நாட்டின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான இண்டஸ்இந்த் வங்கியில் சில முறைகேடுகள் நடந்தது தெரியவந்ததையடுத்து, அந்த வங்கி சர்ச்சையில் சிக்கியது. அந்த வங்கியில் டெபாசிட் செய்தவர்களுக்கு தங்களது பணம் பாதுகாப்பாக உள்ளதா என்ற கவலை ஏற்பட்டது. இதற்கிடையில் இண்டஸ்இந்த் வங்கி, அதன் நிகர மதிப்பை ரூ.2,000 கோடி அளவுக்கு குறைக்கக்கூடிய கணக்கியல் குறைபாடுகள் குறித்த விசாரணையை தொடர்ந்தது. இதன் எதிரொலியாக அந்த வங்கியில் டெபாசிட் செய்தவர்கள் தங்கள் பணத்தை திரும்ப பெறுவதில் தீவிரம் காட்டினர். இது போன்ற சூழ்நிலைகளுக்கு மத்தியில், இண்டஸ்இந்த் வங்கி தனது பணப்புழக்கத்தை அதிகரிக்கும் நோக்கில், அதிக மதிப்பிலான நிறுவன கடன்களை பிற வங்கிகளுக்கு மாற்றி நிதி திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாரம்பரிய வங்கிகளுக்கு இடையேயான பங்கேற்பு சான்றிதழ் (ஐபிபிசி) சந்தை மூலம், இண்டஸ்இந்த் வங்கியிடமிருந்து அதிக மதிப்பிலான நிறுவன கடன்களை பெற்றுக் கொண்டு 7.5-8 சதவீத வட்டி விகிதத்தில் அந்த வங்கிக்கு ஐசிஐசிஐ வங்கி மற்றும் பெடரல் வங்கி ஆகியவை கடனாக பணம் வழங்கியுள்ளன என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. ஐபிபிசி என்பது ஒரு பாரம்பரிய சந்தையாகும், இந்த சந்தை மூலம் கடன் வாங்கும் வங்கிகள், கடன் வழங்கும் வங்கிகளிடம் தற்காலிகமாக கடன்களை பிணையமாக வழங்குகின்றன. இத்தகைய ஒப்பந்தங்கள் வழக்கமாக ஆறு மாத காலத்திற்கு செய்யப்படுகின்றன.

அந்த நேரத்தில் கடன் வழங்கும் வங்கிக்கு கடன் பெறும் வங்கியின் கடன்கள் மாற்றப்படும், பரிமாற்றம் செய்யப்படும் கடனின் தொகையில் 40 சதவீதம் கடனாக பெறுகிறது. உதாரணமாக இண்டஸ்இந்த் வங்கி ரூ.1,000 கோடி அதிக மதிப்பிலான கடன்களை மாற்றினால், ரூ.400 கோடி கிடைக்கும். அதற்கு வட்டியும் செலுத்தும். ஆறு மாதங்களின் முடிவில் இண்டஸ்வங்கி கடன் வாங்கிய தொகையை திருப்பி செலுத்தினால், அடமானம் வைத்த அதிக மதிப்பிலான நிறுவன கடன்களை திரும்ப பெறும். கடன் பரிமாற்றம் என்பது வங்கியின் கடன் புத்தகம் தற்காலிகமாக இதே அளவிற்கு சுருங்குவதை குறிக்கிறது.
இந்த மாதத்தில் சுமார் ரூ.6,000 கோடி மதிப்பிலான அதிக மதிப்பிலான நிறுவன கடன்களை அடமானமாக சக வங்கிகளுக்கு மாற்றியுள்ளதாக தகவல். இது சொத்து மதிப்பை குறைப்பதோடு, பணப்புழக்கத்தை அதிகரிக்கும். முன்னதாக இண்டஸ்இந்த் அதிக மதிப்பிலான நிறுவன கடன்களை அடமானம் வைத்து கடன் வாங்குவதற்காக நாட்டில் 12 வங்கிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
அவற்றில் சில அத்தகைய ஒப்பந்தகளுக்காக இண்டஸ்இந்த் வங்கி அணுகியது. ஆனால் அந்த வங்கிகள் கடனுக்கு 8.50 சதவீதம் போன்ற அதிக வட்டியை விரும்பியன அதனால் இண்டஸ்வங்கி வேண்டாம் என்று மறுத்து விட்டது. இண்டஸ்இந்த் வங்கியை பொறுத்தவரை நிறுவன கடன்களை அடமானம் வைத்து பணம் பெறுவது என்பது வெளிப்படையான ஒரு பணப்புழக்க நடவடிக்கையாகும். அதேசமயம் கடன் வழங்கும் வங்கிகளை பொறுத்தவரை, குறுகிய காலத்தில் சிறிது பணம் சம்பாதிப்பதற்கான ஒரு நல்ல வழியாகும்.


Click it and Unblock the Notifications