சென்செக்ஸ் 700 புள்ளிகள் உயர்வு.. காலாண்டு முடிவுக்கு பின்பும் இன்போசிஸ் டக்கரான வளர்ச்சி..!!

இந்திய பங்குச் சந்தை நேற்றைய விடுமுறைக்கு பின்பு இன்று வெள்ளிக்கிழமை வலுவான ஏற்றத்துடன் துவங்கியுள்ளதால்ஸ முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியில் உச்சத்தில் உள்ளனர். ஈரானில் அமெரிக்க தாக்குதல் அச்சம் குறைந்தது, அமெரிக்க வட்டி விகித குறைப்புக்கான வாய்ப்புகள் என பல்வேறு காரணத்தால் தங்கம், வெள்ளி மீதான முதலீடுகள் குறைந்து பங்குச்சந்தைக்கு சாதகமாக மாறியுள்ளது.

வெள்ளிக்கிழமை வர்த்தகம் மங்களகரமாக துவங்குவது போல் சென்செக்ஸ் குறியீடு 700 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 84,000-ஐ நெருங்கியது. நிஃப்டி குறியீடு 25,800-ஐ மீண்டும் தொட்டது. இன்றைய உயர்வுக்கு ஐடி பங்குகளின் உயர்வு முக்கிய காரணமாக இருந்தன. இன்போசிஸ் நிறுவனத்தின் காலாண்டு முடிவுகளில் லாபத்தில் சரிவு ஏற்பட்டாலும், 2026ஆம் நிதியாண்டின் வருவாய் வளர்ச்சி உயர்த்தியது பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு பெரும் நம்பிக்கையை கொடுத்துள்ளது.

சென்செக்ஸ் 700 புள்ளிகள் உயர்வு.. காலாண்டு முடிவுக்கு பின்பும் இன்போசிஸ் டக்கரான வளர்ச்சி..!!

இன்போசிஸ் பங்கு NSE-யில் 4.86% உயர்ந்து ரூ.1,677.60 என்ற அளவீட்டை எட்டியது. இந்நிறுவனத்தின் அமெரிக்க ADR 10.4% உயர்ந்து 19.35 டாலராக முடிந்ததுள்ளது. கடந்த இரண்டு நாளில் அதாவது இன்போசிஸ் டிசம்பர் காலாண்டு முடிவுகள் வெளியான பின்பு ADR 7.4% உயர்ந்துள்ளது. இன்போசிஸ் Q3 முடிவுகளை வெளியிட்ட பிறகு ADR வியாழக்கிழமை 2.7% சரிந்திருந்த நிலையில், வெள்ளிக்கிழமை பெரிய ஏற்றம் கண்டது.

இன்போசிஸ் டிசம்பர் காலாண்டில் நிகர லாபம் 2% குறைந்து ரூ.6,654 கோடியாக இருந்தாலும், வருவாய் 9% உயர்ந்து ரூ.45,479 கோடியை எட்டியது. மேலும் இன்போசிஸ் 2026ஆம் நிதியாண்டின் நிலையான நாணய அடிப்படையில் வருவாய் வளர்ச்சி கணிப்பை 3-3.5% ஆக உயர்த்தியது. மேலும் ஆப்ரேட்டிங் லாபத்தின் மார்ஜின் கணிப்பை 20-22% என்ற அளவில் தொடர்ந்து வைத்திருக்கிறது.

சென்செக்ஸ் 700 புள்ளிகள் உயர்வு.. காலாண்டு முடிவுக்கு பின்பும் இன்போசிஸ் டக்கரான வளர்ச்சி..!!

இன்றைய வர்த்தகத்தில் ஐடி, வங்கி, நிதி சேவைகள், பொதுத்துறை வங்கி பங்குகள் ஆகியவை வலுவான வளர்ச்சியை கண்டுள்ளது. மேலும் ரியல் எஸ்டேட் மற்றும் உலோக பங்குகளும் ஏற்றத்தில் இருந்தன. FMCG பங்குகள் நிலையாக டிமாண்ட்-ஐ கொண்டு தொடர்ந்து உயர்வு பாதையில் உள்ளது.

இதோடு சில முக்கிய பாதுகாப்பான மற்றும் சுகாதார துறை நிறுவன பங்குகள் பின்தங்கியிருந்தாலும் மொத்த சந்தை வளர்ச்சி பாதையில் உள்ளது.

முதலீட்டு சந்தை நிபுணர்கள் இன்போசிஸ் காலாண்டு முடிவுகள் மற்றும் 2026ஆம் நிதியாண்டின் வருவாய், லாப கணிப்புகள் ஒட்டுமொத்த ஐடி துறைக்கு பெரும் நம்பிக்கையை அளித்ததாக கூறுகின்றனர். இந்த நம்பிக்கை வங்கி மற்றும் நிதி துறைகளுக்கும் பரவியது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+