உலகளவில் அனைத்து நாடுகளும் ஒமிக்ரான் தொற்றுக் காரணமாக ஏற்படும் பொருளாதாரப் பாதிப்புகளைச் சரி செய்ய நாணய கொள்கையை மாற்றி அமைக்கவும், வட்டி விகிதங்களை உயர்த்தவும் திட்டமிட்டு வருகிறது. இதனால் தங்கம் விலை அடுத்தச் சில நாட்களில் அல்லது வாரத்தில் தாறுமாறாக உயரும் என்ற கருத்து உள்ளது.
ஆனால் சந்தை வல்லுனர்கள் இதை மாறுபட்ட கோணத்தில் பார்க்கிறார்கள். இதனால் தங்கத்தின் நிலவரம் என்ன என்பதில் அனைத்து தரப்பினரின் கவனமும் திரும்பியுள்ளது.
குறிப்பாக மகன் அல்லது மகள் திருமணத்திற்கு நீங்கள் தங்கம் வாங்க வேண்டும் என்ற திட்டம் உங்களுக்கு இருந்தால் கட்டாயம் இந்தச் செய்தி பயனுள்ளதாக இருக்கும்.
சர்வதேச சந்தை விலை
சர்வதேச சந்தையில் இந்த வாரம் ஏற்பட்ட வர்த்தக மாற்றங்கள் மூலம் தங்கம் விலை ஒரு அவுன்ஸ் 1,845 டாலர் என்ற இரண்டு வார உச்சத்தைத் தொட்டு உள்ளது. பொதுவாகத் தங்கமும், கருவூல வட்டி விகிதமும் எதிர்மறை திசையில் பயணிக்கக் கூடியவை.
மத்திய வங்கிகள்
அதாவது மத்திய வங்கிகள் தனது பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காக வட்டி விகிதத்தை அதிகரிக்கும் போது அரசின் வருமானம் தானாக உயரும், இத்தகைய காலகட்டத்தில் தங்கம் விலை சரியும்.
தங்கம் முதலீட்டில் லாபம்
ஆனால் தற்போது உலக நாடுகளின் மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தை உயர்த்த திட்டமிட்டு வரும் வேளையிலும் தங்கம் விலை சரியாமல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது, இந்த நிலைக்கு மிக முக்கியமான காரணம் தங்கம் மீதான முதலீட்டில் லாபம் மிகவும் குறைவாகக் கிடைப்பது தான்.
விருப்பமான முதலீடு
அதாவது தற்போது உலகப் பொருளாதாரம் இருக்கும் நிலையில் தனியார் முதலீட்டாளர்களுக்கும் சரி, அரசுகளுக்கும் சரி தங்கம் விருப்பமான முதலீடாக இல்லை என்பதே தற்போதைய நிதர்சனமான உண்மை.
பொருளாதாரத்தில் மாற்றம்
கடந்த ஒரு வருடத்தில் சர்வதேச பொருளாதாரத்தில் பல மாற்றங்கள் எதிர்கொண்டாலும் தங்கம் விலையில் பெரிய அளவிலான மாற்றம் இல்லாமல் தொடர்ந்து 1800 டாலர் அளவீட்டிலேயே உள்ளது.
பணவீக்கம்
இதன் மூலம் தற்போது தங்கம் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் ஒரு கருவியாக இல்லாமல் நாணய கொள்கையில் செய்யப்படும் மாற்றங்களில் ஏதேனும் தவறுகள் நடந்தால் அதைச் சமாளிக்க ஒரு சிறு கருவியாக மாறியுள்ளது.
அமெரிக்க மத்திய வங்கி
உதாரணமாக அமெரிக்க மத்திய வங்கி தற்போது குறைந்தது 4 முறை வட்டியை உயர்த்த திட்டமிட்டு உள்ளது, ஆயினும் தங்கம் விலையில் பெரிய மாற்றம் இல்லை என்பது தான் தற்போதைய பிரச்சனை.
இந்தச் சூழ்நிலையில் அடுத்த சில வாரத்தில் தங்கம் விலை உயர்ந்தாலும், மீண்டும் பழைய நிலைக்கே திரும்பும் எனச் சந்தை வல்லுனர்கள் கணித்துள்ளனர்.
More From GoodReturns

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை: ஒரே நாளில் 2 முறை விலை சரிவு.. 1 கிராமுக்கு 1000 ரூபாய் சரிவு.. ஷாக் மேல ஷாக்..!!

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பட்டென சரிந்த தங்கம் விலை.. சட்டென நகை கடைக்கு கிளம்புங்க.. ஆனா ஒரு விஷயம்..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை இனி எகிற போகுது: சிக்னல் தந்த உலக சந்தை..! ஈரான் போரில் நடந்த திடீர் திருப்பமே காரணம்?

வீட்டில் 100 கிராமுக்கு மேல் தங்கமா? உஷார்! வருமான வரித்துறை நோட்டீஸ் வரலாம்!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

தங்கம் விலை குறைஞ்சிருக்கும் நேரத்துல தமிழ்நாட்டு மக்களுக்கு இப்படி ஒரு சிக்கலா!!

இந்திய பங்குச்சந்தைக்கு பெரிய கும்பிடு போடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்..!! மீண்டும் வருவார்களா?



Click it and Unblock the Notifications