ஈரான் நாட்டில் ஒவ்வொரு நாளும் போர் தீவிரமடைந்து வருகிறது. தொடர்ந்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ராணுவம், ஈரான் மீது தாக்குதல் நடத்துகின்றன. ஈரானும் பதில் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. ஈரான் போர் காரணமாக எல்பிஜி சிலிண்டருக்கு இந்தியாவில் கட்டுப்பாடு நிலவுகிறது.
மற்றொருபுறம் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது. பல்வேறு இடங்களிலும் டீ, காபி விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது, உணவகங்கள் மூடப்பட்டிருக்கின்றன. திறக்கப்பட்டிருக்கும் உணவகங்களிலும் கூட குறிப்பிட்ட வகையிலான உணவுகள் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன. இந்த சூழலுக்கு மத்தியில் இந்தியர்கள் தங்கம் என ஒரு விஷயம் இருப்பதையே மறந்து விட்டார்கள்.

கடந்த டிசம்பர், ஜனவரி மாதங்களில் எல்லாம் தங்கம் குறித்து தான் அனைவருமே பரபரப்பாக பேசி வந்தார்கள். போட்டி போட்டுக் கொண்டு மக்கள் தங்கத்தை வாங்கினார்கள் தங்கத்தில் முதலீடு செய்தார்கள். ஆனால் இன்றோ நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. ஈரான் போர் காரணமாக இந்தியாவில் தங்கம் விற்பனை பெருமளவு சரிவடைந்து இருக்கிறதாம். பிப்ரவரி மாத இறுதி மற்றும் மார்ச் மாதத்தின் தற்போது வரை இந்தியாவில் தங்க நகை விற்பனை பெருமளவில் குறைந்து விட்டது என இந்திய நகை விற்பனையாளர்கள் சங்கத்தின் செயலாளர் சுரேந்திர மேத்தா தெரிவிக்கிறார்.

வாடிக்கையாளர்களிடம் கடைக்கு வந்து நகை வாங்க வேண்டும் என்று ஆர்வமே இல்லை அனைவருமே தங்கள் கைவசம் இருக்கும் பணத்திற்கு எரிபொருள் , கேஸ் மற்றும் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கே முன்னுரிமை தருகிறார்கள் என கூறுகிறார். இதனால் நகைக்கடைகள் அனைத்தும் காற்று வாங்குகிறது என அவர் தெரிவித்திருக்கிறார். தங்கத்தின் விலையும் பெரிய அளவில் உயராமல் இருக்கிறது என அவர் சுட்டிக் காட்டுகிறார். ஜனவரியில் தான் தங்கம் விலை பல மடங்கு உயர்ந்தது அதன் பிறகு சரிந்தது , பொதுவாக விலை உயர்ந்த பின்னர் குறைகிறது என்றால் அதிக அளவில் மக்கள் வந்து தங்கம் வெள்ளி நகைகளை வாங்குவார்கள். ஆனால் இந்த முறை மக்களிடையே இதற்கு வரவேற்பு இல்லை என கூறுகிறார்.
ஈரான் போர் தொடங்கியது பிப்ரவரி 28ஆம் தேதி. இந்தியாவில் பிப்ரவரி 27ஆம் தேதி அன்று 24 கேரட் தங்கம் 10 கிராம் விலை 1,59,097 ரூபாயாக இருந்தது. அதுவே மார்ச் 16ஆம் தேதி 1, 55, 714 ரூபாய் என சரிவடைந்து இருக்கிறது. அதாவது ஈரான் போருக்கு பிறகு இந்தியாவில் தங்கம் விலை பெருமளவு குறைந்திருக்கிறது. தங்கம் விலை குறைந்தும் மக்கள் கடையில் வந்து தங்கம் வாங்க ஆர்வம் காட்டாததால் நகை விற்பனை டல் அடிப்பதாக கூறுகிறார்.
ஈரான் போர்க்காரணமாக கச்சா எண்ணெய் விலைகள் உயர்ந்த வண்ணம் இருக்கின்றன. ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 106 டாலர்கள் என்ற அளவை எட்டி இருக்கிறது. இது விரைவில் 120 டாலர்கள் கடந்து விற்பனையாகும் என சொல்லப்படுகிறது. இதனால் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவடைந்திருக்கிறது. அந்த வகையில் உலக சந்தையில் டாலரின் மதிப்பு உயர்ந்து வருவதால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் குறைந்துள்ளன. அது இந்திய சந்தையிலும் எதிரொலிக்கிறது.
More From GoodReturns

தங்கம் விலையில் அதிரடி திருப்பம்! டிரம்ப் கொடுத்த போர் நிறுத்த ட்விஸ்ட்! அடுத்து என்ன நடக்கும்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை அதிரடி சரிவு: நகை வாங்குவோர் மகிழ்ச்சி!!

Gold விலை ஏறினாலும் தணியாத மோகம்! இந்தியர்களின் அதிரடி வேட்டை! கவலையில் நிதியமைச்சகம்?

மதுரையில் இன்று தங்கம் விலை அதிரடி உயர்வு: மேலும் விலை ஏறுமா?

ஈரான் போர் நிறுத்தம்: உயர்ந்தது தங்கம் விலை; சரிந்தது கச்சா எண்ணெய் விலை!! ஓவர் நைட்டில் எல்லாமே மாறியது!!

Gold loan: ஆர்பிஐ கொண்டு வந்துள்ள ”7 நாட்கள்” விதி!! தங்க நகை கடன் வாங்குவோருக்கு மேஜர் அப்டேட்!!

ஈரான் போர் நிறுத்தம்: கச்சா எண்ணெய், LPG, LNG வாங்குவதில் போட்டி! கத்தாருக்கு பறந்த மத்திய அமைச்சர்!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

ஈரான் போர் நிறுத்தம் நீடிக்குமா? வெள்ளிக்கிழமை நடக்க இருக்கும் டிவிஸ்ட்!!

ஈரான் போரை மையமாக வைத்து புதிய தொழில்: கோடிகளை அள்ளும் டிரம்ப் மகன்கள்!! வெளிச்சத்துக்கு வந்த உண்மை!!



Click it and Unblock the Notifications