இந்தியாவே நாளை வெளியாகும் இன்போசிஸ் ஜூன் காலாண்டு முடிவுகளுக்காக காத்திருக்கும் வேளையில் இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியும் அவருடைய காதல் மனைவி சுதா மூர்த்தியும் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்றுள்ளனர்.
இன்போசிஸ் மார்ச் காலாண்டு முடிவுகளுக்கு பின்பு இந்நிறுவன பங்குகள் அதிகளவிலான சரிவை எதிர்கொண்டு வருகிறது, இதேபோல் நாராயணமூர்த்தி, சுதா மூர்த்தி-யின் மருமகனும் பிரட்டன் நாட்டின் பிரதமருமான ரிஷி சுனக் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் Infosys நாராயணமூர்த்தி, சுதா மூர்த்தி திருப்பதி ஏழுமலையானை தரிசித்தது மட்டும் அல்லாமல் தங்க சங்கு மற்றும் தங்க ஆமை வடிவ பலகையை எழுமலையானுக்கு காணிக்கையாக கொடுத்துள்ளனர். இவ்விரு பொருட்களும் கடவுள் சிலைகளை சுத்தம் செய்வதற்காக பயன்படுத்தக்கூடியவை.
Infosys நாராயணமூர்த்தி, சுதா மூர்த்தி ஆகியோரின் நன்கொடை மற்றும் புகைப்படத்தை ஆந்திர முதல்வரின் ஆலோசகரான எஸ் ராஜீவ் கிருஷ்ணா டிவிட்டரில் வெளியிட்டார். இந்த தங்க சங்கு மற்றும் தங்க ஆமை வடிவ பலகையை திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் EO தர்மரெட்டி-யிடம் ஒப்படைத்துள்ளனர்.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் அதாவது TTD-யின் முன்னாள் நிர்வாக குழு உறுப்பினராக இருந்தவர் சுதா மூர்த்தி. சமீப காலமாக திருப்பதி-க்கு வரும் பெரிய தொழிலதிபர்களின் எண்ணிக்கையும், அவர்களின் நன்கொடையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கடந்த வருடம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி சுமார் 1.5 கோடி ரூபாய் பணத்தை ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ள திருப்பதியில் எழுமலையான் கோயிலுக்கு நன்கொடையாக அளித்தார்.
இந்த நிலையில் Infosys நாராயணமூர்த்தி, சுதா மூர்த்தி ஆகியோர் நன்கொடையாக கொடுத்த தங்க சங்கு மற்றும் தங்க ஆமை வடிவ பலகையின் மதிப்பு குறித்து வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை. நாராயணமூர்த்தி, சுதா மூர்த்தி ஆகியோர் திருப்பதி கோவிலுக்கு மட்டும் அல்லாமல் மக்கள் நல திட்டங்களுக்கும் பல நன்கொடைகளையும், நிதியுதவிகளை தனிப்பட்ட முறையிலும் தங்களுடைய இன்போசிஸ் பவுன்டேஷன் வாயிலாகவும் செய்து வருகின்றனர்.





Click it and Unblock the Notifications