இந்த வருடம் தங்கத்தை விடவும், ஏன் வேகமாக வளர்ந்து வரும் பிட்காயின்-ஐ விடவும் அதிக லாபத்தை ஒரு உலோகம் முதலீட்டாளர்களுக்குக் கொடுத்துள்ளது என்றால் உங்களால் நம்ப முடியுமா..?
2021ஆம் ஆண்டின் முதல் 3 மாத காலத்தில் மட்டும் தங்கத்தை விடவும் 3 மடங்கு காஸ்ட்லியான இரிடியம் உலோகத்தின் விலை சுமார் 131 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. பிளாட்டினம் மற்றும் பலாடியம் ஆகிய உலோகத்தின் துணைப் பொருள் தான் இந்த இரிடியம், பொதுவாக இந்த உலோகத்திற்குப் பெரிய அளவிலான வர்த்தகம் இல்லை.

ஆனால் இந்த வருடம் இரிடியம் மீது அதிகளவிலான முதலீடுகள் குவிந்த காரணத்தால் குறைந்த காலகட்டத்தில் இதன் விலை சுமார் 131 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
தற்போது இரிடியம் உலோகம் எலக்ட்ரானிக்ஸ் ஸ்கிரீன், ஸ்பார்க் பிளக்-ல் அதிகளவில் பயன்படுத்தும் காரணத்தால் இதற்குச் சந்தையில் டிமாண்ட் அதிகரித்துள்ளது என இரிடியம் சுத்திகரிப்பு நிறுவனமான Heraeus Group தெரிவித்துள்ளது.
இரிடியம் உலோகத்திற்கான வர்த்தக அளவும் குறைவு, அதேபோல் இதே உற்பத்தி செய்யும் முறையும், அதற்கான செலவும் மிக அதிகம். இதன் வாயிலாகவே தங்கத்தை விடவும் சுமார் 3 மடங்கு விலையில் இரிடியம் உலோகம் விற்பனை செய்யப்படுகிறது.
தற்போது இரிடியம் உலோகம் ஒரு அவுன்ஸ் 5000 டாலரில் இருந்து 6,000 டாலர் வரையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் தங்கம் ஒரு அவுன்ஸ் 1,730 டாலருக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் இரிடியம் தங்கத்தை விடவும் 3 மடங்கு அதிகமான விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications