தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே இருந்தாலும் அனைவருமே தங்களுடைய முதலீட்டில் 10 லிருந்து 15 சதவீதத்தை தங்கத்திற்காக ஒதுக்கீடு செய்து விட வேண்டும் என பங்குச்சந்தை நிபுணரான சுனில் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். எக்னாமிக் டைம்ஸ்க்கு பேட்டி அளித்திருக்கும் அவர், முதலீடு தொடர்பான பல்வேறு யோசனைகளை பகிர்ந்திருக்கிறார்.
தங்க முதலீட்டையும் பங்குச்சந்தை முதலீட்டையும் நாம் ஒருபோதும் ஒப்பிட முடியாது என குறிப்பிட்டு இருக்கிறார். சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் உலகிலேயே அதிக அளவு டாலர்களில் கடன் வாங்கி வைத்திருக்கின்றன என்பதால் அவை டாலரின் மதிப்பை குறைக்க தங்கத்தை அதிகமாக வாங்கி வைக்கின்றன என்கிறார். இதனால் டாலரின் மதிப்பு குறைந்து தங்கத்தின் மதிப்பு உயர்கிறது என கூறியிருக்கிறார்.

இந்தியாவிலும் மத்திய வங்கியான ரிசர்வ் வங்கி அதிக அளவில் தங்கத்தை வாங்கி வைக்கிறது. அதன் கையிருப்பில் தங்கத்திற்கான பங்களிப்பை அதிகரித்திருக்கிறது என சுட்டிக்காட்டி இருக்கிறார். இதற்கிடையே அமெரிக்காவும் தங்களுடைய உள்நாட்டு நிதி பற்றாக்குறையை கட்டுப்படுத்துவதற்கு தங்களின் தங்க கையிருப்பை மறு மதிப்பீடு செய்வதற்கு வாய்ப்பு உள்ளது, இது நடந்தால் தங்கம் தங்கத்தின் விலையில் பல்வேறு மாற்றங்களை நாம் காண முடியும் என குறிப்பிடுகிறார்.
என்னை பொறுத்தவரை அனைவருமே தங்களுடைய முதலீட்டில் 10 லிருந்து 15 சதவீதத்தை எப்பொழுதுமே தங்கத்திற்காக ஒதுக்கீடு செய்து விட வேண்டும் என கூறுகிறார். தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து தான் வருகிறது . இப்போது விலை உயர்வாக இருக்கிறது என விட்டுவிட்டால் அடுத்த ஆண்டு இன்னும் பல மடங்கு உயர்ந்திருக்கும். எனவே இதுதான் தங்கத்தை வாங்குவதற்கு சரியான தருணம் என ஒரு தருணம் கிடையாது எனக் கூறுகிறார்.
பல்வேறு நாடுகளும் தங்களுடைய டாலர் கையிருப்பை கைவிட்டு தங்கத்தை வாங்கி அதிக அளவு சேமித்து வைக்கின்றன. எனவே தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டு தான் இருக்கும், எப்பொழுது குறையும் வாங்க வேண்டும் என காத்திருப்பது சரியல்ல என யோசனை தெரிவித்துள்ளார் . அனைத்து வகையான முதலீடுகளுக்கும் ஒரு மாற்று சொத்தாக தங்கம் பார்க்கப்படுகிறது என்பதால் மக்கள் தங்கள் கைகளில் பணம் இருக்கும் போது தங்கத்தை வாங்கி வைத்து விடுங்கள் என்கிறார்.
தங்கத்தின் விலை உச்சமடைந்துவிட்டது, இதன் பிறகு அது மேலே செல்லாது, கீழே வரும் என்பன போன்ற எந்த ஒரு கணிப்பையும் நம்மால் முடிவு செய்ய முடியாது, என்னை பொறுத்தவரை அனைவருமே தங்களுடைய முதலீட்டில் 10 லிருந்து 15 சதவீதத்தை எப்பொழுதுமே தங்கத்திற்காக ஒதுக்கீடு செய்து விட வேண்டும் அந்த வகையில் தங்கம் விலை உயர்ந்தாலும் உங்களுக்கு கவலை இருக்காது என கூறியுள்ளார்
More From GoodReturns

சூப்பர்பவர் ஆக மாறிய தங்கம்.. ஈரான் போருக்கு மத்தியில் பூகம்பம்..!!

இறங்கிய வேகத்திலேயே ஏறும் தங்கம் விலை!! சாமானிய மக்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி!!

தங்கம் விலை தொடர் சரிவு.. ஈரான் போரில் மொத்தமாக புரட்டிப்போட்ட சம்பவம்..!!

தங்கம் விலை மதுரை: இன்று அதிரடி உயர்வு! நகைப்பிரியர்களுக்கு பெரும் அதிர்ச்சி அளித்த சர்வதேச காரணங்கள்..!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை-யில் இன்று தங்கம் விலை உயர்வு.. விலை உயர்வுக்கு என்ன காரணம்..?

தங்க குழந்தையாக மாறிய சஞ்சு சாம்சன் – இது தான் 'கன்வெக்ஸ்' வெற்றியா? காத்திருந்து கிடைத்த பெரும் லாபம்!

மதுரை மக்களே.. தங்கம் விலை குறைந்தது.. உடனே நகை கடைக்கு கிளம்புங்க..!!

40 வயதில் முதலீடு செய்ய தொடங்கினால் ரூ.3 கோடி சாத்தியமா? நிபுணர்கள் சொல்லும் அதிர்ச்சி உண்மை!

இதுக்கு பேர் தான் Old is Gold-ஆ.. காலம் மாறினாலும், ஃபார்மூலா மாறாது..!!



Click it and Unblock the Notifications