சென்னை: சமீப காலமாக தங்கத்தின் மதிப்பு குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்து வருகிறது. 2024ஆம் ஆண்டின் Q 1 காலாண்டில், தங்கத்தின் விலை 13 % அதிகரித்துள்ளது. இதனால் தங்கத்தில் முதலீடு செய்வது ஒரு சிறந்த தேர்வாகவே கருதப்படுகிறது. CNBC-இல் சமீபத்திய உரையாடலில், Vighnaharta Gold-இன் தலைவர் மகேந்திர லூனியா, 2030 ஆம் ஆண்டுக்குள் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ. 1.68 லட்சத்தை எட்டும் என்று கணித்துள்ளார். அப்படியானால் 1 கிராம் தங்கத்தின் விலை ரூ. 16,800 ரூபாயாக இருக்கும். இது பெரும்பாலானோரை திடுக்கிட வைத்துள்ளது.
தங்கத்தின் விலை உயர்வு, சர்வதேச அரசியலில் நிலவும் பிரச்சனைகள் முதல் உலகப் பொருளாதார மந்தநிலை வரை அனைத்தும் இந்த விலை உயர்வுக்கு காரணங்களாகக் கூறப்படுகின்றன. மேலும், பணவீக்கம், அதிகரித்த தேவை, 2016 முதல் தங்கச் சுரங்க உற்பத்தியில் தேக்கம், மற்றும் பணமதிப்பு ஆகிய அனைத்தும் தங்கத்தின் மதிப்பு உயர காரணமாகிறது.

முதலீட்டிற்கு, உங்கள் பணத்தை எங்கு சேமிக்கலாம்?: சந்தை கணிக்க முடியாததாக இருக்கும் என்பதால், தங்கத்தின் விலை குறையும் என்று எதிர்பார்க்க முடியாது என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். மாறாக, தங்கத்தின் பலத்தைப் பயன்படுத்திக் கொண்டு அதில் முதலீடு செய்வது சாலச் சிறந்தது.
தங்கம் உங்கள் பணத்தை பணவீக்கத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது மற்றும் உங்கள் முதலீடுகளில் இருக்கும் ஆபத்தைக் குறைப்பதற்கான சிறந்த வழியாக உள்ளது. எனவே, முதலீட்டாளர்கள் கவனமாக மதிப்பீடு செய்து, ஒரு பகுதியை, பொதுவாக சுமார் 10 சதவிகிதம் வரை அல்லது அதற்கும் குறைவாக தங்கத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
இறையாண்மை தங்கப் பத்திரத் திட்டம் (Sovereign Gold Bond Plan - SGB) என்பது ஒரு சிறந்த தேர்வாக கருதப்படுகிறது. SGBகள், அல்லது இறையாண்மை தங்கப் பத்திரங்கள், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வழங்கும் அரசாங்கப் பத்திரங்கள். அவை கிராம் தங்கத்தில் அளவிடப்படுகின்றன. மேலும் நீங்கள் அவற்றை 1 கிராம் முதல் வாங்கலாம்.
ஆண்டுக்கு பலமுறை மத்திய அரசு நடத்தும் ஏலங்கள் மூலம் நீங்கள் SGB களைப் பெறலாம். அவற்றை வாங்க, உங்களிடம் பான் கார்டு இருக்க வேண்டும். வங்கிகள், தபால் அலுவலகங்கள் அல்லது பங்கு தரகு நிறுவனங்களில் இருந்து SGBகளை ஆன்லைனில் அல்லது ஆஃப்லைனில் வாங்கலாம்.
இந்தப் பத்திரங்களின் ஒவ்வொரு யூனிட்டும் ஒரு கிராம் தூய தங்கத்தின் மதிப்புடையது. நீங்கள் ஒரு தனிநபராக இருந்தால் 4 கிலோகிராம் SGBகள் வரையிலும், நீங்கள் அறக்கட்டளைகளுக்கு வாங்கினால் 20 கிலோகிராம்கள் வரையிலும் வாங்கலாம்.
இந்த பத்திரங்கள் உங்களுக்கு 2.5% வட்டியை செலுத்துகின்றன, மேலும் நீங்கள் வருடத்திற்கு இரண்டு முறை பணம் பெறுவீர்கள். இந்த பத்திரங்களிலிருந்து நீங்கள் சம்பாதிக்கும் வட்டிக்கு உங்கள் வருமான வரிக்கு ஏற்ப வரி விதிக்கப்படும். ஆனால், அவை முதிர்ச்சியடையும் போது நீங்கள் பெறும் எந்த லாபத்திற்கும் வரி இல்லை. இந்த பத்திரங்கள் சந்தை நிச்சயமற்ற தன்மைகளுக்கு எதிராக பாதுகாப்பை வழங்குகின்றன.
தங்கத்தின் விலைக்கான நம்பிக்கைக்குரிய கண்ணோட்டத்தைக் கருத்தில் கொண்டு, அடுத்த 4-5 ஆண்டுகளுக்கு தங்கத்தில் முதலீடு செய்வது நல்லது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications