ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு வெளியானதை அடுத்து இந்தியாவில் தங்கத்தின் விலைகள் தாறுமாறாக உயர தொடங்கி இருக்கின்றன. சென்னையில் சில்லறை விற்பனையிலும் இது எதிரொலிக்க தொடங்கியிருக்கிறது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை கணிசமாக உயர்வு கண்டிருக்கிறது.
ஈரான் போர் தொடங்கியது முதலே உலக சந்தையிலும் சரி, இந்திய சந்தையிலும் சரி தங்கத்தின் விலை கணிசமான அளவு குறைந்தது. சென்னையில் மார்ச் மாதத்தில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 1,04,000 ரூபாய் என பெரிய சரிவை கண்டது. ஏப்ரல் மாத தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை ஏறுவதும் இறங்குவதுமாக இருந்த வருகிறது. ஈரான் போர் தொடர்பான தகவல்களே இதற்கு காரணம். இந்த சூழலில் அமெரிக்க அதிபர் ஈரான் மீதான தாக்குதலை இரண்டு வாரத்திற்கு நிறுத்தி வைப்பதாகவும் இது ஒரு இருதரப்பு போர் நிறுத்த ஒப்பந்தம் என்றும் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார்.

டிரம்ப் அறிவிப்பு வெளியானது முதலே உலக சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை சரிவடைந்து தங்கத்தின் விலை உயர தொடங்கியது. இது சென்னையிலும் எதிரொலித்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் நேற்று ஒரு கிராம் 13,860 ரூபாய்க்கு விற்கப்பட்டது. அதுவே இன்று ஒரு கிராமுக்கு 340 ரூபாய் விலை உயர்வு கண்டு 14,200 ரூபாய் என உயர்ந்துள்ளது.
அதே போல 22 கேரட் ஆபரண தங்கம் நேற்று ஒரு சவரன் 110,880 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதுவே இன்று 2,720 ரூபாய் விலை கூடி ஒரு சவரன் 1,13,600 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஈரான் போர் நிறுத்த அறிவிப்பால் உலக சந்தையில் தங்கம் விலை உயர்ந்தது. அது தான் சென்னையிலும் தங்கம் விலை உயர காரணமாக உள்ளது.
தங்கத்தை போலவே வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. சென்னையில் வெள்ளி கிராமுக்கு 10 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி நேற்று 255 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 265 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 2.65 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
ஈரான் போர் காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததால் முதலீட்டாளர்கள் தங்கம், வெள்ளியை விடுத்து கச்சா எண்ணெயில் முதலீடு செய்தனர். இதனால் டிமாண்ட் குறைந்து தங்கம், வெள்ளி விலை குறைந்தது. ஆனால் இப்போது போர் நிறுத்த அறிவிப்பு கச்சா எண்ணெய் விலைகளை சரிவடைய செய்துள்ளது. இதனால் மீண்டும் முதலீட்டாளர்கள் தங்கம், வெள்ளியில் முதலீடு செய்ய தொடங்கியுள்ளனர்.
இந்தியாவில் எம்சிஎக்ஸ் வர்த்தகத்தில் 10 கிராம் தங்கம் விலை 1,53,800 ரூபாய் என உயர்ந்தது, இது நேற்று வர்த்தகம் முடியும் போது 1,50,289 ரூபாய் என இருந்தது. அதே போல வெள்ளி விலை ஒரு கிலோ 2,43,770 ரூபாய் என உயர்ந்தது, நேற்று 2,31,348 ரூபாய் என வர்த்தகத்தை முடித்த நிலையில் இன்று 11,000 வரை உயர்ந்தது. உலக சந்தையில் ஸ்பாட் கோல்டு விலை ஒரு அவுன்ஸ் 2.26% உயர்ந்து 4814 டாலர்களாக வர்த்தகமாகிறது. வெள்ளியின் விலை 5% உயர்ந்து 76.77டாலர்களாகவும் விற்பனை செய்யப்படுகிறது. ஈரான் போர் நிறுத்தம் நீடிக்கும் பட்சத்தில் இனி வரும் வாரங்களில் தொடர்ச்சியாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் உயரும்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications