மும்பை: இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனர் இன்போசிஸ் நாராயண மூர்த்தி. 77 வயதான நாராயண மூர்த்தி இன்றும் ஓய்வு எடுக்காமல் பணியாற்றி வருகிறார். நாராயண மூர்த்தி அண்மையில் பேட்டி ஒன்றில் தொழில்நுட்பத்தின் நன்மைகளை பற்றி பேசும் போது தனது இளமை கால நாட்களை நினைவு கூர்ந்தார்.
தி ரிகார்டு என்ற பாட்காஸ்ட் நிகழ்ச்சியில், நாராயண மூர்த்தி இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிதி அதிகாரியான டி.வி.மோகன்தாஸ் பாயிடம் கலந்துரையாடினார். அப்போது நாராயண மூர்த்தி கூறுகையில், என் வீட்டு சமையல்காரர் ஒடிசாவை சேர்ந்த இளைஞர்.

ஒரு நாள் அவர் என்னிடம் வந்து உங்கள் ஸ்பெஷல் டயாபிடிஸ் ஆட்டா (கோதுமை மாவு) நாளை அல்லது மறுநாள் காலியாகி விடும் என்று தெரிவித்தார். எனவே நாங்கள் மாவை ஆர்டர் செய்ய வேண்டும். நான் சமையல்காரரை அருகில் உட்கார வைத்து அமேசானில் ஆர்டர் செய்தேன். நிச்சயமாக அவர் ஆன்லைனில எப்படி ஆர்டர் செய்ய வேண்டும் என்பதை நன்றாக அறிருந்திருந்தார். அவர் போதுமான அளவு கோதுமையை ஆர்டர் செய்தார். ஏனென்றால் அடுத்த இரண்டு மாதங்களுக்கு எவ்வளவு தேவைப்படும் என்பது அவருக்கு தெரியும்.
எனது இளமை காலத்தில் அத்தியாவசிய பொருட்களை வாங்க தொலைதூர கிராமத்திலிருந்து அருகில் உள்ள நகரத்துக்கு செல்ல வேண்டும். இப்போது ஷாப்பிங் என்பது மறுவரையரை செய்யப்பட்டுள்ளது, தொழில்நுட்பத்துக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். உங்களிடம் இன்டர்நெட் வசதி இருக்கும் வரை, நீங்கள் இப்போது வீட்டில் வசதியாக இருக்கலாம், மேலும் நீங்கள் விரும்பும் எதையும் ஆர்டர் செய்யலாம். தொழில்நுட்பமானது பொருட்கள் மற்றும் சேவைகளை 24 மணி நேரமும் அணுகுவதன் மூலம் உற்பத்தி திறனை மேம்படுத்தியுள்ளது.
அன்றிரவு நான் என் சமையல்காரருடன் ஆர்டர் செய்த போது நேரம் இரவு 10 மணி. அந்த காலத்தில் இந்த நேரம் கடைகள் மூடப்பட்டிருக்கும். அந்த காலத்துடன் ஒப்பிடுகையில் இது கற்பனை செய்ய முடியாத சாதனை. மாவை ஆன்லைனில் ஆர்டர் செய்யும் இந்த எளிய செயல் கடந்த காலத்துடன் ஒப்பிடும்போது இன்று நாம் வாழும் விதத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை பிரதிபலிக்கிறது. என்று தெரிவித்தார்.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!



Click it and Unblock the Notifications