ஆதார் அடிப்படையிலான மோசடி சம்பவங்கள் சமீப ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. நிதி சேவைகள் மற்றும் அரசாங்க சேவைகளை பெறுவதற்கு ஆதார் கார்டு அவசியம். எனவே இதைப் பயன்படுத்தி மோசடிக்காரர்கள் ஆதார் எண்களை திருடி பண மோசடியில் ஈடுபடுகின்றனர் மற்றும் வங்கி விவரங்களை திருடுவதற்கும் மேம்படுத்தப்பட்ட முறைகளைப் பயன்படுத்துகின்றனர். இதுபோன்ற சம்பவங்களைத் தடுப்பதற்கு மாஸ்க்டு ஆதாரைப் பயன்படுத்தலாம். இந்த பதிவில் மாஸ்க்டு ஆதார் என்றால் என்ன?, இதைப் பயன்படுத்தி எப்படி உங்கள் ஆதார் நம்பரை பாதுகாப்பது? என்ற விவரங்கள் குறித்து பார்ப்போம்.
மாஸ்க்டு ஆதார் என்றால் என்ன?: மாஸ்க்டு ஆதார் என்பது ஒரு தனிநபரின் தனியுரிமையைப் பாதுகாக்கும் டிஜிட்டல் அம்சமாகும். மாஸ்க்டு ஆதார் என்பது உங்களுடைய ஆதார் நம்பரின் முதல் 8 இலக்கங்களை மறைத்து.. கடைசி 4 இலக்கங்கள் மட்டும் காண்பிக்கும். ஆனால் உங்கள் பெயர், புகைப்படம் மற்றும் QR குறியீடு போன்ற விவரங்களில் எந்தவித மாற்றமும் இல்லாமல் இருக்கும். 12 இலக்க ஆதார் நம்பரில் முதல் 8 இலக்கங்களை மறைப்பது மோசடிக்காரர்கள் உங்கள் ஆதார் நம்பரை வைத்து தவறாக பயன்படுத்துவதைத் தடுக்கும்.

உதாரணமாக உங்களுடைய மாஸ்க்டு ஆதார் கார்டு வெர்ஷனை டவுன்லோட் செய்தால் அதில் முதல் 8 நம்பருக்கு பதிலாக "X" என்ற எழுத்து குறிப்பிடப்பட்டிருக்கும். கடைசி நான்கு நம்பர் மட்டுமே தெரியும்.
மாஸ்க்டு ஆதாரை ஏன் பயன்படுத்த வேண்டும்?: இந்த மாஸ்க்டு ஆதாரை பயன்படுத்துவதன் மூலம் மோசடி அபாயத்தை குறைக்க முடியும். மேலும் உங்களுடைய முக்கியமான தகவல்களை பாதுகாப்பாக வைத்திருக்க முடியும். அடையாளச் சரி பார்ப்பதற்காக பெரும்பாலான நிறுவனங்கள் ஆதார் கார்டை கேட்கின்றன. இதுபோன்ற சமயங்களில் மாஸ்க்டு ஆதாரை பயன்படுத்தலாம். முழு ஆதார் நம்பரையும் வழங்குவதற்கு பதிலாக மாஸ்க்டு ஆதாரை வழங்குவதன் மூலம் கடைசி 4 இலக்கங்கள் மட்டுமே காண்பிக்கப்படும்.
மாஸ்க்டு ஆதாரை எவ்வாறு பயன்படுத்துவது?: UIDAI-இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நீங்கள் மாஸ்க்டு ஆதாரை PDF-ஆக டவுன்லோட் செய்து கொள்ளலாம். டவுன்லோட் செய்தவுடன் ஆதார் கார்டு தேவைப்படும் இடங்களில் எல்லாம் மாஸ்க்டு ஆதாரை பிரிண்ட் செய்து வைத்து பயன்படுத்த முடியும். உங்கள் ஆதார் விவரங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதை இது தடுக்கும்.
மாஸ்க்டு ஆதார் எல்லா இடங்களிலும் செல்லுபடியாகுமா?: ஆதார் நம்பர் தேவைப்படும் எல்லா இடங்களிலும் செல்லுபடியாகும். அரசாங்க மானியங்கள், KYC செயல்முறை போன்ற சில முக்கியமான விஷயங்களைத் தவிர அடையாளச் சான்றாக பல்வேறு இடங்களிலும் மாஸ்க்டு ஆதாரைப் பயன்படுத்தலாம்.
மாஸ்க்டு ஆதாரை டவுன்லோட் செய்வது எப்படி?:
ஸ்டெப் 1: முதலில் https://uidai.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ UIDAI இணையதளத்தைப் பார்வையிடவும்.
ஸ்டெப் 2: "My Aadhaar" பிரிவின் கீழ் "Download Aadhaar" என்பதைக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 3: தற்போது வரும் புதிய பக்கத்தில், 12 இலக்க ஆதார் நம்பர் அல்லது 16 இலக்க விர்ச்சுவல் ஐடியை (VID), தேவையான பிற விவரங்களுடன் என்டர் செய்யுங்கள்.
ஸ்டெப் 4: "Select your preference" என்ற பிரிவில், "Masked Aadhaar" என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும்.
ஸ்டெப் 5: உங்கள் ஆதார் கார்டுடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு OTP பெறுவதற்கான ஆப்ஷனைக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 6: வெரிஃபிகேஷன் செயல்முறையை முடிப்பதற்கு OTP-ஐ என்டர் செய்யுங்கள். அதன் பின்னர் மாஸ்க்டு ஆதார் கார்டு PDF வடிவத்தில் பதிவிறக்கம் செய்ய கிடைக்கும். இது பாஸ்வோர்ட் ஆல் பாதுகாக்கப்பட்டிருக்கும். உங்களுடைய டேட் ஆப் பர்த் பாஸ்வேர்டை என்டர் செய்வதன் மூலம் பிடிஎப்-ஐ திறந்து பார்க்கலாம்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications