இந்தியப் பங்குச் சந்தை கடந்த வாரம் கணிசமான வீழ்ச்சியைச் சந்தித்தது முதலீட்டாளர்களைக் கண்ணீர்விட வைத்தது, கடந்த வார சரிவுக்கு 2 முக்கிய காரணங்கள் முன்வைக்கப்படுகிறது, முதலாவதாக அமெரிக்காவின் புதிய அதிபராக டிரம்ப் பதவியேற்பது. 2வது இந்தியாவின் முன்னணி கார்ப்ரேட் நிறுவனங்களின் மந்தமானக் காலாண்டு முடிவுகள்.
இவ்விரு காரணத்தால் இந்தியப் பங்குச்சந்தையில் இருக்கும் முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பில் கணிசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள் 0.98% மற்றும் 0.97% வீழ்ச்சியடைந்தன. இதனால் இந்திய பங்குச்சந்தையில் இருக்கும் டாப் பத்து மதிப்புமிக்க (Mcap) நிறுவனங்களில் ஆறு நிறுவனங்களின் மதிப்பு பெரும் சரிவைச் சந்தித்துள்ளது.

இந்தியப் பங்குச்சந்தையில் சந்தை மதிப்பீட்டளவில் டாப் 10 நிறுவனங்களின் மதிப்பு கடந்த வாரம் மட்டும் 1,71,680 கோடி ரூபாய் அளவில் இழந்துள்ளது. டாப் 10ல் ரிலையன்ஸ், ஏர்டெல், எஸ்பிஐ, எல்ஐசி ஆகியவற்றின் சந்தை மதிப்பு மட்டும் உயர்ந்துள்ளது.
இதில் அதிகம் பாதிக்கப்பட்ட நிறுவனமாக இன்ஃபோசிஸ் உள்ளது. இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.62,948.4 கோடி வீழ்ச்சியடைந்துள்ளது. டிசம்பர் காலாண்டின் நிதி முடிவுகள் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து நிறுவனத்தின் பங்குகள் கடுமையாக வீழ்ச்சியடைந்தன.
இன்போசிஸ் நிறுவனத்தைத் தொடர்ந்து மற்றொரு ஐடி சேவை நிறுவனமான டி.சி.எஸ்-ன் சந்தை மதிப்பும் ரூ.50,598.95 கோடி குறைந்துள்ளது. எச்.டி.எப்.சி வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, ஹிந்துஸ்தான் யுனிவர்சல், ஐ.டி.சி. உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் சந்தை மதிப்பும் ரூ.15,640.8 கோடி, ரூ.16,005.84 கோடி, ரூ.20,605.92 கோடி, ரூ.5,880.51 கோடி அளவில் குறைந்துள்ளது.
இதேவேளையில் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியங்களில் முக்கியமானதாகத் திகழும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் காலாண்டு முடிவுகள் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருந்த காரணத்தால் இதன் சந்தை மதிப்பு ரூ.79,773.34 கோடி அதிகரித்துள்ளது.
இதேபோல் பொதுத்துறை வங்கியாக இருக்கும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் சந்தை மதிப்பும் ரூ.18,697.08 கோடி அதிகரித்துள்ளது. லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (எல்.ஐ.சி.) மற்றும் பார்தி ஏர்டெல் ஆகிய நிறுவனங்களின் சந்தை மதிப்பும் உயர்ந்துள்ளது.
இப்படியிருக்கையில் ஜனவரி 20ஆம் தேதி துவங்கும் வாரத்தில் இந்திய பங்குச்சந்தை மந்தமாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜனவரி 20ஆம் தேதி அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்கும் வேளையில் சர்வதேச முதலீட்டுச் சந்தையில் கட்டாயம் பெரும் மாற்றம் இருக்கும் காரணத்தால் இந்திய பங்குச்சந்தையில் அன்னிய முதலீட்டாளர்கள் அதிகளவிலான பங்குகளை விற்பார்கள் என கணிக்கப்பட்டு உள்ளது.
இதேவேளையில் டிரம்ப் அதிபராகப் பதவியேற்கும் முதல் நாளில் ஏறத்தாழ 100 உத்தரவுகளில் கையெழுத்திடும் காரணத்தால் இந்த உத்தரவுகளின் எதிரொலியும் இந்தியப் பங்குச்சந்தையில் இருக்கும். அதேவேளையில் பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய அரசு 2025-26ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையைத் தாக்கல் செய்ய உள்ளது, இதுவும் முதலீட்டுச் சந்தையில் புதிய முதலீடுகளை ஈர்க்க முக்கிய காரணியாக இருக்கும்.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!



Click it and Unblock the Notifications