நகைக்கடைக்குள்ள கால் வைக்கும்போது அந்த ஜொலி ஜொலிக்கும் நகைகளை பார்த்தாலே மனசு அப்படியே மயங்கிடும். எத்தனை தான் வாங்கியிருந்தாலும் மனதில் உள்ள ஆசை மட்டும் எப்போதும் தீராது. என்ன தான் விலை உச்சத்தை எட்டினாலும், ஏதோ கையில்ல கிடைக்கிற காச வச்சு கொஞ்ச கொஞ்சமாவது வாங்கினா, பின்னாடி உதவுமே'ன்னு ஒவ்வொரு அம்மாவும், என் பொண்ணுக்கு போட்டு பார்க்கணும்'னு ஒவ்வொரு அப்பாவும் ஆசைப்படுறதுல ஒரு நியாயம் இருக்கு. ஆனா, அந்த ஜொலிப்புக்கு பின்னாடி உழைத்து சேர்த்த பணத்தில், ஒரு பெரிய பகுதி நஷ்டம் ஆகுதுன்னு சொன்னா உங்களால ஏத்துக்க முடியுமா?
நகைக்கடை விளம்பரங்களில் காட்டுற அந்த மினுமினுப்பு, நாம விற்க போகும்போது காட்டுறதில்லையே ஏன், ஒரு அவசரத்துக்கு பணமா மாத்த போகும்போது தான், செய்கூலி, சேதாரம், வரின்னு நீங்க ஆசையா வாங்குன தங்கத்துல இருந்து ஒரு பெரிய தொகையை அநியாயமா கழிப்பாங்க. அப்போ வர்ற வலி இருக்கே, அது ரொம்ப பெருசு.

முதலீடுங்கிறது நம்ம பணத்தை வளர்க்கணுமே தவிர, வாங்கும்போதே நஷ்டத்தை தரக்கூடாது. புத்திசாலித்தனமான முதலீட்டாளர்கள் ஏன் இன்னைக்கு ஆபரண தங்கத்தை தவிர்த்துவிட்டு வேற வழிகளை தேடுறாங்க? உங்க வேர்வை சிந்தி சேர்த்த பணம் ஒரு ரூபாய் கூட வீணாகாமல் இருக்க, நீங்க தெரிஞ்சுக்க வேண்டிய அந்த கசப்பான உண்மை என்ன? வாருங்கள், விரிவாகப் பார்ப்போம்.
மறைமுக கட்டணங்கள்?
தங்க நகைகளின் விலை, அதில் பயன்படுத்தப்படும் தங்கத்தின் உண்மையான மதிப்பை விட மிக அதிகமாக இருக்கும். இதற்கு முக்கியமான காரணம், ஒவ்வொரு நகையின் மீதும் நகைக்கடைக்காரர்கள் விதிக்கும் பல்வேறு கூடுதல் கட்டணங்கள் ஆகும்.
செய்கூலி: நகையை வடிவமைக்க ஆகும் உழைப்புக்கான கூலி.
வடிவமைப்பு கட்டணங்கள் (Design charges): நுணுக்கமான வேலைப்பாடுகளுக்கான தனிப்பட்ட செலவு.
பதிக்கப்பட்ட கற்கள் விலை: நகையில் உள்ள கற்களின் விலை கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று. ஏனெனில் அந்த நகையை விற்கும் போது வாங்கிய விலைக்கு எடுக்க மாட்டார்கள். மாறாக தங்கத்தின் மதிப்பை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்வார்கள். கற்களை கணக்கிலேயே எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.
பிராண்ட் பிரீமியம்: பிரபல நிறுவனங்களின் பெயருக்காக வசூலிக்கப்படும் கூடுதல் தொகை.
மேலாக சுட்டிக் காட்டிய படி, கூடுதல் செலவுகள் நகையின் ஒட்டுமொத்த விலையை பெருமளவு உயர்த்துகின்றன. அதன் விளைவாக, ஒருவர் முதலீட்டு நோக்கத்திற்காக மட்டும் நகையை வாங்கினால், அவர் வாங்கிய அசலை திரும்பப் பெறுவதற்கே தங்கத்தின் விலை குறைந்தது 25-30% வரை உயர வேண்டும்.
உதாரணத்திற்கு: இன்று நீங்கள் 1,00,000 ரூபாய் மதிப்பிலான ஒரு நகையை வாங்குகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அதன் விலை 1,25,000 ரூபாய்க்கு மேல் உயர்ந்தால் மட்டுமே நீங்கள் லாபத்தை பார்க்க முடியும். அந்த விலையை தொடும் வரை, உங்களின் இந்த முதலீடு நஷ்டத்திலேயே நீடிக்கும்.
தங்கம் விலை அதிகரித்தாலும், நகைகளில் லாபம் குறைவு?
இந்தியாவில் சமீப காலமாக தங்கத்தின் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இதனால் தங்கம் வைத்திருக்கும் குடும்பங்களின் சொத்து மதிப்பு அதிகரித்திருந்தாலும், கோடக் அறிக்கை ஒரு முக்கியமான இடைவெளியை சுட்டிக்காட்டுகிறது: தங்கத்தின் விலை உயர்வுக்கும், தங்க நகைகள் மூலம் கிடைக்கும் லாபத்திற்கும் இடையே பெரிய வித்தியாசம் உள்ளது.
கடந்த 15 ஆண்டுகளில், தூய தங்கத்தின் சந்தை விலை ஆண்டுக்கு சராசரியாக 12.5% உயர்ந்துள்ளது. ஆனால் அதே காலகட்டத்தில் தங்க நகைகள் மூலம் கிடைத்த சராசரி ஆண்டு லாபம் வெறும் 10.3% மட்டுமே. இதன் பொருள் என்னவென்றால், நகைகளுக்காக செய்யப்படும் செய்கூலி மற்றும் இதர செலவுகளால், தூய தங்கத்தை விட நகைகளின் லாபம் ஆண்டுக்கு 2% குறைகிறது. ஆக தங்கம் விலை எவ்வளவோ உயர்ந்தாலும், ஒரு முதலீடாக நகைகள் மூலம் கிடைக்கும் நிகர லாபம் குறைவாகவே உள்ளது. ஆக தங்கத்திலேயே முதலீடு செய்தாலும், அதை நகையாக வாங்குவது சிறப்பாக இருக்காது.
சிறந்த மாற்று முதலீடுகள்?
தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புபவர்கள் நகைகளை தேர்வு செய்வது சரியான அணுகுமுறை அல்ல என்று நிதி நிபுணர்கள் வலுவாக அறிவுறுத்துகின்றனர். அதற்கு பதிலாக, முதலீட்டிற்கு ஏற்ற இந்த விருப்பங்களை அவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
1. கோல்டு இடிஎஃப் (Gold ETFs)
ஆபரணத் தங்கத்துடன் ஒப்பிடும்போது செய்கூலி கிடையாது. வெளிப்படையான விலை நிர்ணயம். மிக எளிதாகப் பணமாக மாற்ற முடியும். நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு இது மிகச் சிறந்த தேர்வாகும்.
2. தங்க நாணயங்கள் (Gold Coins)
நகைகளுடன் ஒப்பிடும்போது கூடுதல் கட்டணங்கள் மிகக் குறைவு. சேமிப்பதற்கும் விற்பனை செய்வதற்கும் மிகவும் எளிதானது. அதேபோல் தங்கக் கட்டிகளும் அதிக அளவில் தங்கம் வாங்க விரும்புவோருக்கு இதுவே சிறந்த மதிப்புடையது. இதில் செய்கூலி மற்றும் வடிவமைப்பு கட்டணங்கள் கிடையாது. மேலும் தூய்மை மற்றும் சிறந்த மறு விற்பனை மதிப்பு கொண்டது. ஆனால் இது டிஜிட்டல் மற்றும் பேப்பர் தங்கத்தை போல் இருக்காது. உதாரணத்திற்கு தங்க பத்திரங்களுக்கு ஆண்டுக்கு 2.5% வட்டி விகிதம் உண்டு. அதோடு விலை அதிகரிக்க அதிகரிக்க மூலதன மதிப்பும் உயரும். ஆக முதலீட்டு நோக்கில் முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு நிச்சயம் ஆபரண தங்கம் ஒரு சிறந்த முதலீடாக இருக்காது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

10 கிராம் தங்கம் 2 லட்சம் வரை உயர வாய்ப்பு..! தங்கம் $6000, வெள்ளி $100 எட்டுமா?

தங்கம் விலை ஏறினாலும், இறங்கினாலும் கையில் இருக்கும் காசுக்கு தங்கத்தை வாங்கி வைங்க..!!

தொடர்ந்து 2ஆவது நாளாக விலை சரிந்த தங்கம்..!! சென்னையில் இன்று ஒரு சவரன் விலை என்ன?

உக்கிரமடையும் ஈரான் போர்: தங்கம், வெள்ளி விலை எவ்வளவு வரை உயரும்? இப்போது நகை வாங்கலாமா வேண்டாமா?

மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் தங்கம், வெள்ளி.. ஈரான் - இஸ்ரேல் - அமெரிக்க தாக்குதலின் எதிரொலி..!!

பதறும் மத்திய கிழக்கு நாடுகள்.. எகிறும் தங்கம், வெள்ளி விலை! இனி என்னவாகும்?

தங்க நகை சந்தையே மாறி போச்சு!! இப்போ மக்கள் இதை தான் அதிகமா வாங்குறாங்க: நகை விற்பனையாளர்கள் தகவல்!!

இந்தியாவில் ஏன் தங்கம் விலை உயர்கிறது? - உலக தங்க கவுன்சில் தலைவர் கொடுக்கும் விளக்கம்

10 மாதங்களில் இல்லாத அளவுக்கு இந்திய தங்க சந்தையில் தள்ளுபடி – சீனாவில் பிரீமியம் விலை? ஏன்?

ஈரான் போர்: ஞாயிற்றுக்கிழமையிலும் உயர்த்தப்பட்ட தங்கம் விலை!! இனி தங்கம் விலையை கையில பிடிக்க முடியாது!!

முதலீட்டாளர்களே உஷார்! இஸ்ரேல்-ஈரான் போர்: உங்கள் சேமிப்பை பாதுகாப்பா வச்சுக்கோங்க?



Click it and Unblock the Notifications