இன்றைய சூழலில் பலரும் பல வங்கிகளில் வங்கி கணக்குகளை வைத்திருப்பார்கள். அதற்கு முக்கிய காரணம் என்று பார்த்தால் சில சந்தர்ப்பங்களில் சில வங்கி கணக்குகளில் மட்டுமே சேவைகளை பெற முடியும். உதாரணமாக சொல்ல வேண்டுமானால் பள்ளி பருவத்தில் ஸ்காலர்ஷிப் பெறுவதற்கு குறிப்பிட்ட வங்கியை தேர்ந்தெடுத்து அந்த வங்கியில் வங்கி கணக்கை திறக்கச் சொல்லி பள்ளி நிர்வாகம் தெரிவிக்கும். இதேபோல பணிக்கு சென்றாலும் சேலரி அக்கவுண்டுக்கு குறிப்பிட்ட வங்கியில் வங்கி கணக்கு திறக்க வேண்டும். இது போன்ற விஷயங்களால் ஒருவருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகள் இருக்கலாம். அப்படி பல வங்கி கணக்குகளை வைத்திருப்பதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.
ஏன் பல வங்கி கணக்குகள் திறக்கப்படுகிறது?: தனிநபர்கள் பல வங்கி கணக்குகளைத் திறக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் எல்லாம் தொடங்குவதில்லை. ஆனால் காலப்போக்கில் மேலே கூறப்பட்டுள்ள பல்வேறு காரணங்களுக்காக திறக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. பல கணக்குகளைத் திறப்பது சில நன்மைகளையும் வழங்கும். அதே சமயத்தில் சில தீமைகளும் அதில் அடங்கியுள்ளன.

அதிக அளவில் வங்கி கணக்குகளை வைத்திருப்பதன் நன்மைகள்:
பரிவர்த்தனையை ட்ராக் செய்ய முடியும்: பல வங்கி கணக்குகளை வைத்திருப்பதன் முக்கிய நன்மைகளில் ஒன்று ஒவ்வொரு விஷயத்திற்கும் ஒவ்வொரு வங்கி கணக்குகளப் பயன்படுத்தலாம். இதன் மூலம் எந்த கணக்கிலிருந்து எவ்வளவு தொகை டெபிட் செய்யப்பட்டுள்ளது? எவ்வளவு தொகை கிரெடிட் ஆகியுள்ளது? என்பது குறித்த விவரங்களை துல்லியமாக தெரிந்து கொள்ள முடியும். சிலருக்கு ஒரே வங்கி கணக்கில் இவற்றையெல்லாம் பராமரிப்பதால் குழப்பங்கள் ஏற்படலாம்.
அரசு மானியங்கள் போன்றவற்றிற்கு ஒரு தனி கணக்கையும், வருமான வரி செலுத்த அல்லது பணத்தை திரும்ப பெற தனி கணக்கையும் பயன்படுத்தலாம். இதன் மூலம் உங்களுடைய பணம் எங்கு செல்கிறது? எதற்காக பயன்படுத்தப்பட்டது? எங்கிருந்து வந்துள்ளது? என்ற விவரங்களை தனித்தனியாக தெரிந்து கொள்ள முடியும்.
தொழில்நுட்ப கோளாறு: இன்றைய டிஜிட்டல் யுகத்தில் வங்கி சேவைகள் பெரும்பாலும் தொழில்நுட்பத்தையே சார்ந்துள்ளது. ஆன்லைன் சாப்ட்வேர்களில் அவ்வப்போது சில பிரச்சனைகளை எதிர் கொள்பவர்களுக்கு இன்னொரு வங்கி உதவியாக இருக்கும். இது போன்ற சூழலில் பல வங்கி கணக்குகளை வைத்திருப்பது ஒரு வங்கியை மட்டும் சார்ந்து இருக்காமல் இன்னொரு வங்கியின் மூலமாகவும் சேவைகளைப் பெற உதவும்.
ஏடிஎம் கட்டணத்தை குறைத்தல்: ஒவ்வொரு வங்கி கணக்குக்கும் ஏடிஎம் கார்டு ப்ரெத்தியேகமாக வழங்கப்படும். ஆனால் ஒரு மாதத்தில் ஒரு வங்கியின் ஏடிஎம்களில் இருந்து பணம் எடுப்பதற்கு வரம்பு இருக்கும். அதை மீறி பணம் எடுக்கும் பட்சத்தில் வங்கிகள் சேவை கட்டணங்களை வசூலிக்கலாம். பல வங்கி கணக்குகளை வைத்திருக்கும் போது ஒவ்வொரு வங்கியிலும் மாதத்திற்கு குறிப்பிட்ட வரம்பு இருக்கும். இதன் மூலம் கட்டணம் ஏதுமின்றி பரிவர்த்தனை செய்ய முடியும்.
பல வங்கி கணக்குகளை வைத்திருப்பதால் ஏற்படும் தீமைகள்:
குறைந்தபட்ச இருப்பை பராமரித்தல்: ஒவ்வொரு வங்கிக் கணக்கிற்கும் நீங்கள் குறைந்தபட்ச அல்லது சராசரி இருப்பை வைத்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் அபராதம் அல்லது கட்டணங்கள் விதிக்கப்படலாம். ஒவ்வொரு கணக்குக்கும் இந்த பேலன்ஸ் தேவைகளைப் பூர்த்தி செய்வது சவாலானதாக இருக்கும்.
மோசடி அபாயம்: பல்வேறு வங்கி கணக்குகளை வைத்திருப்பதால் சில வங்கி கணக்குகளை மறந்து அப்படியே விட்டுவிடக்கூடும். இதன் காரணமாக மோசடி செய்பவர்கள் உங்கள் கணக்குகளை தவறாக பயன்படுத்துவதற்கு வாய்ப்புகள் அதிகரிக்கும். ஏனெனில் பயன்பாட்டில் இல்லாத கணக்குகளை குறி வைத்து தான் ஹேக்கர்கள் பல்வேறு மோசடி சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். எனவே உங்களுடைய பயன்படுத்தாத வங்கி கணக்குகளின் அறிக்கைகளை அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும்.
கணக்குகளை நிர்வகிப்பதில் சிக்கல்: பல வங்கிக் கணக்குகளை நிர்வகிப்பது நேரத்தை செலவழிக்கும் விஷயமாக மாறும். பல்வேறு கணக்கு அறிக்கைகளை கண்காணித்தல் தனிப்பட்ட தகவல்களைப் புதுப்பித்தல் என பல்வேறு விஷயங்களை செய்ய வேண்டி இருக்கும்.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications