பங்குச்சந்தை சரிந்தாலும் தங்கம் கை கொடுக்கும்! கோல்டில் முதலீடு செய்வதற்கு முன்பு இதை நோட் பண்ணுங்க!

தொடர்ந்து உயரும் பணவீக்கம், சந்தை ஏற்ற இறக்கங்கள் மற்றும் நாணய மதிப்பிழப்பு போன்ற பிரச்சனைகளுக்கு மத்தியில் தங்கம் தான் முதலீட்டாளர்களுக்கு சிறந்த தேர்வாக இருந்து வருகிறது. காலம் காலமாக தங்கம் வாங்குவது மாறவில்லை. ஆனால் தங்கம் வாங்கும் வடிவம் தான் மாறியிருக்கிறது. நம் முன்னோர்கள் நகைகளாக வாங்கினர், நம் பெற்றோர்கள் காயின்கள் மற்றும் கோல்டு பார்களாக வாங்கினர். ஆனால் இன்றைய இளைய தலைமுறையினர் டிஜிட்டல் கோல்டில் முதலீடு செய்து வருகின்றனர்.

தி ராயல் மின்ட் நிறுவனம் சமீபத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் 2024-ஆம் ஆண்டை விட 2025ஆம் ஆண்டில் கோல்ட் பார்கள் மற்றும் கோல்ட் காயின்களின் விற்பனை 142 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

தங்கத்தில் முதலீடு செய்பவர்கள் ஒரு சில விஷயங்களைக் கருத்தில் கொண்டு திட்டமிட வேண்டும். நீங்கள் எதற்காக தங்கம் வாங்குகிறீர்கள்?, நீங்கள் வாங்கும் தங்கத்தை வைத்து என்ன செய்யப் போகிறீர்கள்? என்பதையெல்லாம் தெரிந்து கொண்டால் சிறந்தத் தேர்வை செய்ய முடியும்.

பங்குச்சந்தை சரிந்தாலும் தங்கம் கை கொடுக்கும்! கோல்டில் முதலீடு செய்வதற்கு முன்பு இதை நோட் பண்ணுங்க!

இங்கு ஒவ்வொருவரும் தங்கம் வாங்குவதற்கான காரணம் என்ன தெரியுமா? இதை பாதுகாப்பான சேமிப்பாக மக்கள் கருதுகின்றனர். அடுத்ததாக உங்களுக்கு ஒரு கேள்வி எழலாம். எந்தத் தங்கத்தில் முதலீடு செய்வது... தங்க நாணயங்கள், தங்க கட்டிகள், டிஜிட்டல் தங்கம், ம்யூச்சுவல் ஃபண்ட் ETF என பல வழிகளில் தங்கத்தை வாங்கலாம். ஆனால் கையில் தொட்டு பார்த்து வாங்கும் தங்கத்தையே மக்கள் விரும்புகின்றனர். அப்படியானால் நீங்கள் பிசிக்கல் கோல்டாக வாங்கிக் கொள்ளலாம்.

பேப்பர் தங்கம்: இன்றெல்லாம் பல நிதி நிறுவனங்கள் பேப்பர் கோல்டை விற்பனை செய்கின்றன. அதாவது தங்கத்தின் விலை என்னவோ அதே விலைக்கு உங்களுக்கு பத்திரம் வழங்கப்படும். ஆனால் இதில் ஒரு சில சிக்கலும் இருக்கிறது. நிறுவனத்தின் நம்பகத்தன்மையை உறுதி செய்யாமல் முதலீடு செய்தால் நஷ்டம் ஏற்படும் அபாயம் உண்டு. எனவே பேப்பர் கோல்டை விட பிசிக்கல் கோல்டு சிறந்தது என்ற கருத்தையே நிபுணர்களும் முன்வைக்கின்றனர்.

வரி: ஒவ்வொரு நாட்டிலும் வரி முறை என்பது மாறுபடுகிறது. எனவே உங்கள் நாட்டில் என்ன விதிமுறை என்பதற்கேற்ப திட்டமிட்டால் நல்லது. உதாரணமாக பிரிட்டன் போன்ற நாடுகளில் தங்க நாணயங்களுக்கு மூலதன ஆதாய வரி கிடையாது. இதனால் விற்பனை செய்யும் போதும் தங்கத்தை வாங்கிய அளவுக்கான அதே மதிப்பு கிடைக்கும்.

கோல்ட் காயின்கள் Vs கோல்ட் பார்கள்: இந்த இரண்டில் எதை வாங்கலாம் என்ற குழப்பம் உங்களுக்கு வரலாம். இது முதலீடு செய்யும் முதலீட்டாளரைப் பொறுத்தது. கோல்ட் பார் என்றால் கண்டிப்பாக விலை சற்று அதிகமாக தான் இருக்கும். அதுவே சிறுக சிறுக முதலீடு செய்ய விரும்புபவராக இருந்தால் நீங்கள் கோல்ட் காயின்களை வாங்கலாம். காயின்களுக்கு செய்கூலி கிடையாது. மாறாக ஜிஎஸ்டி மற்றும் டையிங் சார்ஜ் போன்றவற்றை கடைகள் வசூலிக்கின்றன.

நம்பகமான கடையைத் தேர்வு செய்தல்: எனக்கு டிஜிட்டல் கோல்டு வேண்டாம், பேப்பர் கோல்டு வேண்டாம் என்று நினைப்பவர்கள்.. நம்பகமான கடையைத் தேர்வு செய்ய வேண்டும். விலையில் டிரான்ஸ்பரன்சி இருக்க வேண்டும். அதாவது ஜிஎஸ்டி மற்றும் நீங்கள் வாங்கிய தங்கத்தின் மதிப்பு போன்றவை தனித்தனியாக பில்லில் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். இன்று ஒரு நாள் தான் ஆஃபர் என்று உங்களை அவசரப்படுத்தும் எந்த ஒரு நகை கடைக்கும் செல்வதற்கு முன்பு தங்கத்தின் தூய்மையை ஆராய்வது முக்கியம்.

குறைந்த அளவில் தங்கம் வைத்திருந்தால் வீட்டில் தங்கத்தை வைத்திருக்கலாம். ஆனால் பாதுகாப்பு பிரச்சனை இருந்தால் வங்கிகளின் லாக்கரை பயன்படுத்தலாம். ஆனால் இதற்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். எனவே தங்கம் வாங்க திட்டமிட்டிருந்தால் உங்களுடைய நிதி நலனை ஆராய்ந்து எதிர்கால தேவைகளுக்கு ஏற்ப திட்டமிடுங்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+