லண்டன் தங்க குடோன்.. பார்த்தாலே தலை சுத்துதே.. தெறிக்கவிடும் வீடியோ..!

சமீபத்தில் இந்திய ரிசர்வ் வங்கி, பிரிட்டன் நாட்டில் இருந்து கிட்டத்தட்ட 100 டன்னுக்கும் அதிகமான தங்கக் கட்டிகளை இந்தியாவுக்குக் கொண்டு வந்தது பலருக்கும் நினைவிருக்கும். உலகளவில் மத்திய வங்கிகள் தங்கக் கையிருப்பை அதிகரித்து வருகின்றன. இப்படி வாங்கப்படும் பெரும்பாலான தங்கம் லண்டன் தங்க லாக்கரில் இருக்கும்.

இந்தியா மட்டும் அல்லாமல் உலக நாடுகள் அனைத்தும் இதுபோன்று தங்கத்தை அவ்வப்போது வாங்கி லண்டன் தங்க லாக்கரில் வைத்திருக்கும். இப்படி வாங்கும் தங்கம் வெகு சில அளவு மட்டுமே சொந்த நாட்டுக்குச் செல்லும், மீதமுள்ள தங்கம் அந்தந்த நாட்டின் நிதி நிலையைச் சரி செய்யப் பயன்படுத்தப்படுகிறது.

லண்டன் தங்க குடோன்.. பார்த்தாலே தலை சுத்துதே.. தெறிக்கவிடும் வீடியோ..!

இந்தியா உட்பட உலக நாடுகள் அனைத்தும் வாங்கும் தங்கம் இந்த லாக்கரில் இருக்கும் என்றால் டன் கணக்கில் தங்கம் பாதுகாக்கப்படும் இந்த லாக்கர் எப்படியிருக்கும் என்பது தான் எல்லோருடைய கேள்வியும். வாங்க லண்டன் தங்க வால்ட-க்கு கூட்டிச் செல்கிறேன்.

லண்டன் நகரின் மையப்பகுதியில், திரெட்நீடுல் (Threadneedle) தெருவில் உள்ள பிரிட்டன் நாட்டின் மத்திய வங்கியான பேங்க் ஆப் இங்கிலாந்து கட்டிடத்தினுள் நிலத்தடியில் ஒரு மிகப்பெரிய தங்கப் பாதுகாப்பு வால்ட் (Vault) உள்ளது. இது தான் உலகின் மிகப்பெரிய தங்கச் சேமிப்பு இடங்களில் ஒன்றாக உள்ளது.

Bank of England-ன் gold vault-ல் சுமார் 4 லட்சம் தங்க கட்டிகள் பாதுகாக்கப்படுகின்றன. சுமார் 3 லட்சம் சதுர அடி பரப்பளவில் பரந்து விரிந்த 9 நிலத்தடி வால்ட்களில் இந்தத் தங்கம் பாதுகாக்கப்படுகிறது. இங்கு இந்தியா, சீனா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா என உலகின் பல நாடுகளுக்குச் சொந்தமான தங்கம் உள்ளது.

லண்டனில் இந்த தங்க லாக்கர் இருக்க முக்கியமான காரணம் ஆசிய நாடுகளுக்கு லண்டன் புல்லியன் சந்தையில் தான் அதிகப்படியான தங்கத்தை வாங்கி விற்கும். இப்படி வாங்கப்படும் தங்கம் ஒவ்வொரு முறையும் தங்கள் நாடுகளுக்குக் கொண்டு செல்வது என்பது பாதுகாப்பு அச்சம் மற்றும் போக்குவரத்து செலவு நிறைந்தது.

இதனால் இந்த தங்க லாக்கர் மூலம் உலக நாடுகள் வாங்கும் விற்கும் தங்கத்தை கணக்கில் வைக்கப்பட்டு நிர்வாகம் செய்யப்படுகிறது. 4 லட்சம் தங்க கட்டிகள் எனில் ஒவ்வொரு பெரிய தங்க கட்டிகளும் 10 கிலோவுக்கு மேல் இருக்கும். சர்வதேச அளவில் வர்த்தகம் செய்யப்படும் தங்க கட்டிகள் ஒரு கிலோ அளவில் தான் இருக்கும், ஆனால் இதுப்போன்று பெரிய நிதி பரிமாற்றம், சேமிப்புக்குச் செல்லும் போது 10 கிலோ கட்டிகளாக வர்த்தகம் செய்யப்படுகிறது.

