சர்வதேச அளவில் தங்கம் பயன்பாட்டில் நம் நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது. உள்நாட்டில் தங்கம் உற்பத்தி பெரிய அளவில் கிடையாது. எனவே உள்நாட்டு தேவையின் பெரும்பகுதி இறக்குமதி வாயிலாகவே பூர்த்தி செய்யப்படுகிறது. தற்போது உள்நாட்டிலும் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை நிலவரப்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 2,882 டாலராக உள்ளது. லண்டன் ஸ்பாட் மார்க்கெட்டில் இந்த ஆண்டில் இதுவரை தங்கத்தின் விலை 9 சதவீதம் உயர்ந்துள்ளது. அதேசமயம், இதே காலத்தில் உள்நாட்டில் 10 சதவீதத்துக்கும் மேல் விலை உயர்ந்துள்ளது.

பொதுவாக, போர் பதற்றம், தேவை அதிகரிப்பு, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி போன்ற காரணங்களால் தங்கத்தின் விலை உயரக்கூடும். தற்போது தங்கம் விலை உயர்ந்து வருவதற்கு முக்கிய காரணம் அமெரிக்க அதிபர் டிரம்ப்தான் காரணம். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கனடா, மெக்சிகோ மற்றும் சீனா ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது வரி விதித்தார்.
சீன பொருட்களுக்கு 10 சதவீதமும், கனடா மற்றும் மெக்சிகோவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீதமும் வரி விதிக்கும் உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டார். டிரம்பின் இந்த நடவடிக்கை பெரிய வரி விதிப்பு போரை ஏற்படுத்தும் என்ற அச்சமும், இதன் தாக்கம் உலக பொருளாதார வளர்ச்சியில் ஏற்படும் என்ற கவலையும் ஏற்பட்டுள்ளது.
டிரம்பின் இந்த நடவடிக்கையால் ரூபாய் உள்ளிட்ட பிற நாடுகளின் கரன்சிகளுக்கு எதிரான டாலரின் மதிப்பு உயர்ந்தது. முதலீட்டாளர்கள் பங்குகளில் முதலீடு செய்வதற்கு பதிலாக பாதுகாப்பான முதலீடாக கருதப்படும் தங்கம் மற்றும் வெள்ளி பக்கம் திரும்பினர். இது போன்ற காரணங்களால் சர்வதேச சந்தையில் தங்கம் விலை கிடுகிடுவென ஏற்றம் கண்டது.
அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் வெளிமதிப்பு சரிந்தால், நமது தங்க இறக்குமதிக்கான செலவினம் அதிகரிக்கும், இந்த அதிக செலவின தொகை வாடிக்கையாளர்கள் மீது சுமத்தப்படும் என்பதால் உள்நாட்டில் தங்கத்தின் விலை உயரும். கடந்த வாரம் அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு 87.64ஆக சரிந்தது.
கடந்த 5 ஆண்டுகளில் ரூபாயின் மதிப்பு 24 சதவீதத்துக்கு மேல் சரிவு கண்டது. மேலும் நம் நாட்டில் திருமண காலம் தொடங்கி விட்டதால் தங்கத்துக்கான தேவை அதிகரித்துள்ளது. இதனால் உள்நாட்டில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிலையற்றதாக உள்ளபோதிலும், புவிசார் அரசியல் பதற்றத்தை தணிப்பதற்கான அறிகுறிகள், பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க பல்வேறு அரசாங்கங்கள் எடுக்கும் நடவடிக்கைகள் காரணமாக தங்கத்தின் விலை படிப்படியாக குறைய வாய்ப்புள்ளது என நிபுணர்கள் கணித்துள்ளனர்.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தங்கம் விலையில் திடீர் மாற்றம்! சென்னை & கோவையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

தங்கம் விலையில் நடந்த மேஜிக்!! 2026இல் இதுவே முதல்முறை!! இனி எதிர்பாராததை எதிர்பாருங்கள்!!

Madurai Gold Rate Today: ரூ.655 சரிவு – அடுத்த பெரிய உயர்வுக்கு முன் வாங்கலாமா?

தங்கம் தந்த சர்ப்பிரைஸ்!! ரூ.5000க்கு மேல் விலை குறைவு!! நகை வாங்க இதை விட்டா சான்ஸ் கிடைக்காது!!

தங்கம்,வெள்ளி விலையில் புது டிவிஸ்ட்!! போர் பதற்றத்துக்கு மத்தியில் தடாலடியாக குறைந்த விலை!!

மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் தங்கம், வெள்ளி.. ஈரான் - இஸ்ரேல் - அமெரிக்க தாக்குதலின் எதிரொலி..!!

துபாயில் பொட்டி பொட்டியாக தேக்கமடைந்த தங்கம்!! இந்தியாவுக்கு கொண்டு வர முடியாமல் தவிக்கும் டீலர்கள்!!

வெனிசுலாவில் கிடைத்த தங்க புதையல்!! 1000 கிலோ தங்கம்னா சும்மாவா!! நினைத்ததை சாதித்த டிரம்ப்!!



Click it and Unblock the Notifications