ஆப்பிள் ஐபோன் 16 விற்பனை இந்தியாவில் வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் தொடங்கியது. ஆனால் மக்கள் தாங்கள் முன்பதிவு செய்த ஐபோன் 16-ஐ வாங்க கிட்டத்தட்ட 24 மணிநேரத்திற்கு முன்பே ஆவலுடன் மும்பை, டெல்லி ஆப்பிள் ஸ்டோர் வாசலில் காத்திருந்தனர்.
அதிலும் சில ஆப்பிள் ரசிகர்கள் அல்ல ஆப்பிள் வெறியர்கள் தாங்கள் முன்பதிவு செய்த ஐபோன் 16-ஐ டெலிவரி பெற வெளியூரில் இருந்தும், பக்கத்து மாநிலத்தில் இருந்து வந்து ஆப்பிள் ஸ்டோர் வாசலில் சுமார் 20 மணி நேரத்திற்கும் மேலாக வரிசையில் நின்று காத்திருந்து ஐபோன் பெற்றுள்ளனர்.

உஜ்வல் ஷா என்ற ஆப்பிள் வாடிக்கையாளர், மும்பையின் ஆப்பிள் BKC ஸ்டோர் முன்பு பல மணிநேரம் காத்திருந்து, காலை 8 மணிக்கு ஸ்டோருக்குள் நுழைந்து முதல் ஆளாக ஐபோன் 16 வாங்கியுள்ளார் என ANI-க்கு கூறியுள்ளார்.
இதேபோல, அக்ஷய் என்பவர் தனது ஐபோன் 16 Pro Max மாடலைப் பெற குஜராத் மாநிலத்தின் சுரத்திலிருந்து மும்பைக்கு வந்து வாங்கியுள்ளார். இதுக்குறித்து அவர் பேசுகையில் "எனக்கு iOS18 பிடித்திருந்தது மற்றும் ஜூம் கேமரா தரம் இப்போது மேம்பட்டிருக்கிறது" இதனால் ஐபோன் 15ல் இருந்து ஐபோன் 16க்கு மாறியுள்ளதாக அவர் கூறினார்.
ஆப்பிள் ஃபேன்ஸ் அசம்பிள்.. ஐபோன் முதல் ஏர்பாட்ஸ் வரை.. முழு விலை பட்டியல்..!!
மும்பை போலவே நாட்டின் தலைநகர் டெல்லியிலும், iPhone வெறியர்களின் ஆட்டம் அதிரடியாகவே இருந்தது. உத்தரப் பிரதேச மாநிலத்தின் சஹரன்பூரிலிருந்து புதிய ஐபோன் 16 Pro Max மாடலை வாங்க முகமது ஷாரிக் என்பவர் டெல்லி ஆப்பிள் ஸ்டோருக்கு வந்துள்ளார்.
இதுகுறித்து அவர் ஏஎன்ஐக்கு கொடுத்த பேட்டியில் "நான் ஒரு iPhone ஆர்வலர். நான் மும்பை ஸ்டோருக்கு செல்ல திட்டமிட்டிருந்தேன், ஆனால் டெல்லியிலேயே எனக்குக் கிடைத்தது. முன்னதாக நான் iPhone 15 Pro Max-ஐப் பயன்படுத்தி வந்தேன்" என்று கூறினார்.
இவர்கள் மூவரும் இந்திய ஆப்பிள் ஐபோன் வெறியர்களின் கூட்டத்திற்கும், முதல் நாளில் புதிய ஐபோன் வாங்க வேண்டும் என்று பல மணிநேரம் காத்திருந்து வாங்கிய கூட்டத்திற்கு ஒரு சிறிய உதாரணம் மட்டுமே. பல தரப்பு மக்கள் டெல்லி, மும்பை ஆப்பிள் ஸ்டோரில் அறிமுகமான முதல் நாளிலேயே வாங்கிவிட வேண்டும் என்ற முக்கிய இலக்குடன் கூடியுள்ளனர்.
உலகளவில் இன்று அனைத்து நாடுளிலும் ஐபோன் 16 சீரியல் மாடல் போன்கள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன. பொதுவாக சில நாட்களுக்கு பின்பு இந்தியாவில் அறிமுகமாகும் ஐபோன், சமீபத்தில் அமெரிக்காவில் அறிமுகமாகும் அதே நாளில் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்தியாவில் ஆப்பிளின் அதிகாரப்பூர்வ ஸ்டோர் வந்த உடன் பல விஷயங்கள் மாறியுள்ளது.
இது இந்தியாவில் பண்டிகை காலம் என்பதால் ஐபோன் 16 சீரியஸ் போன்களின் விற்பனை சிறப்பாக இருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் ஐபோன் 15 சீரியஸ் போன்களை ஒப்பிடும் போது சில மாற்றங்கள் வந்திருந்தாலும் விலை கணிசமாக குறைக்கப்பட்டு உள்ளதால் மக்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது.
இந்தியாவில் ஐபோன் 16 சீரியஸ் ரூ.79,900 முதல் தொடங்குகிறது, அதே சமயம் ஐபோன் 16 புரோ சீரியஸ் ரூ.1,19,900 முதல் கிடைக்கிறது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications