இன்போசிஸ் பங்குகளில் ஏற்பட்ட தடாலடி சரிவு அதன் பங்குகளை லோவர் சர்கியூட் அளவீட்டுக்கு தள்ளியது மட்டும் அல்லாமல் இந்நிறுவனத்தின் முக்கிய முதலீட்டாளரான LIC-க்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுமட்டும் அல்லாமல் இன்போசிஸ் நாராயணமூர்த்தி அவர்களின் குடும்பமும் பெரும் இழப்பை எதிர்கொண்டு உள்ளது.
இந்தியாவின் 2வது பெரிய ஐடி சேவை மற்றும் மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான இன்போசிஸ், வியாழக்கிழமை மார்ச் காலாண்டு முடிவுகளை வெளியிட்டது. இக்காலாண்டில் இன்போசிஸ் 8 சதவீத உயர்வுடன் 6,128 கோடி ரூபாய் லாபத்தையும், 16 சதவீத வருடாந்திர உயர்வில் 37,441 கோடி ரூபாய் லாபத்தையும் பெற்றுள்ளது.

மார்ச் காலாண்டு முடிவில் இன்போசிஸ் நிர்வாகம் தனது ரீடைல் முதலீட்டாளர்கள், பங்குதாரர்களுக்கு ஒரு பங்கிற்கு 17.50 ரூபாயை ஈவுத்தொகையாக கொடுக்க உள்ளதாக அறிவித்துள்ளது. ஆனாலும் பங்கு முதலீட்டாளர்களுக்கு இன்போசிஸ் நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத காரணத்தால் திங்கட்கிழமை வர்த்தகத்தில் இன்போசிஸ் பங்குகள் 12 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.
இன்போசிஸ் பங்குகள் திங்கட்கிழமை காலை வர்த்தகத்தில் 1,219 ரூபாய் வரையில் சரிந்து 52 வார சரிவை பதிவு செய்துள்ளது. இதன் மூலம் இன்போசிஸ் பங்குளை வைத்திருக்கும் அனைத்து முதலீட்டாளர்களையும் இந்த சரிவு பாதித்துள்ளது, வியாழக்கிழமை வர்த்தகத்தில் 1388.60 ரூபாய்க்கு முடிந்த இன்போசிஸ் பங்குகள் இன்று 1,219 ரூபாய் வரையில் சரிந்துள்ளது.
Coca Cola : இந்திய ஸ்டார்ட்அப்-ல் முதல் முறையாக முதலீடு.. Thrive-க்கு ஜாக்பாட்..!
இன்போசிஸ் நிறுவனத்தில் 7.71 சதவீதம் அல்லது 28,13,85,267 பங்குகளை நாட்டின் முன்னணி ஆயுள் காப்பீட்டு நிறுவனமான LIC வைத்துள்ளது. வியாழக்கிழமை வர்த்தக முடிவின் போது இந்த 7.71 சதவீத பங்குகளின் மதிப்பு மட்டும் 39,073 கோடி ரூபாய், இந்த நிலையில் இன்று காலை வர்த்தகத்தில் பதிவான 15 சதவீதம் வரையிலான சரிவு மூலம் கிட்டத்தட்ட 5000 கோடி ரூபாய்க்கும் அதிகமான இழப்பை எல்ஐசி எதிர்கொண்டு உள்ளது.

இதோடு எஸ்பிஐ மியூச்சவல் பண்ட் 2,239.55 கோடி ரூபாயும், ICICI Prudential மியூச்சவல் பண்ட் 1,226.79 கோடி ரூபாயும் இன்று இழப்பை எதிர்கொண்டு உள்ளது. மேலும் இன்போசிஸ் பங்குகள் 12-15 சதவீத சரிவில் இருந்து தற்போது 10 சதவீத சரிவுக்கு வந்துள்ளது.
இதன் வாயிலாக இன்போசிஸ் துணை நிறுவனரும், நீண்ட காலமாக சிஇஓ பதவியில் இருந்தவருமான நாராயணமூரத்தி இன்றைய வர்த்தகத்தில் 231.12 கோடி ரூபாயும், அவருடைய மனைவி சுதா மூர்த்தி 480 கோடி ரூபாயும் இழப்பை சந்தித்துள்ளனர்.
இதோடு இன்போசிஸ் துணை நிறுவனர் நாராயணமூரத்தி-யின் மகனான ரோஹன் மூர்த்தி 8444.47 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வைத்திருக்கும் இன்று ஒரு நாளில் மட்டும் 844 கோடி ரூபாய் இழப்பை எதிர்கொண்டு உள்ளார். இதேபோல் நாராயணமூரத்தி-யின் மகளும், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்-ன் மனைவியுமான அக்ஷதா மூர்த்தி இன்போசிஸ்-ல் 1.07 கோடி ரூபாய் பங்குகளை வைத்திருக்கும் நிலையில் 541 கோடி ரூபாய் இழப்பை எதிர்கொண்டு உள்ளார்.

மேலும் இன்போசிஸ் துணை நிறுவனரான கிரிஸ் கோபாலகிருஷ்ணன் மனைவி இன்போசிஸ் நிறுவனத்தின் 2.61 சதவீத பங்குகளை வைத்திருக்கும் நிலையில், இன்றைய சரிவின் மூலம் 1,324 கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளார்.
மார்ச் 31, 2023 உடன் முடிந்த காலாண்டில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனத்தின் மொத்த லாபம் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 14.8 சதவீதம் அதிகரித்து 11,436 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. மேலும் டிசிஎஸ் நிறுவனத்தின் மொத்த வருமானம் 16.9 சதவீதம் வளர்ச்சி அடைந்து 59,162 கோடி ரூபாயாக உள்ளது.


Click it and Unblock the Notifications