4 லட்சம் தங்க கட்டிகள் இருக்கும் 9 மெகா சைஸ் லாக்கர்களை இங்கு உலகத்தரம் வாய்ந்த மின்னணு பாதுகாப்பு அமைப்புடன் பாதுகாக்கப்படுகிறது. தங்கக் கட்டிகளின் பாதுகாப்பு மற்றும் இது எப்படி கையாளப்படுகிறது என்பதை இப்போது பார்ப்போம்.

இரும்பு மற்றும் மரத்தால் ஆன திடமான தட்டுகள்: ஒவ்வொரு தட்டிலும் 80 தங்கக் கட்டிகள் வைக்கப்படுகின்றன. இதன் எடை சுமார் ஒரு டன். இத்தட்டுகளை ஃபோர்க்லிஃப்ட் மூலம் எளிதாக நகர்த்த முடியும்.

அல்ட்ராசவுண்ட் ஸ்கேனர்: தங்க வால்ட்-க்குள் கொண்டு செல்லப்படும் ஒவ்வொரு தங்கக் கட்டியிலும் சேதம் அல்லது துளைகள் ஏதேனும் உள்ளதா என்பதை அல்ட்ராசவுண்ட் ஸ்கேனர் மூலம் ஸ்கேன் செய்யப்படும். தங்க வால்ட்-க்குள் மின்னணு பாதுகாப்பு அமைப்பின் ஒரு பகுதியாக இது செயல்படுகிறது.

தங்க வால்ட்-க்குள் செல்ல மூன்று அடி அல்லது ஒரு மீட்டருக்கு சற்று குறைவான நீளமுள்ள ஒரு பெரிய சாவி உள்ளது. இந்த பாதுகாப்பு வால்ட்-க்குள் களஞ்சியத்தில் இங்கிலாந்து அரசு, வங்கிகள் மற்றும் உலகின் பிற நாட்டு அரசுகளின் தங்கம் பாதுகாக்கப்படுகிறது. ஒவ்வொரு தங்கக் கட்டியின் மதிப்பும் லட்சக்கணக்கான பவுண்டுகளாகும்.

இந்த தங்கக் கட்டிகளின் மதிப்பு தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும். இங்கிலாந்து வங்கியில் உள்ள வாடிக்கையாளர்கள் தங்களுக்குள்ளேயே தங்கக் கட்டிகளை வாங்கி, விற்று மாற்றிக்கொள்ளலாம். அப்போது தங்கம் நகர்த்தப்படுவதில்லை. மாறாக, கணக்கு வைக்கப்படுகிறது.

இங்கிலாந்து ஒரு தீவு நாடாக இருப்பதால், நிலையான பொருளாதாரம் மற்றும் தங்கச் சந்தையின் மையமாக இருப்பதால், பல ஐரோப்பிய நாடுகள் தங்கள் தங்கத்தைப் பாதுகாப்பான இடமாக கருதி இங்கிலாந்துக்குக் கொண்டு வந்து சேமித்து வைத்துள்ளன. 20 ஆம் நூற்றாண்டில் உலகம் முழுவதிலும் இருந்து தங்கம் இங்கிலாந்து வங்கிக்குப் பாதுகாப்பிற்காகக் கொண்டு வரப்பட்டது.

இந்த தங்க வால்ட்-ல் இருக்கும் மொத்த தங்கத்தில் இங்கிலாந்து அரசுக்கு சொந்தமான தங்கம் வெறும் 6 சதவீதம் மட்டுமே. மீதமுள்ள 4 லட்சம் தங்கக் கட்டிகளும் பிற நாடுகளின் மத்திய வங்கிகள் மற்றும் இதர நிறுவனங்களுக்கு சொந்தமானது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+