பொதுவாக, சாதாரண மக்களின் கடைசி கட்ட நண்பன், தங்கம் என்பார்கள். காரணம், இந்த தங்கத்தை வைத்து அவர்களின் எதிர்பாரா செலவுகளை எல்லாம் சமாளித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
எனவே கொஞ்சமாவது தங்கத்தை வாங்கிப் போடுவது தான், வெகு ஜன மக்களின் இயல்பு.
ஆனால் இப்போது சர்வதேச தங்கத்தின் விலை, மீண்டும் கியர் போட்டு, தன் சமீபத்தைய உச்ச விலையைத் தொட்டு இருக்கிறது.
சர்வதேச தங்க விலை
அமெரிக்காவில் தங்க ஃப்யூச்சர்ஸின் விலை சுமாராக 1,723 டாலரைத் தொட்டு இருக்கிறது. ஒரு அவுன்ஸ் சர்வதேச ஸ்பாட் தங்கத்தின் விலை கிட்டத்தட்ட தன் சமீபத்தைய உச்சமான 1,680 டாலரைத் தொட்டு இருக்கிறது. 1,679.68 டாலரைத் தொட்டு வர்த்தகமாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
டாலர்
அதோடு டாலரும் வலு பெறத் தொடங்கி இருக்கிறது. இப்படி முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை முதலீடு செய்ய வாய்ப்பு கிடைத்தால் தங்கத்தின் விலை குறைய வேண்டும். ஆனால் ஆபரணத் தங்கத்தின் விலை டிரெண்டில் அப்படி ஒரு மாற்றத்தைப் பார்க்க முடியவில்லை. விலை நிலையாக 44,000 ரூபாய்க்கு மேலேயே இருக்கிறது. ஆக இப்போது வரை தங்கம் தான் முதலீடு செய்ய சரியான இடமாக சந்தையில் முதலீட்டாளர்கள் உணர்கிறார்கள் போல.
தங்கம் இறக்குமதி
இந்த சிக்கல்கள் எல்லாம் ஒரு பக்கம் போய்க் கொண்டு இருக்க, இந்தியாவின் தங்க இறக்குமதி, கடந்த மார்ச் 2020-ல் சுமார் 73 % சரிந்து இருக்கிறதாம். இது மார்ச் 2019 உடனான ஒப்பீடு. தங்கத்தின் இறக்குமதி குறைவதற்கு, தங்கம் அதிக விலை ஏற்றம் காண்பது மற்றும் இந்தியாவில் லாக் டவுன் செய்யப்பட்டு இருப்பதால் போதுமான அளவு வியாபாரம் ஆகவில்லை எனச் சொல்கிறார்கள்.
எம் சி எக்ஸ்
இந்தியாவில் 10 கிராம் தங்கத்துக்கான ஜூன் மாத ஃப்யூச்சர்ஸின் விலை 45,200 ரூபாயாக வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. இதுவே ஆகஸ்ட் மாதத்துக்கான 10 கிராம் தங்கத்துக்கான ஃப்யூச்சர்ஸ் 45,350 ரூபாய்க்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. ஆக இந்திய தங்க ஃப்யூச்சரும் தங்கத்தின் விலை ஏற்றத்தை உறுதி செய்கிறது.
சென்னை தங்கம் விலை
சென்னையில் 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று 44,040 ரூபாய்க்கு விற்று வருகிறார்கள். அமெரிக்காவில் தங்க ஃப்யூச்சர்களின் விலை 1,700 டாலரைத் தாண்டி வர்த்தகமாவது, ஸ்பாட் தங்கத்தின் விலை 1,679 டாலரைத் தொட்டது, பங்குச் சந்தைகள் ஏற்றம் கண்டும் தங்கத்தின் விலை ஏற்றம் காண்பது, எம் சி எக்ஸ் சந்தையில் தங்கத்தின் ஃப்யூச்சர்ஸ் விலை அதிகரிப்பது, டாலர் மதிப்பு அதிகரிப்பது போன்ற காரணங்களால், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவே தெரிகிறது.
ஜிம் ராஜர்ஸ்
இந்த கொரோனா வைரஸ் பிரச்சனை ஒரு முடிவுக்கு வருவதற்குள், பங்குச் சந்தைகள் எல்லாம் வழக்கம் போல நிலையாக வர்த்தகமாகத் தொடங்குவதற்குள், தங்கம் ஒரு நல்ல விலை ஏற்றத்தைக் காணும் எனச் சொல்லி இருந்தார் உலக புகழ் பெற்ற கமாடிட்டி முதலீட்டாளர் ஜிம் ராஜர்ஸ். அவர் சொன்ன படி, தங்கத்தின் விலை அடுத்த கியரைப் போட்டு மேலே ஏறிக் கொண்டு இருக்கிறது. இன்னும் எவ்வளவு ரூபாய் உயரும் என்று தான் தெரியவில்லை.
More From GoodReturns

கோயம்புத்தூரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

Gold price: நகை பிரியர்களுக்கு குட் நியூஸ் வருமா? 3வது நாளாக குறைந்த தங்கம் விலை மீண்டும் குறையுமா?

Gold Update: தாறுமாறாக எகிறும் விலை! சென்னை, கோவையில் தங்கம் விலை எப்படி?சாமானியர்கள் அதிர்ச்சி!

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?



Click it and Unblock the Notifications