இந்தியாவில் உணவு ஆர்டர் செய்யும் செயலிகள் பிரபலமடைந்துள்ளன. குறிப்பாக நகரங்களில் இந்த செயலிகளின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. போனில் ஸ்விக்கி, ஸோமேட்டோ போன்ற செயலிகளை கிளிக் செய்து நமக்கு பிடித்த உணவை ஆர்டர் செய்தால் போதும்.
குறிப்பிட்ட நிமிடங்களில் நமக்கு பிடித்த உணவு கைக்கு வந்துவிடும். இனி ரயிலில் பயணிக்கும் போது இந்த சேவையை பெற முடியும் என பயணிகளுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்டுள்ளது ஐஆர்சிடிசி.

ஸ்விக்கி மூலம் உணவு டெலிவரி: ஐஆர்சிடிசி எனப்படும் இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிஸம் கார்ப்பரேசன், உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கியிடம் பார்டனர்ஷிப் போட்டுள்ளது.
ஐஆர்சிடிசியின் ஈ-கேட்டரிங் தளம் மூலம் பயணிகள் முன் கூட்டியே ஆர்டர் செய்யும் உணவுகளை டெலிவரி செய்வதற்காக ஸ்விக்கி நிறுவனத்துடன் இணைந்து செயல்பட தொடங்கியுள்ளது. இதன்படி ரயில் பயணிகள் ஆர்டர் செய்யும் உணவு பொருட்களை ஸ்விக்கி நிறுவனம் நேரடியாக பயணிகளின் இருக்கைக்கே கொண்டு வந்து சேர்த்துவிடும்.
4 ரயில் நிலையங்களில் முதல்கட்ட சோதனை: முதல் கட்டமாக நான்கு ரயில் நிலையங்களில் இதற்கான சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது. பெங்களூரு, புவனேஸ்வர், விஜயவாடா மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய நான்கு ரயில் நிலையங்களில் மார்ச் 12 ஆம் தேதி முதல் ஸ்விக்கி மூலம் உணவு டெலிவரிக்கான சேவை துவங்க உள்ளதாக ஐஆர்சிடிசி திட்டமிட்டுள்ளது. இதன் வெற்றியை பொறுத்து 59 ரயில் நிலையங்களில் இது விரிவுப்படுத்த முடிவெடுத்துள்ளது.
ஐஆர்சிடிசி பங்குகள் உயர்வு: மும்பை பங்குச்சந்தையில் சமர்ப்பித்த ஒழுங்குமுறை ஆவணப்பதிவில் இந்த திட்டம் குறித்து ஐஆர்சிடிசி விளக்கியுள்ளது. ஸ்விக்கி வழியே ஈ-கேட்டரிங் சேவை விரைவில் நடைமுறைக்கு வரும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஸோமேட்டோவுடன் கைக்கோர்ப்பு: ஐஆர்சிடிசி என்பது இந்திய ரயில்வே துறையின் கேட்டரிங் சேவை வழங்கும் ஒரு அமைப்பு. அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் சிறந்த சேவை வழங்குவதற்காக ஐஆர்சிடிசி பல்வேறு நிறுவனங்களுடன் கை கோர்த்து வருகிறது.
சில மாதங்களுக்கு முன்பு , ஐஆர்சிடிசி உணவு டெலிவரி நிறுவனமான ஸோமேட்டோவுடன் இணைந்து சில ரயில் நிலையங்களில் உணவு டெலிவரி சேவையை வழங்கியது. டெல்லி, பிரயாக்ராஜ் , கான்பூர், லக்னோ மற்றும் வாரணாசியில் ஸோமேட்டோ சேவை வழங்கியது.
இதற்கு பயணிகள் மத்தியில் வரவேற்பு கிடைத்ததை அடுத்து ஸ்விக்கியுடனும் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளது. இனி ரயில் பயணிகள் தங்களுக்கு பிடித்த உணவுகளை உள்ளூர் சுவைக்கு ஏற்ப ஆர்டர் செய்து சாப்பிட முடியும். இதனிடையே ஸ்விக்கி இந்த ஆண்டு ஐபிஓ வெளியிட்டு பங்குச்சந்தையில் களமிறங்க உள்ளது.
ஐபிஓ மூலம் 8,300 கோடி ரூபாயை திரட்ட ஸ்விக்கி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஐஆர்சிடிசி உடனான இந்த ஒப்பந்தம் ஸ்விக்கியின் வளர்ச்சிக்கு மேலும் கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Story written by: Devika
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications