இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பது மட்டும் அல்லாமல் முதல் முறையை விடவும் 2வது கொரோனா தொற்று அலையில் குறைந்த காலகட்டத்தில் அதிகளவிலானோர் பாதிக்கப்பட்டு இருக்கும் காரணத்தால் நோயாளிகளுக்குச் சிகிச்சைகள் அளிக்கப் போதுமான வசதிகள் கூட இல்லாமல் பல மாநிலங்கள் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது.
இதன் காரணமாக நாட்டின் வர்த்தகச் சந்தையும், உற்பத்தி சந்தையும் அதிகளவிலான பாதிப்புகளை எதிர்கொண்டு இருக்கும் காரணத்தால் முதலீட்டுச் சந்தையில் முதலீட்டாளர்கள் அதிகளவிலான முதலீடுகளை வெளியேற்றி வருகின்றனர்.
இதன் வாயிலாக இன்று காலை வர்த்தகம் துவங்கி 30 நிமிடத்திற்குள் சந்தை முதலீட்டாளர்கள் சுமார் 5 லட்சம் கோடி ரூபாய் அளவிலான முதலீட்டுச் சரிவை எதிர்கொண்டனர். ஆனால் வர்த்தக முடிவில் நிலைமை வேறு..
5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு
இன்று காலை வர்த்தகம் துவங்கி சில நிமிடத்திலேயே மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 1200 புள்ளிகளுக்கும் அதிகமாகச் சரிவை எதிர்கொண்ட நிலையில் முதலீட்டாளர்களின் முதலீட்டு மதிப்பு சுமார் 5 லட்சம் கோடி ரூபாய்க்குக் கீழ் சரிந்தது.
சென்செக்ஸ் குறியீடு
ஆனால் அதன் பிறகு வர்த்தகம் கணிசமான வளர்ச்சி அடைந்த நிலையில் வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 882.61 புள்ளிகள் வரையிலான சரிவை மட்டுமே அடைந்தது. இதன் எதிரொலியாகச் சென்செக்ஸ் குறியீடு 47,949.42 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் நிறைவடைந்தது.
டாப் 30 நிறுவனங்கள்
மேலும் சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் இன்று வர்த்தக முடிவில் டாக்டர் ரெட்டி மற்றும் இன்போசிஸ் மட்டுமே கணிசமான வர்த்தக உயர்வைப் பதிவு செய்து, மற்ற அனைத்து நிறுவனங்களும் அதிகளவிலான சரிவைப் பதிவு செய்தது. குறிப்பாக வங்கித்துறை மற்றும் உற்பத்தித் துறையில் இருக்கும் நிறுவனங்கள் அதிகப் பாதிப்பை எதிர்கொண்டது.
அதீத சரிவடைந்த முக்கிய நிறுவனங்கள்
இன்றைய வர்த்தகத்தில் பஜாஜ் பைனான்ஸ், அல்ட்ரா டெக் சிமெண்ட், ஹெச்டிஎப்சி, ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் ஆட்டோ, என்டிபிசி, மஹிந்திரா, ஏசியன் பெயின்ட்ஸ், பஜாஜ் பின்சர்வ், எல் அண்ட் டி, கோட்டாக் மஹிந்திரா வங்கி, இண்டஸ்ட்இந்த் வங்கி, ஓஎன்ஜிசி, பவர் கிரிட் ஆகிய நிறுவனங்கள் அனைத்தும் 3 சதவீதத்திற்கும் அதிகமான சரிவை எதிர்கொண்டது. இதில் பவர்கிரிட் நிறுவனம் மட்டும் 4.17 சதவீத சரிவை பதிவு செய்துள்ளது.
நிப்டி குறியீடு
இதேபோல் நிஃப்டி குறியீடு 400 புள்ளிகளுக்கும் அதிகமாகச் சரிந்த நிலையில் வர்த்தக முடிவில் 258.40 புள்ளிகள் சரிவை மட்டுமே பதிவு செய்து 14,359.45 புள்ளிகளை அடைந்துள்ளது. இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு அதிகப்படியான தடுமாற்றங்கள் உடனே வர்த்தக உயர்வைப் பதிவு செய்துள்ளது.
லாக்டவுன் கட்டுப்பாடுகள்
நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களும் கொரோனா தொற்றை-ஐ கட்டுப்படுத்த தினமும் லாக்டவுன் கட்டுப்பாடுகளை விதித்து வரும் நிலையில் நாட்டின் தேவை பெரிய அளவில் குறையும் நிலை ஏற்பட்டு உள்ளது. தேவை குறையும் போது உற்பத்தி, வேலைவாய்ப்பு, வர்த்தகம் என அனைத்துமே குறையும்.
முதலீட்டாளர்களின் முதலீடுகள்
இதன் எதிரொலியாகவே மும்பை பங்குச்சந்தையில் முதலீட்டாளர்கள் உற்பத்தி மற்றும் சேவை நிறுவனங்களில் இருக்கும் முதலீடுகளைப் படிப்படியாகக் குறைத்து வருகின்றனர். இதன் வாயிலாகவே மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு கடந்த ஒரு வாரமாக அதிகளவிலான தடுமாற்றங்களைச் சந்தித்து வருகிறது.
More From GoodReturns

இன்று பங்குச் சந்தைக்கு விடுமுறை! புனித வெள்ளி NSE, BSE ,MCX இயங்குமா? முழு விபரம்!

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?



Click it and Unblock the Notifications