மாதத்தில் 7.40 சதவீதத்தில் இருந்து ஜூன் மாதத்தில் 8.68 சதவீதமாக அதிகரித்துள்ளது.
பணவீக்க விகிதம் அதிகரித்ததற்குக் காரணம் உணவுப் பொருட்களின் விலைகள், உணவுப் பொருட்களின் உற்பத்தி, கச்சா எண்ணெய், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, கனிம எண்ணெய்கள் மற்றும் பிற உற்பத்திகள் போன்றவற்றின் விலை உயர்ந்ததனால் தான்" என்று அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காய்கறி மற்றும் பழங்களின் பணவீக்கம்: பழங்களின் பணவீக்கம் 2023 ஜூன் மாதத்தில் 10.14 சதவீதமாக உள்ளது. ஜூன் 2024-இல் உருளைக்கிழங்கு விலையின் பணவீக்கம் 66.38 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டு 21.2 சதவீதமாக இருந்தது.
மொத்த வெங்காய விலை பணவீக்கம் ஜூன் 2023-இல் 4.30 சதவீதத்தில் இருந்து 2024 ஜூன் மாதத்தில் 93.4 சதவீதமாக அதிகரித்தது. இந்தியாவின் சில்லறை பணவீக்கம் மே மாதத்தில் 12 மாதங்களில் இல்லாத அளவுக்கு 4.75 சதவீதத்திலிருந்து 5.08 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் CRISIL நிறுவனத்தின் MI&A ஆராய்ச்சி மதிப்பீடுகளின்படி, ஜூன் மாதத்தில் வீட்டில் சமைக்கும் மாமிச தாலியின் விலை 4 சதவீதம் குறைந்துள்ளது. அதே சமயம் சைவ தாலியின் விலை கடந்த ஆண்டை விட 10 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டின் விலையை ஒப்பிடும் போது, கோழி கறியின் விலையில் சுமார் 14 சதவீதம் குறைவு ஏற்பட்டுள்ளது. அதிகரித்த கோழி வளர்ப்பு மற்றும் குறைந்த தீவன செலவு காரணமாக அசைவ தாலியின் விலை குறைந்துள்ளது. பணவீக்கம் காரணமாக சைவ தாலியின் விலை அதிகரித்துள்ளது.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் நடந்தது என்ன? மஃப்டியில் வேலை செய்த மகளிர் போலீஸின் ஷாக் ரிப்போர்ட் !!

சட்டமன்ற தேர்தல் 2026: உங்களின் Booth Slip-ஐ ஆன்லைனில் டவுன்லோட் செய்வது எப்படி?



Click it and Unblock the Notifications