வாரத்தின் முதல் நாளான இன்று சென்னையில் ஆபரண தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் மாற்றமடைந்துள்ளன. ஈரானில் போர் மூன்றாவது வாரமாக நீடிக்கிறது. வழக்கமாக இது போன்ற புவிசார் பதற்றங்கள் ஏற்படும் போது தங்கம், வெள்ளி விலை உயரும். ஆனால் ஈரான் போர் தங்கம், வெள்ளி விலையில் அப்படி ஒரு மாற்றத்தை ஏற்படுத்தவில்லை மாறாக விலைகள் ஒவ்வொரு நாளும் சரிவடைந்த வண்ணம் தான் இருக்கின்றன.
சென்னையில் இன்றைய தினம் தங்கம் மற்றும் வெள்ளி ஆகிய இரண்டுமே விலை சரிவை கண்டிருக்கின்றன. சனிக்கிழமை அன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 14, 760 ரூபாய்க்கு விற்பனையானது அதுவே இன்றைய தினம் 14,710 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது. அதாவது தங்கம் விலை ஒரு கிராம் ரூ.50 விலை குறைவு கண்டிருக்கிறது.

ஒரு சவரன் ஆபரணத் தங்கம் நேற்றைய தினம் 1,18,080 ரூபாய்க்கு விற்பனையானது. அதுவே இன்று 400 ரூபாய் விலை குறைந்திருக்கிறது. சென்னையில் இன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 1,17,680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் கடந்த நான்கு வர்த்தக நாட்களாக தங்கம் விலை குறைந்த வண்ணம் தான் இருக்கிறது. மார்ச் 12ஆம் தேதி தொடங்கி இன்று வரையிலான நான்கு வர்த்தக நாட்களில் மட்டும் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 410 குறைந்திருக்கிறது. ஒரு சவரன் என பார்க்கும்போது 3280 ரூபாய் குறைந்து விற்பனையாகி வருகிறது.
ஆபரண தங்கத்தின் விலை ஈரான் போருக்கு மத்தியிலும் சரிவடைந்து வரக்கூடிய சூழலில் வீட்டில் திருமணம் போன்ற விசேஷங்களை வைத்திருப்பவர்கள் தங்க நகை வாங்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் விலை குறைந்து இருக்கக்கூடிய இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு தங்க நகைகளை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். அதே முதலீடு செய்பவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்கத்தில் முதலீடு செய்து கொள்ளலாம் என நிபுணர்கள் பரிந்துரை செய்கின்றனர்.
தங்கத்தை தொடர்ந்து இன்றைய தினம் வெள்ளியின் விலையும் குறைந்து இருக்கிறது. சென்னையில் நேற்று ஒரு கிராம் வெள்ளி 280 ரூபாய்க்கு விற்பனையானது அதுவே இன்று நான்கு ரூபாய் குறைந்து 276 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது ஒரு கிலோவுக்கு 40 ஆயிரம் ரூபாய் குறைந்து 2 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.
உலக சந்தையில் ஸ்பாட் தங்கம் விலை 5000 டாலருக்கு கீழ் சரிந்தது, அதே போல வெள்ளி விலை 80 டாலருக்கு கீழ் சென்றதே இந்திய சந்தையில் விலை குறைய முக்கிய காரணம். எம்சிஎக்ஸ் வர்த்தகத்திலும் 10 கிராம் தங்கம் விலை இன்று சரிவடைந்து வர்த்தகம் தொடங்கும் போதே 1,56,840 ரூபாய் என வர்த்தகமானது. முந்தைய நாள் விலையை விட 2000 ரூபாய் வரை விலை குறைந்தது. வெள்ளி விலை ஒரு கிலோ 2,54,816 ரூபாய் என முந்தைய நாளை விட 5000 ரூபாய் வரை சரிவை கண்டது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு குட் நியூஸ்!! உலக சந்தையில் நடந்த பெரிய மாற்றம்!!

சர்ரென சரிந்த தங்கம், வெள்ளி விலை..!! ரூட்டு மாறுது.. இது தான் நல்ல சான்ஸ் மக்களே!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஈரான் போர் தொடங்கியதில் இருந்து முதன்முறையாக நடந்த விலை மாற்றம்..!!

தங்கம் விலை தொடர் சரிவு.. ஈரான் போரில் மொத்தமாக புரட்டிப்போட்ட சம்பவம்..!!

தங்கம் விலை அதிரடி சரிவு! $5,100-க்கு கீழ் இறங்கியது - இது வாங்க சரியான நேரமா?

இந்தியாவில் இன்று தங்கம், வெள்ளி விலை உயர்ந்ததா? குறைந்ததா?: லைவ் அப்டேட்ஸ்

தங்கம் விலை உயர்வால் மதுரை மக்கள் சோகம். ஒரு பவுன் தங்கம் எவ்வளவு தெரியுமா..?

தங்கம் விலை தடாலடி சரிவு! சாமானியர்களுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பா? அல்லது எச்சரிக்கையா?

வெள்ளி விலை: கிணற்றில் போட்ட கல் போல நிற்கிறது..!! முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்..?

தங்கம் இந்த லெவலுக்கு வந்தால் மட்டும் வாங்குங்க.. முதலீட்டாளர்களுக்கு பொருளாதார நிபுணர்கள் முக்கிய அட்வைஸ்..!

Dubai: தள்ளுபடி விலையில் விற்கப்படும் தங்கம்.. துபாயில் மட்டும் ஏன் இப்படி..?

மதுரை-யில் இன்று தங்கம் விலை உயர்வு.. விலை உயர்வுக்கு என்ன காரணம்..?

மதுரை மக்களே.. தங்கம் விலை குறைந்தது.. உடனே நகை கடைக்கு கிளம்புங்க..!!

ஒரு நேர சாப்பாட்ட நிறுத்திட்டு அந்த காசுக்கு வெள்ளி வாங்கி வைங்க!! ராபர்ட் கியோசாகி அதிரடி!!



Click it and Unblock the Notifications

