உக்கிரமடையும் ஈரான் போர்: தங்கம், வெள்ளி விலை எவ்வளவு வரை உயரும்? இப்போது நகை வாங்கலாமா வேண்டாமா?

ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டு ராணுவ நடவடிக்கை உலகையே ஸ்தம்பிக்க வைத்திருக்கிறது. கடந்த சனிக்கிழமை அன்று திடீரென அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் தீவிரமான ராணுவ தாக்குதலை தொடங்கின. டெஹ்ரான் மற்றும் பல்வேறு பகுதிகளையும் குறி வைத்து குண்டுகளை வீசியது. இந்த தாக்குதலில் ஈரான் தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார்.

கமேனியின் படுகொலை ஈரான் நாட்டு ராணுவத்தை உக்கிரமடைய வைத்துள்ளது. ஈரான் நாட்டு ராணுவம் இஸ்ரேல் மீதும் பல்வேறு மத்திய கிழக்கு நாடுகளின் மீதும் தொடர்ந்து தாக்குதல் நடத்திய வண்ணம் இருக்கிறது . துபாய், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் வசிப்பவர்கள் அனைவருமே தற்போது மிகுந்த அச்சத்துடனே ஒவ்வொரு நொடியையும் கழித்து வருகின்றனர். இந்த போர் பதற்றம் ஏற்கனவே கச்சா எண்ணெய் விலையை உயர்த்திவிட்டது. அதேபோல எப்போது விலை ஏறலாம் என காத்திருந்த தங்கத்திற்கும், வெள்ளிக்கும் இது மிகச்சிறந்த ஒரு வாய்ப்பாக அமைந்துவிட்டது.

உக்கிரமடையும் ஈரான் போர்: தங்கம், வெள்ளி விலை எவ்வளவு வரை உயரும்? இப்போது நகை வாங்கலாமா வேண்டாமா?

பிப்ரவரி மாதத்தில் திருத்தத்தில் இருந்த தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் ஈரான் போர் தொடங்கிய உடனேயே உயர தொடங்கி விட்டன. உலக சந்தையில் ஸ்பாட் கோல்ட் ஒரு அவுன்ஸ் இன்று 5357 டாலர் வரை சென்றது. அதே வேளையில் வெள்ளியின் விலை ஒரு அவுன்ஸ் 90 டாலர்கள் என்ற அளவை எட்டிவிட்டது. ஈரான் போர் இன்னும் ஒரு வாரம் நீடித்தால் தங்கம் விலை 6000 டாலர்களை கடக்கும் என்கிறது தி வால் ஸ்டிரீட் ஜர்னல். உலக சந்தையில் தங்கம் விலை உயர்ந்தால் இந்தியாவிலும் அது வலுவாக எதிரொலிக்கும்.

உக்கிரமடையும் ஈரான் போர்: தங்கம், வெள்ளி விலை எவ்வளவு வரை உயரும்? இப்போது நகை வாங்கலாமா வேண்டாமா?

இந்தியாவில் இன்று ஹோலி பண்டிகையை முன்னிட்டு பங்குச்சந்தைகளுக்கு விடுமுறை என்பதால் எம்சிஎக்ஸ் சந்தையில் தங்கம், வெள்ளி விலையில் மாற்றமில்லை. உள்ளூர் சந்தையை பொறுத்தவரை தங்கம் விலை சற்றே குறைந்து இருக்கிறது. ஆனால் ஒரு பவுன் 1.25 லட்சம் ரூபாய் என்ற விலையில் இருந்து சரியவில்லை. சென்னை பொறுத்தவரை இன்றைய தினம் ஒரு கிராம் ஆபரண தங்கம் 15,650 ரூபாய்க்கும் ஒரு சவரன் ஆபரண தங்கம் 1,25,200 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. அதாவது ஒரு சவரன் தங்கத்தின் விலை 1.25 லட்சம் ரூபாய் என்ற அளவிலேயே நீடிக்கிறது. இந்த விலையை வைத்து பார்க்கும் போது இன்றைய சூழலில் ஒரு பவுனுக்கு செயின் வாங்க வேண்டும் என்றால் கூட செய்கூலி, சேதாரம், ஜிஎஸ்டி இவை எல்லாம் சேர்ந்து குறைந்தது 1.50 லட்சம் ரூபாய் தேவை. வெள்ளி விலையில் மாற்றமில்லை ஒரு கிராம் 315 ரூபாய்க்கு ஒரு கிலோ 3 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

உக்கிரமடையும் ஈரான் போர்: தங்கம், வெள்ளி விலை எவ்வளவு வரை உயரும்? இப்போது நகை வாங்கலாமா வேண்டாமா?

ஈரான் போர் தற்போதைக்கு முடிவடைவதாக தெரியவில்லை. அடுத்த சில வாரங்களுக்கு இந்தப் போர் நீடிக்கும் என சொல்லப்படுகிறது. இது நடந்தால் சர்வதேச அளவில் முதலீடாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளாக கருதப்படக் கூடிய தங்கம் மற்றும் வெள்ளியில் தங்களுடைய பணத்தை திருப்பி விடுவார்கள். இதனால் உலக சந்தையில் தினம் தினம் தங்கம், வெள்ளி விலை உயரும்.

என்ரிச் மணி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொன்முடி, கோமெக்ஸ் வர்த்தகத்தில் தங்கம் விலை ஒரு அவுன்ஸ் தற்போது 5300 லிருந்து 5500 என்ற டாலர்களுக்குள் இருக்கிறது, இது 5500-ஐ கடந்து விட்டால் அதன் பின் தங்கம் விலை உயர்வை தடுக்கவே முடியாது என்கிறார். நிபுணர்கள் கூற்றுப்படி ஒரு அவுன்ஸ் தங்கம் 6000 டாலர்களை தொட்டால் இந்தியாவில் 24 கேரட் தங்கம் விலை ஒரு கிராம் சுமார் 20000 ரூபாய் வரையிலும் 10 கிராம் 2 லட்சம் ரூபாய் வரையிலும் செல்ல வாய்ப்புள்ளது. 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் சுமார் 18000 வரையிலும் ஒரு சவரன் விலை 1,44,000 வரையிலும் தொடலாம்.

தற்போதைக்கு 90 டாலரில் இருந்து 95 டாலர்களுக்குள் விலை ஏறி இறங்கும் வெள்ளி 100 டாலரை கட்ந்து விட்டால் பழைய படி வரலாற்று உச்சபட்ச விலையை எட்டும் என நிபுணர்கள் கணிக்கின்றனர். ஈரான் போர் நீடிக்கிறது, சீனா, ரஷ்யா ஆகியவை ஈரானுக்கு ஆதரவாக கை கோர்கின்றன, அமெரிக்கா , இஸ்ரேல் உக்கிரமாக தாக்குதல் நடத்துகிறது, ஹார்முஸ் ஜலசந்தி தொடர்ந்து மூடப்படுகிறது எனும் போது தங்கம், வெள்ளி விலை உயர்வை தடுக்கவே முடியாது என நிபுணர்கள் கூறுகின்றனர். முதலீட்டாளர்கள் கவனத்துடனே முதலீட்டு முடிவுகளை எடுக்க வேண்டும் என்கின்றனர். தங்கம், வெள்ளி நகை வாங்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் சற்றே தள்ளி போடலாம் என்ற யோசனையும் முன் வைக்கப்படுகிறது.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+