தங்கம் விலை சர்வதேசச் சந்தையில் கதறக் கதற உயர்ந்து வருகிறது. ஒருபக்கம் முதலீட்டாளர்கள் எந்த பக்கம் சொல்வது என தெரியாமல் இருக்கின்றனர், மறுபுறம் செய்த முதலீட்டைச் சரிவில் இருந்து காப்பாற்ற எதில் முதலீடு செய்யலாம் என்ற குழப்பத்தில் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் ஒரே புகலிடமாக்க இருப்பது தங்கம் தான்.
அமெரிக்கச் சந்தையில் வெள்ளிக்கிழமை வர்த்தகம் முடியும் போது தங்கம் விலை ஸ்பாட் சந்தையில் வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 3,086 அமெரிக்க டாலர்களைத் தொட்டு, பின்னர் 3,085 டாலர் விலையில் முடிந்துள்ளது. இதன் மூலம் இந்திய ரூபாய் மதிப்பில் 10 கிராம் தங்கம் விலை 93100 ரூபாயை தொட்டுள்ளது.

இந்த தடாலடி விலை உயர்வுக்கு முக்கிய காரணம் டிரம்ப்-ன் விரி விதிப்பாக இருந்தாலும், நேற்றைய திடீர் உயர்வுக்கு முக்கிய காரணம் அமெரிக்கப் பங்குச்சந்தையிலும், கிரிப்டோ சந்தையிலும் பதிவான மோசமான சரிவு தான்.
அமெரிக்கச் சந்தையில் முதலீட்டு செய்துள்ள உலகளாவிய முதலீட்டாளர்கள் தங்கள் பங்குச் சந்தை மற்றும் கிரிப்டோகரன்சி முதலீடுகளை விற்று, பாதுகாப்பான முதலீட்டுத் தலமான தங்கத்தை நோக்கிப் படையெடுத்துள்ளதால் நேற்றைய வர்த்தகத்தில் 3068 டாலரில் இருந்து 3086 டாலர் வரையில் உயர்ந்துள்ளது. இதன் மூலம் தங்கத்தின் விலையில் 3,100 டாலர் என்பது புதிய பென்ச்மார்க் விலையாக இருக்கும் எனப் பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை அமெரிக்கப் பங்குச்சந்தை மற்றும் கிரிப்டோ கரன்சி சந்தையை மோசமான நிலைக்குச் செல்ல முக்கியமான காரணமாக இருப்பது அமெரிக்காவின் பிப்ரவரி மாத தனிநபர் நுகர்வு செலவினங்கள் (PCE) தரவுகள் வெளியானது தான். மாதாந்திர PCE குறியீடு 0.4% ஆக அதிகரித்துள்ளது, இது எதிர்பார்க்கப்பட்ட 0.3% ஐ விட அதிகமாகும். இது அமெரிக்காவில் பணவீக்கத்தின் அதிகரித்திருப்பதைப் படம் போட்டுக் காட்டியுள்ளது.
அமெரிக்காவில் பணவீக்கம் குறித்த கவலைகள் அதிகரித்துள்ள காரணத்தாலும், டிரம்ப்-ன் வரி விதிப்பால் ஏற்படும் பாதிப்பும் அந்நாட்டில் விரைவில் ரெசிஷன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் முதலீட்டாளர்கள் முன்கூட்டியே தங்களுடைய முதலீட்டைப் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றி வருகின்றனர். இதன் விளைவாகவே தங்கம் விலை வெறும் 7 நாளில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 3003 டாலரில் இருந்து 3086 டாலர் விலைக்கு உயர்ந்துள்ளது.
இந்த விலை மாற்றம் இந்திய சந்தையில் கட்டாயம் எதிரொலிக்கும், ஆனால் இந்தியாவில் ஏற்கனவே தங்கம் விலை அதிகமாக இருக்கும் காரணத்தால் சாமானிய மக்கள் தங்கம் வாங்கவதை அதிகளவில் குறைத்துள்ளனர். இதனால் இந்திய சந்தையில் டிமாண்ட் குறைந்து தங்கம் விலையில் தேக்க நிலை உருவாகியுள்ளது, அதாவது விலை அளவு சர்வதேச சந்தைக்கு ஏற்ப மட்டுமே திருத்தம் செய்யப்பட்டு வருகிறது, உள்நாட்டு காரணிகள் கணக்கில் சேர்க்கப்படுவது இல்லை.
More From GoodReturns

ஈரான் போர் குறித்த டிரம்பின் ஒற்றை அறிவிப்பு..!! தாறுமாறாக சரிந்த தங்கம் விலை..!!

தங்கம் விலையில் நடந்த திடீர் டிவிஸ்ட்!! 6 மணி நேரத்தில் நடந்த அதிரடி மாற்றம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

ஈரான் போர் நிறுத்தம்: உயர்ந்தது தங்கம் விலை; சரிந்தது கச்சா எண்ணெய் விலை!! ஓவர் நைட்டில் எல்லாமே மாறியது!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

தங்கம் , வெள்ளி விலை தடாலடி உயர்வு: இனி தங்கம் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியாது!!

தங்கம் விலையில் அதிரடி திருப்பம்! டிரம்ப் கொடுத்த போர் நிறுத்த ட்விஸ்ட்! அடுத்து என்ன நடக்கும்?

கோவையில் இன்று தங்கம் விலை அதிரடி சரிவு; இந்த நிலை அப்படியே நீடிக்குமா?

ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டாலும் கப்பல்கள் இயக்குவதில் சிக்கல்!! ஈரானால் எழுந்த புதிய பிரச்சினை!!

மதுரை மக்களே உங்க ஊரில் இன்று தங்கம் விலை குறைந்ததா? உயர்ந்ததா?

மதுரை மக்களே இன்று தங்க நகை வாங்கலாமா? உங்க ஊரில் ஒரு சவரன் விலை என்ன?



Click it and Unblock the Notifications