சாமானிய மக்களும் பயன்படுத்தும் அளவுக்கு விமான பயணம் மாறி விட்டது. அதற்கு முதல் காரணம் மக்கள் இப்போது பணத்தை விட நேரத்தை பெரிதாக கருத தொடங்கி விட்டனர் அடுத்ததாக விமான நிறுவனங்கள் அதிரடி ஆஃபர்களை வழங்குகின்றன. பண்டிகை மற்றும் விடுமுறை காலம் என்பதால் தங்கள் சொந்து ஊருக்கு செல்ல அல்லது சுற்றுலா செல்வதற்காக மக்கள் அதிகளவில் விமானங்களில் டிக்கெட் வாங்குகின்றனர்.
விமான நிறுவனங்கள் டிக்கெட்டுகளில் பெரிய தள்ளுபடி வழங்குகின்றன. இதனை பயன்படுத்தி மோசடி செய்பவர்கள் போலி விமான டிக்கெட்டை தள்ளுபடி மூலம் வாடிக்கையாளர்களை ஏமாற்றுகிறார்கள். தற்போது இது போன்ற விமான டிக்கெட் மோசடி அதிகரித்து வருகிறது. இது குறித்து இன்டர்போல் பொதுமக்களுக்கு எச்சிக்கை விடுத்துள்ளது. விமான டிக்கெட் மோசடி என்னா, அதை எப்படி செய்கிறார்கள், ஆபத்து, எப்படி கண்டுபிடிப்பது, எப்படி தவிர்ப்பது என்பதை பார்க்கலாம்.

விமான டிக்கெட் மோசடி
மோசடி செய்பவர்கள் முதலில் விமான டிக்கெட்டுகளை வாங்க திருடப்பட்ட அல்லது ஹேக் செய்யப்பட்ட கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துகிறார்கள். பின்னர் அந்த டிக்கெட்டுகளை சட்டப்பூர்வமான பயண ஏஜென்சிகளாக தோற்றும் தொழில்முறை தோற்றமுள்ள இணையதளங்கள் மூலம் தள்ளுபடி விலையில் விற்பனை வழங்குகிறார்கள்.
இந்த இணையதளங்களில் இருந்து யாராவது டிக்கெட்டுகளை வாங்கினால், அவர்களிடம் யுபிஐ அல்லது ரொக்கமாக உடனடியாக பணம் செலுத்துமாறு மோசடி நபர்கள் கேட்பார்கள். பணத்தை பெற்ற பிறகு அவர்கள் வாடிக்கையாளர்களுக்கு முன்பதிவு உறுதிப்படுத்தலை அனுப்புகிறார்கள். ஆனால் அவர்களின் அசல் கொள்முதல் விவரங்களை நீக்கி இருப்பார்கள்.
ஆபத்து
விமான டிக்கெட் வாங்குவதற்கு திருடப்பட்ட கிரெடிட் கார்டை பயன்படுத்துவது மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு மோசடி. நீங்கள் பணம் கொடுத்து வாங்கி இருந்தாலும், மோசடி நபர் செய்த குற்றத்தால் நீங்கள் கடுமையாக பாதிக்கப்படக்கூடும். திருடப்பட்ட கிரெடிட் கார்டின் உரிமையாளர் திட்டமிட்ட விமான பயணத்துக்கு முன்னதாக சட்டவிரோதமாக டிக்கெட் வாங்கியதாக புகார் அளித்தால், இந்த டிக்கெட்டுகளை வாங்கியவர்கள் விமான நிலையத்தில் சிக்கி தவிக்கும் அபாயம் உள்ளது.
விமான டிக்கெட் மோசடி எப்படி கண்டுபிடிப்பது?
இந்த மோசடியை கண்டறிவதில் உள்ள சிரமம் அதை குறிப்பாக ஆபத்தானதாக ஆக்குகிறது என்று இன்டர்போல் கூறுகிறது. மோசடி செய்பவர்கள் அடிக்கடி உண்மையான தோற்றமுடைய போலி வலைத்தளங்கள் மற்றும் சமூக ஊடக பயோவை உருவாக்க முயற்சிக்கின்றனர். திருடப்பட்ட பயண ஏஜென்சிகளின் அடையாளங்களை கூட அவர்கள் பயன்படுத்த முடியும். இருப்பினும் கீழே குறிப்பிட்டுள்ள அறிகுறிகள் தெரிந்தால் டிக்கெட் மோசடியை கண்டு பிடித்து விடலாம்.
குறைந்த டிக்கெட் விலை: மற்ற டிக்கெட்டுகளுடன் ஒப்பிடுகையில் டிக்கெட் மலிவானதாக தோன்றினால் எச்சரிக்கையாக இருங்கள்.
பணம் செலுத்தும் முறைகள்: ரொக்கம் அல்லது வங்கி பரிமாற்றம் மூலம் பணம் செலுத்துமாறு உங்களிடம் கேட்கப்பட்டால், இந்த தேர்வுகள் மோசடி நடவடிக்கைகளுக்கு எதிராக சில பாதுகாப்புகளை வழங்குவதால் எச்சரிக்கையாக தொடருங்கள்.
கடைசி நேர புறப்படும் தேதிகள்: உண்மையான கார்டுதாரர் பரிவர்த்தனையை ரத்து செய்யும் வரை மோசடி செய்பவர்கள் காலத்தை பயன்படுத்தி கொள்ள முயற்சி செய்கிறார்கள். எனவே வரும் நாட்களில் புறப்படும் தேதிகளுடன் கூடிய டிக்கெட்டுகளை பார்த்து வாங்குங்கள்.
தொடர்பு தகவல்: இணையதளத்திலோ அல்லது சமூக ஊடகக் கணக்கிலோ தொலைபேசி எண் மற்றும் முழு முகவரி பட்டியலிடப்பட்டுள்ளதாக என்பதை சரிபார்க்கவும். இல்லையென்றால் அது உண்மைதானா என்பதை முழுமையாக ஆராயவும்.
விமான டிக்கெட் மோசடிகளை தவிர்க்க வழிமுறைகள்
விமான நிறுவனம் அல்லது சான்றளிக்கப்பட்ட பயண நிறுவனத்திடம் இருந்து டிக்கெட் வாங்குங்கள்.
பாதுகாப்பான ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு "https"உள்ள இணையதளங்களை பயன்படுத்துங்க.
விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை சரியாக படியுங்க.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications