ஈரான் போர் நிறுத்தம்: உயர்ந்தது தங்கம் விலை; சரிந்தது கச்சா எண்ணெய் விலை!! ஓவர் நைட்டில் எல்லாமே மாறியது!!

ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து பிப்ரவரி 28ஆம் தேதி கூட்டு ராணுவ நடவடிக்கை நடத்தின. இந்த தாக்குதலில் ஈரான் நாட்டுத் தலைவர் அயத்துல்லா அலி கமேனி உட்பட ஏராளமான முக்கிய தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதனை அடுத்து மத்திய கிழக்கு நாடுகளில் பெரிய அளவிலான போர் பதற்றம் ஏற்பட்டது.

ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியதால் வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி கப்பல்கள் ஆசிய நாடுகளுக்கு கொண்டுவரப்படுவதில் சிக்கல் ஏற்பட்டது. கச்சா எண்ணெய் சர்வதேச சந்தைக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டதால் விநியோக சங்கிலி பாதிக்கப்பட்டு கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது. இதனால் பல்வேறு நாடுகளிலும் எல்பிஜி ,பெட்ரோல் , டீசல் உள்ளிட்டவற்றின் விலை 100 சதவீதம் வரை உயர்த்தப்பட்டது.

ஈரான் போர் நிறுத்தம்: உயர்ந்தது தங்கம் விலை; சரிந்தது கச்சா எண்ணெய் விலை!!

இதற்கிடையே ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை திறக்கவிட்டால் புதன்கிழமை பேரழிவு தாக்குதலை சந்திக்கும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்திருந்தார். நேற்று இரவு அவர் வெளியிட்ட பதிவில் இன்று ஒரு நாகரிகமே அழியப் போகிறது அது மீண்டும் திரும்ப கொண்டு வர முடியாத அளவுக்கு இருக்கும் , அது நடக்க வேண்டும் என நான் நினைக்கவில்லை ஆனால் அதற்கான சாத்தியம் உள்ளது என ஈரானுக்கு பகிரங்கமாக மிரட்டல் விடுத்திருந்தார்.

இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்ட பதிவில் பாகிஸ்தான் பிரதமர் மற்றும் ராணுவ தளபதி ஆகியோர் உடனான உரையாடல்களின் அடிப்படையில் ஹார்முஸ் ஜலசந்தியை முழுமையாகவும், உடனடியாகவும் ,பாதுகாப்பாகவும் திறப்பதற்கு ஈரான் ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் ஈரான் மீதான தாக்குதலை இரண்டு வார காலத்திற்கு நிறுத்தி வைக்க நான் ஒப்புக்கொள்கிறேன், இது ஒரு இரு தரப்பு போர் நிறுத்தமாக இருக்கும் என கூறியிருந்தார்.

Also Read

இவ்வாறு செய்வதற்கான காரணம் என்னவென்றால் ஈரானில் நாம் ஏற்கனவே அனைத்து ராணுவ இலக்குகளையும் அடைந்து விட்டோம். நீண்ட கால அமைதி மற்றும் மத்திய கிழக்கில் அமைதி ஏற்படுத்துவது தொடர்பான ஒரு உடன்படிக்கையை எட்டுவதில் வெகு தூரம் முன்னேறி விட்டோம் எனக் கூறியிருக்கிறார். அது பேச்சு வார்த்தைக்கு உகந்த அடித்தளமாக அமையும் என நாங்கள் நம்புகிறோம் என சுட்டிக்காட்டி இருக்கிறார். ஈரான் உடனான ஒப்பந்தத்தை ஏற்படுத்த இரண்டு வார கால அவகாசம் தேவைப்படுகிறது என டொனால்ட் டிரம்ப் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

எனவே இந்த இரண்டு வாரத்திற்கு ஈரான் மீதான தாக்குதல்களை நிறுத்தி வைப்பதாக அவர் குறிப்பிட்டு இருக்கிறார். இதன் மூலம் ஆறு வார காலமாக நீடித்த போர் முடிவுக்கு வந்திருக்கிறது. இதற்கு இடையே ஈரான் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை என்பது போரின் முடிவு என கருத முடியாது என கூறி இருக்கிறது. ஈரான் வெளியுறவு துறை அமைச்சர், ஈரான் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படும் பட்சத்தில் ஈரானும் பதில் தாக்குதல் நடத்தாது ,ஹார்முஸ் ஜலசந்தியை கப்பல் போக்குவரத்துக்காக திறக்கும் என அறிவித்திருக்கிறார்.

ஈரான் போர் நிறுத்தம்: உயர்ந்தது தங்கம் விலை; சரிந்தது கச்சா எண்ணெய் விலை!!

ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு வெளியான உடனேயே சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் மடமடவென சரியா தொடங்கின. பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரே இரவில் 13% குறைந்து ஒரு பேரல் 100 டாலருக்கும் கீழ் சென்று 94 டாலர்களாக விற்பனையாகிறது. அதேபோல உலக சந்தையில் இயற்கை எரிவாயு , கேஷோலின் உள்ளிட்டவையின் விலையும் சரிவடைந்து இருக்கிறது. கச்சா எண்ணெய் விலை சரிவதும், ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படுவதும் இந்தியாவுக்கு நல்ல செய்தி.

Recommended For You

ஆனால் தங்கம் மற்றும் வெள்ளின் விலைகள் உயர தொடங்கி இருக்கின்றன. உலக சந்தையில் ஸ்பாட் கோல்டு விலை ஒரு அவுன்ஸ் 2.26% உயர்ந்து 4814 டாலர்களாக வர்த்தகமாகிறது. வெள்ளியின் விலை 5% உயர்ந்து 76.77டாலர்களாகவும் விற்பனை செய்யப்படுகிறது. ஈரான் போர் நிறுத்தம் நீடிக்கும் பட்சத்தில் இனி வரும் வாரங்களில் தொடர்ச்சியாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் உயரும். இது இந்திய சந்தையிலும் வளாக எதிரொலிக்கும். அதாவது இந்தியாவில் எம்சிஎக்ஸ் வர்த்தகத்திலும், சில்லறை விற்பனையிலும் தங்கம், வெள்ளி விலை இனி எகிற போகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+