இந்தியாவில் எளியவர்களும் வர்த்தக துறையில் குறிப்பாக டெக்னாலஜி துறையில் மாபெரும் வெற்றி பெற முடியும் என்பதை 30 வருடத்திற்கு முன்பே நிரூபித்து காட்டி ஒரு ஒருநிறுவனம் என்றால் அது இன்போசிஸ் தான். ஐடி சேவை மற்றும் மென்பொருள் ஏற்றுமதியில் அசைக்க முடியாத இடத்தில் இருக்கும் இன்போசிஸ் வியாழக்கிழமை தனது காலாண்டு முடிவுகளை வெளியிட்டது.
இக்காலாண்டு முடிவில் இன்போசிஸ் நிர்வாகம் தனது ரீடைல் முதலீட்டாளர்கள், பங்குதாரர்களுக்கு ஒரு பங்கிற்கு 17.50 ரூபாயை ஈவுத்தொகையாக கொடுக்க உள்ளதாக அறிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டில் ஏற்கனவே 16.50 ரூபாய் ஈவுத்தொதையை கொடுத்த நிலையில் 2வது முறையாக மார்ச் காலாண்டில் இறுதி ஈவுத்தொகையாக 17.50 ரூபாயா அறிவித்துள்ளது.

இதன் மூலம் 2023 ஆம் நிதியாண்டில் மட்டும் 14,200 கோடி ரூபாயை ஈவுத்தொகையாக இன்போசிஸ் நிர்வாகம் தனது ரீடைல் முதலீட்டாளர்கள், பங்கு முதலீட்டாளர்களுக்கு கொடுத்துள்ளது. இதில் பெரும் பகுதி இன்போசிஸ் நிறுவனரான நாராணயமூர்த்தி குடும்பத்திற்கும், பிரிட்டன் அதிபரான ரிஷி சுனக் குடும்பத்திற்கும் செல்கிறது.
இன்போசிஸ் நிறுவனத்தில் குறிப்படத்தக்க பங்குகளை நாராயணமூர்த்தி, அவருடைய மனைவி சுதா மூர்த்தி, மகன் ரோஹன் மூர்த்தி, பிரிட்டன் அதிபர் ரிஷி சுனக்-ன் மனைவியும் நாராயணமூர்த்தி-யின் ஓரே மகளான அக்ஷதா மூர்த்தியும் வைத்துள்ளனர். இந்த நிலையில் 17.50 ரூபாய் ஈவுத்தொகை இவர்களுக்கும் வரும் நிலையில் ஓரே நாளில் நாராயணமூர்த்தி, ரிஷி சுனக் குடும்பம் பல கோடி சம்பாத்திதுள்ளது.

டிசம்பர் 31, 2022 நிலவரப்படி, இன்போசிஸ் ப்ரோமோட்டர்கள் பிரிவில் இருக்கும் பிரிட்டன் அதிபர் ரிஷி சுனக்-ன் மனைவியும் நாராயணமூர்த்தி-யின் ஓரே மகளான அக்ஷதா மூர்த்தி இன்போசிஸ் நிறுவனத்தில் 3,89,57,096 பங்குகள் அதாவது மொத்த இன்போசிஸ் பங்குகளில் 1.07 சதவீத வைத்திருந்தார். இதன் மூலம் தற்போது அறிவிக்கப்பட்டு உள்ள 17.50 ரூபாய் ஈவுத்தொகை மூலம் அக்ஷதா மூர்த்தி 68.17 கோடி ரூபாய் ஈவுத்தொகையை பெற உள்ளார்.
இதேபோல் நாராயணமூர்த்தி-யின் காதல் மனைவி சுதா மூர்த்தி-யிடம் 0.95 சதவீதம் அதாவது3,45,50,626 இன்போசிஸ் பங்குகள் உள்ளது. இதற்கு சுதா மூர்த்தி 60.46 கோடி ரூபாய் ஈவுத்தொகையாகப் பெறுவார்.
மேலும் இன்போசிஸ் சிஇஓ-வாக உயர வேண்டிய நாராயணமூர்த்தி-யின் மகன் ஹோஹன் மூர்த்தி இப்பதவி மேல் விருப்பம் இல்லாமல் வெளியேறினாலும், இன்போசிஸ் நிறுவனத்திலஸ் 6,08,12,892 பங்குகள் அதாவது 1.67 சதவீத பங்குகளை வைத்துள்ளளார். இதன் மூலம் ரோஹன் மூர்த்தி டிவிடெண்ட் வருமானமாக சுமார் 106.42 கோடி ரூபாயை பெறுவார்.

கடைசியாக இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி இன்போசிஸ் நிர்வாக முடிவுகள் எடுப்பதில் விலகி இருந்தாலும், நிர்வாக குழுவில் தொடர்ந்து இருந்து வருகிறார். 4.3 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் போர்ப்ஸ் பணக்காரர்கள் பட்டியலில் இருக்கும் நாராயணமூர்த்தி இன்போசிஸ் நிறுவனத்தில் 0.46 சதவீத பங்குகளை மட்டுமே வைத்துள்ளார். இதன் மூலம் மார்ச் காலாண்டு முடிவு ஈவுத்தொகை அறிவிப்பு மூலம் 29.12 கோடி ரூபாய் வருமானத்தை பெற உள்ளார்.
More From GoodReturns

தமிழ்நாட்டு ஐடி ஊழியர்கள் அதிர்ச்சி!! திடீரென ஊழியர்கள் எண்ணிக்கையை குறைத்த Cognizant!!

ஜெமினி, கிளாட்-க்கு வேட்டு..!! OpenAI நிறுவனத்தில் உருவாகிய புதிய பதவி..! இனி இதற்கு தான் எதிர்காலம்..!!

இப்படியே போனா கஜானா காலியாகிடும்: அமெரிக்க டாலரை கைவிடும் இந்தியா? ஈரான் போரால் நடக்கும் மாற்றம்?

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!



Click it and Unblock the Notifications