சென்னை: சமீப காலமாக, தங்கம் போன்ற உலோகங்கள் விலையின் அடிப்படையில் ஏறுமுகத்தை அடைந்து வருகிறது. இதனால் பல முதலீட்டாளர்களும் தங்கதில் முதலீடு செய்வதையே விரும்புகின்றனர். உதாரணமாக, 2023 ஆம் ஆண்டில் பெரிய உச்சத்தைத் தொட்டது. இது ஆண்டுக்கு சுமார் 13% அதிகரிப்பைக் குறிக்கிறது. இந்த 2024ஆம் ஆண்டில் தங்கத்தில் முதலீடு செய்வது நல்லதா? அவ்வாறு செய்தால் பலன் கிடைக்குமா என்பதைப் பற்றி பார்ப்போம்.
இன்றெல்லாம் தங்கம் போன்ற விலைமதிப்பற்ற உலோகங்கள் நிலையான மற்றும் வலுவான செயல்திறனைக் காட்டுகின்றன. இது தங்கள் முதலீடுகளை விரிவுபடுத்த விரும்பும் முதலீட்டாளர்களை சற்று ஈர்க்கத்தான் செய்கிறது. எடுத்துக்காட்டாக, தங்கம் 2023இல் சுமார் 13% உயர்ந்துள்ளது.

அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதட்டங்கள் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற நிலைகள் இருந்தபோதிலும், தங்கத்தின் விலை குறிப்பிடத்தக்க ஏற்றத்தைக் கண்டுள்ளது. இவ்வாறு எந்த சூழ்நிலைகளிலும், விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் உயர்ந்து வருவதால், பல முதலீட்டாளர்களுக்கும் இது பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது.
புவிசார் அரசியல் பதட்டங்கள், பொருளாதார நிச்சயமற்ற தன்மைகள் மற்றும் பணவீக்கம் ஆகியவை சந்தை ஏற்ற இறக்கத்திற்கு எதிராக முதலீட்டாளர்களை இதுபோன்ற விலைமதிப்பற்ற உலோகங்களில் முதலீடு செய்யத் தூண்டுகிறது.
மேலும், இறையாண்மை தங்கப் பத்திரத் திட்டம் (Sovereign Gold Bond Plan - SGB) என்பதும் ஒரு சிறந்த தேர்வாக கருதப்படுகிறது. SGBகள், அல்லது இறையாண்மை தங்கப் பத்திரங்கள், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வழங்கும் அரசாங்கப் பத்திரங்கள். அவை கிராம் தங்கத்தில் அளவிடப்படுகின்றன. மேலும் நீங்கள் அவற்றை 1 கிராம் முதல் வாங்கலாம்.
CNBC-இல் சமீபத்திய உரையாடலில், Vighnaharta Gold-இன் தலைவர் மகேந்திர லூனியா, 2030 ஆம் ஆண்டுக்குள் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ. 1.68 லட்சத்தை எட்டும் என்று கணித்துள்ளார். அப்படியானால் 1 கிராம் தங்கத்தின் விலை ரூ. 16,800 ரூபாயாக இருக்கும். இது பெரும்பாலானோரை திடுக்கிட வைத்துள்ளது.
மேலும், இந்த வகை உலோகங்களில் ஆன்லைனில் முதலீடு செய்வதற்கான டிஜிட்டல் பிளாட்ஃபார்ம்களும் அதிகரித்து வருகின்றன. இது முழுக்க, முழுக்க ஆன்லைன் முதலீட்டு தளங்கள் என்பதால் தங்கம் போன்ற உலோகங்களை வாங்குதல் மற்றும் டிரேடிங் செய்தல் போன்றவை மிகவும் எளிதாகியுள்ளது.
தங்கம் உங்கள் பணத்தை பணவீக்கத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது மற்றும் உங்கள் முதலீடுகளில் இருக்கும் ஆபத்தைக் குறைப்பதற்கான சிறந்த வழியாக உள்ளது. எனவே, முதலீட்டாளர்கள் கவனமாக மதிப்பீடு செய்து, ஒரு பகுதியை, பொதுவாக சுமார் 10 சதவிகிதம் வரை அல்லது அதற்கும் குறைவாக தங்கத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
என்னதான் Bitcoin மற்றும் Ethereum போன்ற கிரிப்டோகரன்சிகள் பிரபலமான மற்றும் சாத்தியமான வருமானத்திற்காக கவனத்தைப் பெற்றிருந்தாலும், முதலீட்டாளர்கள், அதன் நிலையான தன்மை காரணமாக உலோகங்களில் முதலீடு செய்வதையே விரும்புகின்றனர்.
தங்கம் மற்றும் வெள்ளியின் பாரம்பரிய விருப்பங்களுக்கு அப்பால், பிளாட்டினம் மற்றும் பல்லேடியத்தைப் பற்றிய தகவல்களைக் கவனிக்காமல் விடக்கூடாது.
2024 ஆம் ஆண்டில் இதுபோன்ற விலைமதிப்பற்ற உலோகங்கள் முதலீட்டிற்கான சிறந்த கூறுகளாக தோன்றுகின்றன. தங்கத்தின் விலைக்கான நம்பிக்கைக்குரிய கண்ணோட்டத்தைக் கருத்தில் கொண்டு, அடுத்த 4-5 ஆண்டுகளுக்கு தங்கத்தில் முதலீடு செய்வது நல்லது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
More From GoodReturns

சென்னையில் தங்கம் விலை திடீர் சரிவு.. ஆனா சர்வதேச சந்தையில் 3வது நாளாக உயர்வு.. என்ன நடக்குது..?!

தங்கம், வெள்ளி நகைகளின் இறக்குமதிக்கு செக் வைத்த மத்திய அரசு!! வியாபாரிகளின் நூதன மோசடி அம்பலம்!!

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

தங்கம், வெள்ளி விலை தடாலடியாக உயர காரணம் என்ன? இனி வரும் நாட்கள் எப்படி இருக்கும்?

கோயம்புத்தூர் மக்களே உங்க ஊரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன?

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

மதுரை தங்கம் விலையில் இன்று அதிரடி சரிவு..! தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்?

Silver Crash: தங்கத்தை விடுங்க.. வெள்ளியோட ஆட்டத்தை பாருங்க! முதலீடு செய்ய இது சரியான நேரமா?

தங்கம் விலை அதிரடி உயர்வு.. மதுரையில் ஒரு கிராம் தங்கம் விலை என்ன தெரியுமா..?

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் இன்றும் அதிசயம்.. வாங்க நல்ல வாய்ப்பு.. ஆனா ஒரு விஷயம்..!!

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு.. வாரத்தின் முதல் நாளே சர்ப்ரைஸ்.. நல்ல சான்ஸ்..!



Click it and Unblock the Notifications