வழக்கமாக புவிசார் பதற்றம் ஏற்படுகிறது, போர் நடக்கிறது என்றாலே முதலில் விலை உயர்வது தங்கம் தான். அப்படி பிப்ரவரி 28ஆம் தேதி ஈரானில் போர் தொடங்கிய போது இனி தங்கம் விலை அவ்வளவு தான், பல மடங்கு விலை உயர போகிறது என பலரும் அச்சமடைந்தனர். ஆனால் நிலவரமோ அதற்கு மாறாக இருக்கிறது.
போர் தொடங்கிய பிப்ரவரி 28ஆம் தேதி 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் 15,550 ரூபாய்க்கு விற்கப்பட்டது. மார்ச் 1ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையாக இருந்த போதும் அன்றைய சென்னையில் தங்கம் விலை உயர்ந்தது. ஒரு கிராம் ஆபரண தங்கம் 15,775 ரூபாய் என விலை உயர்த்தப்பட்டது. ஆனால் அதன் பின்னர் நடந்தது தான் டிவிஸ்ட்.

மார்ச் 2ஆம் தேதி திங்கள்கிழமை முதல் தங்கம் விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதற்கு மாறாக தங்கம் விலை குறைந்தது. மார்ச் 6ஆம் தேதி வரை தொடர்ச்சியாக 5 நாட்களுக்கு சென்னையில் தங்கம் விலை குறைந்தது. அதன் பின்னர் லேசாக உயர்ந்து பின்னர் மீண்டும் குறைந்தது. மார்ச் 1 முதல் இன்று வரையிலான இந்த 14 நாட்களில் சென்னையில் ஆபரண தங்கம் விலை 4 நாட்கள் மட்டுமே விலை உயர்ந்துள்ளது. மற்ற நாட்களில் எல்லாமே தங்கம் விலை குறைந்துள்ளது.
சென்னையில் நேற்று 14,900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் ஆபரண தங்கம் இன்று 140 ரூபாய் விலை குறைந்து 14,760 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரண தங்கம் நேற்று 1,19,200 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் அது இன்று 1,120 ரூபாய் விலை குறைவு கண்டு 1,18,080 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 10 கிராம் தங்கம் விலை 147,600 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
24 கேரட் தங்கம் ஒரு கிராம் 154 ரூபாய் விலை குறைந்து 16,102 ரூபாய்க்கும் ஒரு சவரன் 1232 ரூபாய் விலை சரிந்து 1,28,816 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 10 கிராம் தங்கம், 161,020 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 18 கேரட் தங்கம் ஒரு கிராம் 150 ரூபாய் விலை சரிந்து 12,400க்கும் ஒரு சவரன் 1200 ரூபாய் விலை குறைவு கண்டு 99,200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து 280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ 2.90 லட்சத்திற்கு விற்பனையாகிறது. ஈரான் போருக்கு மத்தியிலும் தங்கம், வெள்ளி விலைகள் உயராமல் இருப்பது ஆச்சர்யத்தை தருகிறது. இதற்கு முக்கிய காரணம் ஈரான் போரால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது இதனால் அமெரிக்க டாலர் மதிப்பு வலுவடைந்தது. டாலர் வலுவடைந்ததால் தங்கம் விலை ஏறவில்லை. இந்த மாதம் முழுவதும் தங்கம், வெள்ளி விலைகள் குறிப்பிட்ட வரம்பிற்குள்ளாகவே நீடிக்கும் என சொல்லப்படுகிறது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

சட்டென சரிந்த தங்கம் விலை!! வெள்ளி விலையும் குறைந்தது!! டிரம்புக்கு தான் நன்றி சொல்லனும்!!

கோயம்புத்தூர் மக்களே தங்கம் வாங்க சிறந்த நாள்!! தடாலடியாக குறைந்த விலை!!

17 வருட மோசமான நிலையில் தங்கம் விலை.. இதைவிட்ட வேற சான்ஸ் கிடைக்காது.. இது செம டிவிஸ்ட்..!!

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

தங்கம், வெள்ளி விலை சரிந்தது: இப்போதே முதலீடு செய்யலாமா? இன்னும் விலை குறையுமா?

தங்கம், வெள்ளி நகைகளின் இறக்குமதிக்கு செக் வைத்த மத்திய அரசு!! வியாபாரிகளின் நூதன மோசடி அம்பலம்!!

தங்கம், வெள்ளி விலை தடாலடியாக உயர காரணம் என்ன? இனி வரும் நாட்கள் எப்படி இருக்கும்?

வங்கி லாக்கரில் உள்ள உங்க நகை சேஃபா? லாக்கர் ரகசியமும் அபராதமும்?

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் இன்றும் அதிசயம்.. வாங்க நல்ல வாய்ப்பு.. ஆனா ஒரு விஷயம்..!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

Silver Crash: தங்கத்தை விடுங்க.. வெள்ளியோட ஆட்டத்தை பாருங்க! முதலீடு செய்ய இது சரியான நேரமா?



Click it and Unblock the Notifications