6 நாட்களில் முதலீட்டாளர்களை பணக்காரர் ஆக்கிய இந்திய சந்தைகள்.. எப்படி?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: இன்றோடு ஏழு வர்த்தக அமர்வுகளாகவே இந்திய சந்தைகள் தொடர்ந்து உச்சத்தினை தொட்டு வருகின்றன. இந்த நிலையில் நேற்று வரையில் முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு 16.70 டிரில்லியன் ரூபாய் அதிகரித்துள்ளது.

குறிப்பாக திங்கட்கிழனையன்று சென்செக்ஸ் 617 புள்ளிகள் அதிகரித்து, அதன் ஆல் டைம் உச்சமான 541,348.77 புள்ளிகளாக இருந்தது. இதே இண்டிராடே வர்த்தகத்தில் 791.75 புள்ளிகள் அதிகரித்து 51,523.38 புள்ளிகளாக உச்சத்தினை தொட்டது.

இதே நிஃப்டி 50 191.55 புள்ளிகள் அதிகரித்து 15,115.80 ஆக இருந்தது.

தொடர்ச்சியான ஏற்றம்

தொடர்ச்சியான ஏற்றம்

இன்றோடு ஏழு வர்த்தக அமர்வுகளாகவே இந்திய சந்தையானது தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகின்றது. எனினும் கடந்த ஆறு அமர்வில் மட்டும் பிஎஸ்இ-யில் பட்டியலிடப்பட்ட பங்குகளின் சந்தை மூலதனம் 16.70 டிரில்லியன் ரூபாய் அதிகரித்து, 202.83 டிரில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளது. குறிப்பாக வங்கிகள், ஆட்டோ, மெட்டல்ஸ் குறியீடுகள் ஏற்றத்தில் காணப்பட்டது. எனினும் பொதுத்துறை வங்கி குறியீடுகள், எஃப்எம்சிஜி குறியீடுகள் மாற்றமில்லாமல் காணப்பட்டது.

Array

Array

இந்த பரந்த சந்தையில் ஸ்மால் கேப் மற்றும் மிட்கேப் பங்குகள் நல்ல ஏற்றம் கண்டன. கடந்த வெள்ளிக்கிழமையன்று ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா தனது மானிட்டரி பாலிசி கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை. இந்த வழக்கம்போல 4% ஆக தொடரும் என்றும் அறிவித்தது. இதே ரிவர்ஸ் ரெப்போ விகிதமும் 3.35% ஆக தொடரும் என்றும் அறிவித்தது.

தொடர் ஏற்றத்தில் சந்தை
 

தொடர் ஏற்றத்தில் சந்தை

இதற்கிடையில் 2021 - 22ம் நிதியாண்டில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். குறிப்பாக பத்திர திட்டங்கள் அல்லது நிலையான வைப்பு நிதி வசதி திட்டங்கள் என 2021 - 22ல் அறிமுகப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் தான் சந்தை தொடர்ந்து ஏற்றத்தினை கண்டு வருகிறது.

பிஎஸ்இ குறியீடுகள்

பிஎஸ்இ குறியீடுகள்

குறிப்பாக FMCG குறியீடு தவிர, அனைத்து சென்செக்ஸ் குறியீடுகளும் பச்சை நிறத்திலேயே காணப்பட்டது. குறிப்பாக பிஎஸ்இ மெட்டால் குறியீடு 3% ஏற்றத்திலும், பிஎஸ்இ நுகர்வோர் பொருட்கள், தொழில் துறை, தொலைத் தொடர்பு துறை, கன்சியூமர் டியூரபிள் கூட்ஸ், டெக் உள்ளிட்ட குறியீடுகள் 2% மேலாகவும் ஏற்றம் கண்டிருந்தது. இதே பிஎஸ்இ மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் குறியீடுகள் முறையே 1.50% மற்றும் 1.53% ஏற்றத்தில் காணப்படுகிறது.

இன்றைய பங்கு சந்தை நிலவரம்

இன்றைய பங்கு சந்தை நிலவரம்

இதற்கிடையில் இன்றும் இந்திய சந்தைகள் தொடர்ந்து ஏற்றத்திலேயே காணப்படுகிறது. தற்போது மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 382.16 புள்ளிகள் அதிகரித்து 51,730 புள்ளிகளாகவும், இதே தேசிய பங்கு சந்தையின் நிஃப்டி 115.75 புள்ளிகள் அதிகரித்து 15,231 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Investors richer by 16.7 trillion in 6 days as indices hit high

Market updates.. Investors richer by 16.7 trillion in 6 days as indices hit high
Story first published: Tuesday, February 9, 2021, 12:17 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X