பற்றி எரியும் தங்கம், வெள்ளி! இப்போது வாங்கினாலும் லாபம் கிடைக்குமா..?! உண்மை நிலவரம் என்ன..?

வாங்கும் சக்தியை விட வேகம் எடுக்கும் விலைவாசி உயர்வு ஒருபுறம்.. மறுபுறம் கனவிலும் நினைத்து பார்க்க முடியாத உச்சத்தை தொடும் தங்கம், வெள்ளியின் விலை மறுபுறம். குறிப்பாக இன்று தங்கம் மற்றும் வெள்ளி என இரண்டும் பாதுகாப்பு புகலிடமான தங்கம் மற்றும் வெள்ளி விலையானது வரலாறு காணாத உச்சத்தை எட்ட வழிவகுத்துள்ளது.

பற்றி எரியும் தங்கம், வெள்ளி! இப்போது வாங்கினாலும் லாபம் கிடைக்குமா..?! உண்மை நிலவரம் என்ன..?

2026-ம் ஆண்டின் தொடக்கமே சாமானியர்களின் கவலையை அதிகரித்துள்ளது. உலக நாடுகளுக்கு இடையே நிலவி வரும் புவிசார் அரசியல் பதற்றங்கள் மத்தியில், அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகித முடிவு குறித்த எதிர்பார்ப்பும் தங்கத்தின் விலையை ஊக்குவிக்கலாம் என்ற நிலையில் தான் உச்சத்தை எட்டி வருகிறது. அதோடு பல்வேறு நாடுகளில் நிலவி வரும் புவிசார் அரசியல் பதற்றங்கள், குறிப்பாக கிரீன்லாந்து விவகாரத்தால் சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றங்களும், இன்று இந்திய சந்தையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் தேவையை ஊக்குவித்துள்ளது 10 கிராம் தங்கம் ரூ. 1.62 லட்சத்தையும், ஒரு கிலோ வெள்ளி மலைக்க வைக்கும் வகையில் ரூ. 4 லட்சத்தையும் நெருங்கி வருகின்றன.

இனி சாமானியர்களுக்கு தங்கம் வாங்குவது கனவுதானா என திகைத்து போயிருக்கும் சூழலில், இன்னும் விலை ஏற்றம் இருக்குமா என முதலீட்டாளர்கள் காத்துக் கிடக்கின்றனர். பற்றி எரியும் இந்த விலையேற்றத்தின் பின்னணி என்ன? இது முதலீட்டுக்கான வாய்ப்பா அல்லது விலகி நிற்க வேண்டிய நேரமா? விரிவாகப் பார்ப்போம்.

வரலாறு காணாத ஏற்றம்!

உலகளாவிய அரசியல் பதற்றங்கள் மற்றும் பாதுகாப்பான முதலீடுகள் மீதான ஆர்வம் காரணமாக, இந்திய சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் இன்று (ஜனவரி 28, 2026, புதன்கிழமை) முன் எப்போதும் இல்லாத வகையில் புதிய வரலாற்று உச்சத்தை தொட்டுள்ளன. குறிப்பாக மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் (MCX) இன்று காலை வர்த்தகம் தொடங்கியவுடன் தங்கம் மற்றும் வெள்ளி ஆகிய இரண்டின் விலையும் மிரட்டும் வேகத்தில் உயர்ந்தன. அடுத்த மாத தொடக்கத்தில் எக்ஸ்பைரி ஆகவிருக்கும் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.4,800 (3%) உயர்ந்து, ரூ. 1,62,429 என்ற புதிய உச்சத்தைத் தொட்டது. இதே வெள்ளி விலை மார்ச் 5, 2026 எக்ஸ்பைரி ஆகும் வெள்ளி ஒப்பந்தம், ஒரு கிலோவுக்கு யாரும் எதிர்பாராத விதமாக ரூ. 21,400 (6%) உயர்ந்து, ரூ. 3,77,655 என்ற நிலையை எட்டியது.

விலை உயர்வுக்கு முக்கியக் காரணங்கள்

இந்த அதிரடி உயர்வுக்கு பின்னால் சர்வதேச அளவில் சில முக்கிய பொருளாதாரக் காரணிகள் உள்ளன. முக்கியமாக கிரீன்லாந்து விவகாரம் காரணமாக ஐரோப்பிய நாடுகள் அமெரிக்க கருவூல பத்திரங்களை விற்க கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. இது சந்தையில் பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கியுள்ளது. இதனிடையே தான் டாலர் மதிப்பானது கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அமெரிக்க டாலர் குறியீடு சரிந்துள்ளது. டாலர் பலவீனமடையும் போது, முதலீட்டாளர்கள் தங்கத்தை நோக்கி நகர்வது வழக்கம் தான் என்றாலும், இந்த நகர்வானது ஐரோப்பிய நாடுகளின் முடிவுகளால் ஆதரிக்கப்படுகிறது. ஆக தங்கம் விலையானது தொடர்ந்து அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம் காணப்படுகிறது.

சர்வதேச சந்தை நிலவரம்

உலக சந்தையிலும் தங்கம் ஒரு அவுன்ஸ் 5,200 டாலர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. வெள்ளி விலை இந்த ஆண்டில் மட்டும் இதுவரை சுமார் 60% லாபத்தை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது டாலர் மதிப்பு சரிவு, அரசியல் பதற்றங்கள், பாதுகாப்பான முதலீடு என பல காரணிகள் மத்தியில், பங்குச் சந்தை போன்ற முதலீடுகளில் இருந்து முதலீட்டாளர்கள் வெளியேறி, தங்கம் வெள்ளியில் முதலீடு செய்து வருகின்றனர்.

இப்போது வாங்கலாமா?

நிபுணர்கள் இது குறித்து கூறுகையில், சந்தையில் தற்போது கடும் ஏற்ற இறக்கங்கள் நிலவினாலும், தங்கம் மற்றும் வெள்ளிக்கான ஆதரவு நிலை வலுவாக உள்ளது என்கிறார். மேலும் தற்போதைய சூழலில் பலரும் உச்சத்தில் வாங்கலாமா என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர். ஆனால் விலை சற்று குறையும் போது (Buy on dips) வாங்குவது தற்போதைய சூழலில் முதலீட்டாளர்களுக்கு சிறந்த யுக்தியாக இருக்கும் எனப் பரிந்துரைக்கின்றனர். அதுவும் நீண்ட கால அடிப்படையில் திட்டமிடல் நல்ல விஷயமாகவும் பார்க்கப்படுகிறது. இந்த திடீர் விலை உயர்வு ஆபரணத் தங்கம் வாங்குவோருக்கு சுமையாக இருந்தாலும், முதலீட்டாளர்களுக்கு ஒரு பொற்காலமாக பார்க்கப்படுகிறது.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+