இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான இன்போசிஸ் அதன் ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டு முடிவினை வெளியிட்டுள்ளது. இந்த நிறுவனம் லாபம் கண்டிருந்தாலும், கடந்த காலாண்டினை காட்டிலும் 16% குறைந்து, 6,128 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
இதே வருவாய் விகிதமானது கடந்த காலாண்டினை காட்டிலும் 2.2% குறைந்து, 37,441 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
நிலையான நாணயம் மதிப்பின் காரணமாக நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சியானது கடந்த காலாண்டினை காட்டிலும் 3.2% ஆகவும், இதே கடந்த ஆண்டினை காட்டிலும் 8.8% ஆகவும் சரிவினைக் கண்டுள்ளது.

இதே இந்த நிறுவனத்தின் செயல்பாட்டு மார்ஜின் விகிதமானது 4வது காலாண்டில் 21% ஆகவும் உள்ளது.
இப்படி பல்வேறு சூழலுக்கு மத்தியிலும் டிசிஎஸ் நிறுவனத்தின் டிவிடெண்ட் ஆனது, 17 ரூபாயாகவும் அறிவித்துள்ளது.
இந்த நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியான நிலஞ்சன் ராய் தொடர்ந்து செலவு மேம்படுத்தல் மற்றும் செயல்பாட்டுத் திறனில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறோம். இது எங்களது மார்ஜினை மேம்படுத்த உதவியது.
இந்த நிதி அறிக்கையின் தகவல் படி, இன்போசிஸ் நிறுவனத்தின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையானது, மார்ச் 2023 காலாண்டில் 3,43,234 ஆக இருந்தது. இது டிசம்பர் காலாண்டில் 3,46,845 ஆக இருந்தது. இது கடந்த மார்ச் காலாண்டில் 3611 பேரை பணி நீக்கம் செய்துள்ளது.
எப்படியிருப்பினும் கடந்த காலாண்டை காட்டிலும் நிறுவனத்தின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையானது, 29,219 ஊழியர்கள் அதிகரித்து 3,14,015 பேராக அதிகரித்துள்ளனர்.
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் அட்ரிஷன் விகிதமானது சற்றே குறைந்துள்ளது. 4வது காலாண்டில் 20.9% ஆக இருந்தது. இதே இது மூன்றாவது காலாண்டில் 27.7% ஆக இருந்தது.
இதன் மூலம் முதலீட்டாளர்களுக்கு டிவிடெண்ட் ஆனது கடந்த நிதியாண்டில் 17.50 ரூபாயாக அறிவித்துள்ளது. இதற்கு ஜூன் 2 ரெக்கார்டு தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 3, 2023 அன்று டிவிடெண்ட் அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் வரிக்கு பிந்தைய லாபம் 4வது காலாண்டில் 5.89% அதிகரித்து, 5,787 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
நிஃப்டி ஐடி குறியீடானது 637.50 புள்ளிகள் அல்லது 2.2% குறைந்து, 28,342.80 புள்ளிகளாக காணப்பட்டது. அனைத்து ஐடி பங்குகளும் சிவப்பு நிறத்தில் காணப்பட்டன.

இன்றைய அமர்வில் எல்டிஐ மைண்ட் ட்ரீ 4% சரிந்து டாப் லூசராகவும், பெர்சிஸ்டன்ஸ் சிஸ்டம்ஸ் மற்றும் இன்ஃபோசிஸ் பங்கானது முறையே 3.1% மற்றும் 3% மேலாகவும் சரிவினைக் கண்டுள்ளது.
இதே எம்பசிஸ் பங்கு விலையானது 2.8% சரிவினைக் கண்டும், டெக் மகேந்திரா மற்றும் ஹெச் சி எல் பங்கு முறையே 2.2% மற்றும் 2.01% குறைந்தும், டிசிஎஸ் பங்கு விலை 1.53% சரிவினைக் கண்டும், மற்ற முக்கிய நிறுவனங்களான விப்ரோ, கோபோர்ஜ் மற்றும் எல்டிடிஎஸ் உள்ளிட்ட பங்குகள் 1% மேலாக சரிவில் காணப்படுகின்றது.
இதற்கிடையில் இன்ஃபோசிஸ் பங்கு விலையானது முடிவில் என் எஸ் இ-யில் 2.74% குறைந்து, 1389.20 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதன் இன்றைய உச்ச விலை 1411.05 ரூபாயாகவும், இதன் இன்றைய குறைந்தபட்ச விலை 1383 ரூபாயாகவும் முடிவடைந்துள்ளது.
பிஎஸ்இ-யில் இப்பங்கு விலை 2.79% குறைந்து, 1388.60 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதன் இன்றைய உச்ச விலை 1413 ரூபாயாகவும், இதன் இன்றைய குறைந்தபட்ச விலை 1383.60 ரூபாயாகவும் முடிவடைந்துள்ளது.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications