நாமினியை நியமிக்காமல் முதலீட்டாளர் இறந்துவிட்டால்.. அவருடைய மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் யாரைச் சேரும்?

ஒருவருடைய இறப்புக்கு பின்னர் அவர் சேர்த்து வைத்த பணம், சொத்துக்கள், மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள், ஃபிக்சட் டெபாசிட்கள் போன்றவை யாருக்கு செல்ல வேண்டும் என்பதற்கு அவர் நாமினியை நியமித்திருக்க வேண்டும் அல்லது உயில் எழுதி வைத்திருக்க வேண்டும். இந்த இரண்டுமே செய்யாமல் முதலீடு செய்த நபர் இறந்து விட்டால் அந்த முதலீடு என்னவாகும்? சொத்துக்கள் சட்டப்பூர்வ வாரிசுதாரரைச் சேருமா? என்பதைத்தான் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

அதிக சொத்துக்கள் அல்லது முதலீட்டை வைத்திருக்கும் நபர் உயில் எழுதாமல் இறந்துவிட்டால் அவருடைய குடும்பத்தினர் சொத்துக்களை பெறுவது மிகவும் சிக்கலான நடைமுறையாக மாறிவிடும். ஒருவேளை இறந்தவர்.. இவர் தான் நாமினி என்று நியமித்திருந்தால் எந்தப் பிரச்சனையும் இல்லை. அப்படி இல்லை என்றால் சட்டப்பூர்வ வாரிசுகள் வங்கிகள் மற்றும் அசட் மேனேஜ்மென்ட் நிறுவனங்களிடம் தங்களுடைய உரிமையை நிரூபிக்க வேண்டியிருக்கும்.

நாமினியை நியமிக்காமல் முதலீட்டாளர் இறந்துவிட்டால்.. அவருடைய மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் யாரைச் சேரும்?

முதலீடுகளின் மதிப்பு என்ன? ஆவணங்கள் என்னென்ன இருக்கிறது? குடும்ப உறுப்பினர்கள் சொத்தைப் பகிர்வதற்கு உடன் படுகின்றனறா? இல்லையா? என்பதை எல்லாம் பொறுத்து வாரிசு சான்றிதழ் தேவைப்படும் அல்லது நீதிமன்றத்தின் ஒப்புதல் கூட தேவைப்படலாம்.

ஒரு முதலீட்டாளர் உயில் எழுதாமல் அல்லது நாமினியை நியமிக்காமல் இறந்து விட்டால் வாரிசுரிமை சட்டங்களின்படி அந்த முதலீடுகள் அனைத்தும் சட்டப்பூர்வ வாரிசுகளை சென்றடையும். அதற்கு வாரிசுதாரர்கள் வங்கியை அணுக வேண்டும்.

Also Read

வங்கிக்கு செல்லும் போது இறந்தவரின் இறப்புச் சான்றிதழ், அடையாளச் சான்றிதழ், முகவரி சான்றிதழ், வாரிசுதாரர் என்ன உறவு முறை என்பதற்கான சான்று போன்றவற்றை சமர்ப்பிக்க வேண்டியிருக்கும். பங்குகள் மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகளை பொருத்தவரை சரிபார்ப்பு செயல்முறை எல்லாம் முடிந்த பின்னர் இறந்தவருடைய வாரிசுதாரர்களுக்கு முதலீடுகள் மாற்றம் செய்யப்படும். ஃபிக்சட் டெபாசிட்டுக்கு தேவையான ஆவணங்களுடன் வங்கியில் விண்ணப்பப் படிவம் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டியிருக்கும்.

வாரிசு சான்றிதழ் அல்லது நீதிமன்ற உத்தரவு எப்போது தேவைப்படும்?: இறப்புச் சான்றிதழ் மற்றும் கேஒய்சி ஆவணங்களைத் தவிர முதலீட்டைத் திரும்ப பெறுவதற்கு சட்டபூர்வ வாரிசு சான்றிதழ், உறுதிமொழி ஆவணங்கள், நஷ்ட ஈடு பத்திரங்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் NOC சான்றிதழ் தேவைப்படும். அதிக மதிப்புள்ள முதலீட்டை வைத்திருந்து.. சட்டபூர்வ வாரிசுதாரர்களுக்கு இடையில் தகராறு இருந்தால் முதலீடுகளை வழங்குவதற்கு முன்பு நீதிமன்ற உத்தரவு கண்டிப்பாக தேவைப்படும்.

வாரிசுதாரருக்கு இடையில் பிரச்சனை ஏற்படாமல் தவிர்ப்பது எப்படி?: முதலீட்டாளர்கள் முறையாக உயில் தயாரித்து வைக்க வேண்டும். டிமேட் அக்கவுண்ட், ,மியூச்சுவல் ஃபண்டுகள் மற்றும் பாலிசிகளில் வாரிசுதாரர்களை நாமினியாக கட்டாயம் பதிவு செய்திருக்க வேண்டும்.

திருமணம், குழந்தை பிறப்பு, விவாகரத்து போன்ற முக்கியமான நிகழ்வுகளுக்கு பின்பு வாரிசுதாரரை கட்டாயம் மாற்றி அமைக்க விரும்பினால் அதை செய்து விட வேண்டும், ஏனெனில் வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டத்திலும் நாமினி மாறிக்கொண்டே இருப்பார், திருமணத்திற்கு முன்பு ஒருவர் தங்களுடைய பெற்றோரை நாமினியாக வைத்திருப்பார்கள். ஆனால் திருமணம் ஆன பின் தங்களுடைய துணையை நாமினியாக நியமிக்க விரும்பலாம். எனவே பிரச்சனையின்றி சொத்துக்கள்.. உங்களுடைய சொந்தங்களை சேர்வதற்கு நாமினியை முறையாக பதிவு செய்து வைப்பது கட்டாயம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+