நீங்கள் இட்லி, தோசை செய்வதற்கு கடையில் இருந்து ரெடிமேட் மிக்ஸ் (Ready made mix) மாவுகளை வாங்குகிறீர்களா? அப்படியானால் இந்த செய்தி உங்களுக்கு முக்கியமானது. இட்லி, தோசை போன்ற உணவு வகைகளுக்கு உபயோகப்படுத்தும் மாவு கலவைகள் "சத்து மாவு" மாதிரி இல்லை. எனவே, இந்த கலவைகளுக்கு 18% ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டும் என்று குஜராத் மாநில நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
உணவுத்துறையில் தற்போது அதிக மாற்றங்கள் வந்துள்ளன. அந்த வகையில் அடுப்பங்கறையில் நின்று நீண்ட நேரத்திற்கு சமைத்து சாப்பிடுவதை விட, இன்ஸ்டன்ட் முறையில் சமைப்பதற்கான நிறைய பொருட்கள் தற்போது சந்தையில் விற்கப்படுகிறது . அந்த வகையில் புளிசாதம், லெமன் சாதம் போன்றவற்றை செய்வதற்கான பேஸ்டுகள், ஏன் பிரியாணிக்கும் பேஸ்ட் வடிவில் மசாலாக்கள் விற்கப்படுகின்றன. நீங்கள் அவற்றை வாங்கி உடனடியாக பிரியாணி செய்துவிடலாம். இதே போல் இட்லி தோசை மாவிற்கு பவுடர் உள்ளது. சமைப்பதற்கு தயார் நிலையில் இருக்கும் இது போன்ற சில பொருட்களுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது.

வழக்கு மற்றும் வாதங்கள்: குஜராத்தைச் சேர்ந்த நிறுவனமான கிச்சன் எக்ஸ்பிரஸ் ஓவர்சீஸ் லிமிடெட், தங்கள் ஏழு "instant flour mixes" என்று சொல்லப்படுகிற சமைக்கத் தயார் (ready to cook) நிலையில் இருக்கும் உணவு பொருட்கள் என்றும், மேலும், தங்கள் தயாரிப்புகள் சத்து மாவு போன்றவை என்றும், எனவே அவற்றின் மீது 5% ஜிஎஸ்டி விதிக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தது.
இந்த நிறுவனம் காமன், டல்வாடா, தஹி-வடை, தோக்லா, இட்லி மற்றும் தோசை ஆகியவற்றின் மாவு கலவைகளை தூள் வடிவில் விற்பனை செய்கிறது, மேலும் இது சத்து மாவு போன்றது என்றும், சரக்கு மற்றும் சேவை வரியை (GST) 5 சதவீதமாக குறைக்க வேண்டும் என்றும் கூறியது.
இந்த நிறுவனத்தின் மேல்முறையீட்டை குஜராத் மேல்முறையீட்டு ஆணையம் நிராகரித்தது. "ரெடி டு மிக்ஸ்" தயாரிப்புகளுக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் சத்துமாவை போல இல்லை. எனவே அவை ஜிஎஸ்டி வரிகளின் கீழ் வராது என்று கூறியது.
சிறிய அளவிலான பொருட்கள், சத்து மாவுகள் தயாரிப்பதற்காக கலக்கப்படுகின்றன. அவை 5% வரி விகிதத்திற்கு தகுதியுடையதாக GST விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. இருப்பினும், இந்நிறுவனத்தின் தயாரிப்புகளில் மசாலா மற்றும் பிற பொருட்கள் இருப்பதால், 5 சதவீத GST இவர்களுக்குப் பொருந்தாது என்று குஜராத் மேல்முறையீட்டு ஆணையம் கூறியது.
இந்த "ரெடி டு மிக்ஸ்" உணவுப் பொருட்க்களைப் பயன்படுத்துவதற்கு முன், சில உணவு தயாரிப்பு செயல்முறைகளை பின்பற்ற வேண்டும். சான்றாக இட்லி தோசை பவுடராக இருந்தால், அவற்றில் தண்ணீரையோ அல்லது தயிரையோ ஊற்றி அதன் பிறகே மாவாக மாற்ற வேண்டும். அதற்கு 5 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படக்கூடாது என்று மேல்முறையீட்டு ஆணையம் கூறியது.
தொடர்ந்து எந்தெந்த உணவு பொருட்கள் ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் வகைப்படுத்துவது என்ற பிரச்சனைகள் இருந்த வண்ணம் உள்ளன. இது தொடர்பான விஷயங்களுக்கு சுற்றறிக்கைகள் வழங்கப்பட்ட போதிலும், அவற்றில் உள்ள விளக்கங்களில் அடிக்கடி பல்வேறு காரணங்களால் சவால்களை சந்திக்க நேரிடுகிறது என்று KPMG நிறுவனத்தின் வரி பிரிவின் தலைவர் மற்றும் கூட்டாளரான அபிஷேக் ஜெயின் தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications